அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1996, 1997 & 1998ஆம் ஆண்டுகளில் இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.
 அரசாணை எண்: 413 நாள்: 04 - 11 - 2010
.
- முகப்பு
 - தலைப்புகள்
 - மாநில பொறுப்பாளர்கள்
 - மாவட்ட நிர்வாகிகள்
 - இயக்க நடவடிக்கைகள்
 - மாநில மாநாடு - 2007
 - 'நமது முழக்கம்' மின்னிதழ்
 - பள்ளி நாள்காட்டி 2016 - 17
 - படிவங்கள்
 - தமிழ்நாடு கல்வி விதிகள்
 - துறைத் தேர்வுகள்
 - அரசாணைகள்
 - எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
 - இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
 - தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
 
29.12.10
26.12.10
தமிழகத்தில் மேலவை தேர்தல் நடக்குமா? தேர்தல் நெருங்குவதால் வாய்ப்பு குறைவு
 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், மேலவைக்கான தேர்தலை  நடத்துவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. சட்டசபை தேர்தல்  முடிவுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேலவை தேவையா என்பதையும்,  தேர்தல் நடத்துவது குறித்தும் புதிய ஆட்சியாளர்களே முடிவு செய்ய வேண்டிய  நிலை ஏற்படும். இதனால், தமிழகத்தில் மேலவை அமையுமா என்ற சந்தேகம்  எழுந்துள்ளது. 
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க, கடந்த மே மாதம் சட்டசபையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. மத்திய அரசும் அதை ஏற்றது. தொடர்ந்து, பார்லிமென்ட்  ஒப்புதலும், ஜனாதிபதியின் ஒப்புதலும் அடுத்தடுத்து கிடைத்தன. இதையடுத்து,  ஜூலையே, மேலவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் துவக்கியது.சட்டசபை  தேர்தல் போல அல்லாமல், புதிதாக ஆசிரியர்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி  பிரதிநிதிகள் தொகுதிகள் பிரித்தல், அதற்கேற்ப வாக்காளர் பட்டியல்  தயாரித்தல், அதற்கான அவகாசம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் இதில்  மேற்கொள்ள வேண்டியிருந்தது.கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டு, விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கான அவகாசமும்  அளிக்கப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு,  டிசம்பர் 16ம் தேதியுடன், பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு  முடிவடைந்தது.
இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல், வரும் ஜனவரி 20ம் தேதி  வெளியிடப்படுமென தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிட்ட பின், ஓட்டுச்சாவடிகள் முடிவு செய்தல், தேர்தலுக்கான அட்டவணை  தயாரித்தல், மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்குதல், பிரசாரத்துக்கு அவகாசம்  வழங்குதல், அதன்பின் ஓட்டெடுப்பு நடத்துதல், ஓட்டு எண்ணிக்கை நடத்துதல்  போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ஜனவரி 20ம் தேதிக்கு பின், இப்பணிகளை  மேற்கொண்டால், மேலவைக்கான தேர்தலை ஏப்ரலில் தான் நடத்த முடியும். ஆனால்,  தமிழக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தியாக  வேண்டும். இதில், தேர்தல் கமிஷனும், மாநில நிர்வாகமும் தீவிர கவனம் செலுத்த  வேண்டும்.எனவே, மேலவை தேர்தலில் தேர்தல் கமிஷனும், அரசு நிர்வாகமும் கவனம்  செலுத்த வாய்ப்பில்லை. 
மேலும், சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரி கடைசி அல்லது மார்ச்  முதல் வாரம் வெளியிடப்பட்டு விடும். அவ்வாறு வெளியான பின், தற்போதுள்ள  எம்.எல்.ஏ.,க்களின் அதிகாரமும் குறைந்து விடும்.எனவே, பதவி முடியும்  தறுவாயில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டு மேலவை உறுப்பினர்களை  தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், மற்ற தேர்தலை போல மேலவை  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறாது. காரணம்,  மேலவை தேர்தலுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓட்டளிக்க வேண்டும்.அதாவது,  தனது முதலாவது ஓட்டு யாருக்கு, இரண்டாவது ஓட்டு யாருக்கு, மூன்றாவது ஓட்டு  யாருக்கு என்ற வரிசையில், வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். அவ்வாறு ஓட்டு  போடுவதற்கு வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இதுதவிர, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி  அளிக்கப்பட வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு  வந்தாலும், ஓட்டு எண்ணிக்கை பற்றிய பயிற்சி மிகவும் அவசியமானதாகும்.  முன்னுரிமை அடிப்படையிலான ஓட்டுகளை எப்படி எண்ணுவது என்ற பயிற்சி,  தற்போதுள்ள ஊழியர்களுக்கு கிடையாது. எனவே, அதுபற்றி விரிவான பயிற்சி  அவசியமாகிறது.இவற்றை எல்லாம் கணக்கிட்டால், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக  மேலவை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, அடுத்த மே மாதம் புதிய  அரசு அமைந்த பின், மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  நடைபெறும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேலவை அவசியமா என்பது பற்றியும்,  மேலவை தேர்தலை நடத்த வேண்டுமா என்பது பற்றியும், புதிய அரசு தான் முடிவு  செய்யும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய சட்டசபையில் புறக்கணிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, மேலவையில்  வசதி செய்யப்பட்டுள்ளது.புதிய தலைமைச் செயலக வளாகம் அமைந்த போது, அதுபற்றி  விவரித்த முதல்வர் கருணாநிதி, ஒவ்வொரு வட்டமும் நாட்டின் ஒவ்வொரு தூண்  என்றார். ஆனால், நாட்டின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகைகள்  பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு காரணம், புதிய சட்டசபை வளாகம் துவக்கப்பட்ட  பின் தான் தெரிந்தது.நான்காவது தூணான பத்திரிகைகள் இதில்  புறக்கணிக்கப்பட்டன. மிகவும் உயரமான மேல்தளத்தில், ஆளுங்கட்சிக்கு  முதுகுபுறத்தில் பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  அங்கிருந்து பாதியளவு கூட சட்டசபை தெரியவில்லை. 
இதுபற்றி முறையிட்டதும், முதல்வரே மூன்று முறை மேலே வந்து,  அங்கிருந்தபடி சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்தார்.அப்போதும் அதிகாரிகள்,  பத்திரிகையாளர் மாடத்தை கீழே மாற்றலாம் என்று கூறாமல், தற்போது உள்ள  இடத்திலேயே, கண்ணாடி போட்டு, சுவரை இடித்தால், சட்டசபை முழுமையாக தெரியும்  என்று விளக்கினர். கண்ணாடிக்குள் இருந்தபடி அரைகுறையாக சட்டசபை  நிகழ்ச்சிகளை பார்த்தாலும், ஆளும் வரிசையில் இருப்பவர்களது பேச்சுக்களை  "டிவி' திரையின் மூலம் தான் பார்க்கும் நிலை இருந்தது.வருங்காலத்தில்,  சட்டசபைக்கு வெளியே பத்திரிகையாளர்களை நிறுத்தி, "டிவி'யில் நிகழ்ச்சிகளை  பார்த்து கொள்ளுபடி கூறினாலும் ஆச்சரியமில்லை என, மூத்த பத்திரிகையாளர்கள்  அப்போது தெரிவித்தனர். பத்திரிகையாளர் மாடத்திலேயே பார்வையாளர்களுக்கும்  இடம் ஒதுக்கப்பட்டிருந்தால், நிகழ்ச்சிகள் பற்றி செய்தி சேகரிப்பதில்,  மிகவும் சிரமம் ஏற்பட்டது.
மேலும், செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் மாறும் போது, வெளியே  காத்திருப்பவருக்கு உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையும் இருந்தது.  அடிக்கடி மேலேயும், கீழேயும் என இரண்டு தளங்கள் ஏறி இறங்க வேண்டிய  நிலையில் இருந்தனர்.இந்நிலையில், மேலவை தற்போது தயாராகி உள்ளது. இந்த  மேலவையில், மேல் தளத்தில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை என்பதால், கீழேயே  பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில்  புறக்கணிக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு, மேலவையில் இடம் ஒதுக்கியிருந்தது  சற்று ஆறுதலான விஷயம்.எனினும், தற்போதைக்கு மேலவை அமைவதற்கான வாய்ப்பு  குறைந்துள்ளதால், இந்த ஆட்சியில், மேலவையில் செய்தி சேகரிக்க முடியாத  வருத்தமும், பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நன்றி:
அரசு உதவிபெறும் பள்ளிகள் விஷயத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் உண்டு: உயர் நீதிமன்றம்
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்று அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை முறைப்படுத்த வேண்டியுள்ளது. அதுவரை அந்தப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து அந்தப் பள்ளிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தனி நீதிபதி அரசின் உத்தரவுக்கு தடை விதித்தார். இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி. வில்சன் கூறியது: அரசின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர் சம்பளம் போன்றவற்றை அரசு வழங்குகிறது. அங்கு நடைபெறும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் தலையிட அரசுக்கு உரிமை உள்ளது. அந்தப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த அந்தப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அதிகாரம் உள்ளது. எனவே, இது போன்ற சுற்றறிக்கைகளை அனுப்ப அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது:
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த அந்தப் பள்ளிகளுக்கு அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவே, அரசு தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நன்றி:
தலைப்புகள்:
நாளிதழ் செய்திகள்,
நீதி மன்ற தீர்ப்புகள்
19.12.10
18.12.10
ஈடுசெய் விடுப்பு - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தெளிவுரை
அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 நாள்கள் ஈடுசெய் விடுப்பு  எடுக்க அனுமதி உண்டு.
 
16.12.10
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்க முயற்சி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே முடக்கக் கூடும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  
2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை டிசம்பர் 27-ம் தேதிக்குள் usrti-dopt@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தங்கள்:
இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மேலும், 250 வார்த்தைகளுக்குள் தகவல்களைக் கோர வேண்டும் என்பதும் பொருத்தமில்லாதது என்றும், பெரும்பாலான தகவல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகியும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான எஸ். சம்பத் கூறியது:
தகவல் சேகரிக்க செலவான தொகையைச் செலுத்த வேண்டும்; கூடுதல் தபால் செலவை செலுத்த வேண்டும் என்ற காரணங்களைக் கூறி மனுதாரர்களை அலைக்கழிக்கவே இந்தத் திருத்தங்கள் உதவும். மனுதாரர் மிரட்டப்பட்டு, விசாரணையில் ஆஜராகாவிட்டாலும் கூட, அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து, முடிவை அறிவிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றால், விசாரணை நடைபெறத் தேவையில்லை என்று இப்போது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதிக்க சக்திகளால் மனுதாரர்கள் மிரட்டப்பட்டு, மனுக்களை வாபஸ் பெறச் செய்யும் சம்பவங்கள் இனி நிறைய நடைபெறலாம். முதல் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு தெரிந்து, இரண்டாவது மேல் முறையீடு செய்ய இப்போது 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை 45 நாள்களாக குறைப்பதன் மூலம் மேல் முறையீட்டுக்கான வாய்ப்புகளை அரசு குறைக்கிறது. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன என்றார் சம்பத்.
மக்கள் சக்தி கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான சிவ. இளங்கோ கூறியது:
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துள்ளது. அவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு குறைவான மக்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் நிலையிலேயே, பல அரசுத் துறைகளின் மிக மோசமான செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன. எனவே, இப்போது பயன்படுத்தும் மிகக் குறைவான மக்கள் கூட இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாத வகையில், மத்திய அரசு சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்தாக வேண்டும். எனவே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, இந்தத் திருத்தங்களை தடுப்பதற்கான போராட்டங்களை நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் சிவ. இளங்கோ.
நன்றி:
2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை டிசம்பர் 27-ம் தேதிக்குள் usrti-dopt@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய திருத்தங்கள்:
- தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும்.
 - தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
 - விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.
 - தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.
 - மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.
 - மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.
 - முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.
 
இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மேலும், 250 வார்த்தைகளுக்குள் தகவல்களைக் கோர வேண்டும் என்பதும் பொருத்தமில்லாதது என்றும், பெரும்பாலான தகவல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகியும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான எஸ். சம்பத் கூறியது:
தகவல் சேகரிக்க செலவான தொகையைச் செலுத்த வேண்டும்; கூடுதல் தபால் செலவை செலுத்த வேண்டும் என்ற காரணங்களைக் கூறி மனுதாரர்களை அலைக்கழிக்கவே இந்தத் திருத்தங்கள் உதவும். மனுதாரர் மிரட்டப்பட்டு, விசாரணையில் ஆஜராகாவிட்டாலும் கூட, அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து, முடிவை அறிவிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றால், விசாரணை நடைபெறத் தேவையில்லை என்று இப்போது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதிக்க சக்திகளால் மனுதாரர்கள் மிரட்டப்பட்டு, மனுக்களை வாபஸ் பெறச் செய்யும் சம்பவங்கள் இனி நிறைய நடைபெறலாம். முதல் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு தெரிந்து, இரண்டாவது மேல் முறையீடு செய்ய இப்போது 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை 45 நாள்களாக குறைப்பதன் மூலம் மேல் முறையீட்டுக்கான வாய்ப்புகளை அரசு குறைக்கிறது. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன என்றார் சம்பத்.
மக்கள் சக்தி கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான சிவ. இளங்கோ கூறியது:
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துள்ளது. அவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு குறைவான மக்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் நிலையிலேயே, பல அரசுத் துறைகளின் மிக மோசமான செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன. எனவே, இப்போது பயன்படுத்தும் மிகக் குறைவான மக்கள் கூட இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாத வகையில், மத்திய அரசு சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்தாக வேண்டும். எனவே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, இந்தத் திருத்தங்களை தடுப்பதற்கான போராட்டங்களை நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் சிவ. இளங்கோ.
நன்றி:
15.12.10
மேலவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16-ம் தேதி கடைசி
சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாகும். 
முன்னதாக, டிசம்பர் 17-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் "மொஹரம்' பண்டிகைக்காக பொது விடுமுறை விடப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் தகுதியுள்ள பட்டதாரிகள், ஆசிரியர்கள் முறையே படிவம் 18 அல்லது படிவம் 19-ல் விண்ணப்பிக்கலாம்.
நன்றி:
 
முன்னதாக, டிசம்பர் 17-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் "மொஹரம்' பண்டிகைக்காக பொது விடுமுறை விடப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் தகுதியுள்ள பட்டதாரிகள், ஆசிரியர்கள் முறையே படிவம் 18 அல்லது படிவம் 19-ல் விண்ணப்பிக்கலாம்.
நன்றி:
14.12.10
மக்கள் தொகை கணக்கெடுப்பு - டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான முதற்கட்ட பணிகள்  நிறைவடைந்துள்ளன. வீட்டுப்பட்டியல் தயாரிப்பு மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு  பணிகள் முடிந்துள்ளன. 
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப்., 9 ல் துவங்கி 28 வரை நடக்கிறது. 28 ல் வீடற்றோர், தெருவோரங்களில் வாழ்வோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மார்ச் 1 முதல் 5 வரை கணக்கெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பிறப்பு இறப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மக்கள் தொகை விவரம் அறிவிக்கப்படும்.
கணக்கெடுப்பு குறித்து, தலைமை பயிற்சியாளர்களுக்கு டிச., 14 முதல் 16 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கின்றனர்.
மூன்றாம் கட்ட பயிற்சியின் போது, கணக்கெடுப்பு படிவங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும், கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதன்முறையாக பிப்., 6 ல் துவங்கி, 8 வரை கணக்கெடுப்பாளர்களுக்கு தங்கள் கணக்கெடுப்பு பகுதிகளை சரிபார்க்க விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அரை நாள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் கணக்கெடுப்பு பகுதியை, வீட்டு பட்டியல் புத்தகத்தில் உள்ளவாறு உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனடியாக திருத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப்., 9 ல் துவங்கி 28 வரை நடக்கிறது. 28 ல் வீடற்றோர், தெருவோரங்களில் வாழ்வோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மார்ச் 1 முதல் 5 வரை கணக்கெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பிறப்பு இறப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மக்கள் தொகை விவரம் அறிவிக்கப்படும்.
கணக்கெடுப்பு குறித்து, தலைமை பயிற்சியாளர்களுக்கு டிச., 14 முதல் 16 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கின்றனர்.
மூன்றாம் கட்ட பயிற்சியின் போது, கணக்கெடுப்பு படிவங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும், கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதன்முறையாக பிப்., 6 ல் துவங்கி, 8 வரை கணக்கெடுப்பாளர்களுக்கு தங்கள் கணக்கெடுப்பு பகுதிகளை சரிபார்க்க விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அரை நாள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் கணக்கெடுப்பு பகுதியை, வீட்டு பட்டியல் புத்தகத்தில் உள்ளவாறு உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனடியாக திருத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:
தலைப்புகள்:
நாளிதழ் செய்திகள்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு
ஓட்டு சீட்டு மூலம் தமிழக சட்ட மேலவை தேர்தல்
சட்ட மேலவை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒட்டுச் சாவடிகளில் வீடியோ மூலம்  கண்காணிப்பு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணைய ஆலோசகர் பிரம்மம்  தெரிவித்தார். 
தமிழ்நாடு சட்ட மேலவை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு  எண்ணிக்கை தொடர்பான நெல்லை, குமரி மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு  நெல்லையில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணைய  முன்னாள் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலக ஆலோசகர்  பிரம்மம் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி  அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது: 
தமிழக சட்டசபை மேலவை தேர்தலுக்கு  வாக்காளர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. வரும் 17ம் தேதிக்குள்  வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி  வெளியிடப்படுகிறது. மேல்சபை தேர்தலில் பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர்கள்  தொகுதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் தொகுதி, எம்.எல்.ஏக்கள் தொகுதி இடம்  பெறுகிறது. சட்ட பேரவை தேர்தலை போன்று இதற்கும் அனைத்து விதிமுறைகளும்  பொருந்தும். 
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வேலூர், தர்மபுரி, சேலம், கோவை,  திருப்பூர், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) விருதுநகரிலும், தொடர்ந்து மதுரை,  புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் பயிற்சி  அளிக்கப்படுகிறது. 
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஓட்டுச் சாவடிகளில் ஒவ்வொரு  ஓட்டுச் சாவடிக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் நியமித்து ஓட்டுப்பதிவு  முழுவதையம் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். பிற ஓட்டுச் சாவடிகளை  பொறுத்தவரை பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் இதுபோன்ற நடைமுறையை  பயன்படுத்தலாம். 
- ஓட்டுச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படும்.
 - செல்போன், காமிரா ஆகியவை ஓட்டுச் சாவடிக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
 - ஓட்டுப்பதிவில் ஈடுபடும் ஊழியர்கள் தவிர பிறர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
 - ஓட்டுச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் பிரசாரம் செய்யவோ, போஸ்டர் ஒட்டவோ அனுமதி கிடையாது.
 
இவ்வாறு அவர்  கூறினார். 
தொடர்ந்து மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு ஓட்டு எண்ணும் முறை  குறித்தும் விளக்கப்பட்டது. இதில் கலெக்டர் ஜெயராமன், டி.ஆர்.ஓ ரமண  சரஸ்வதி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவ ராவ், பயிற்சி சப்-கலெக்டர்  கிரண் குராலா, ஆர்.டி.ஓக்கள் தமிழ்செல்வி, சேதுராமன், கலெக்டரின் நேர்முக  உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜ ஜெயபாலா, தேர்தல் தாசில்தார்கள் நெல்லை  ராமச்சந்திரன், கன்னியாகுமரி அய்யப்பன் உட்பட அனைத்து தாசில்தார்களும்  கலந்து கொண்டனர்.
நன்றி:
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RHL) - 2011
மாதம்  |    நாள்  |    கிழமை  |    விழாக்கள்  |   
ஜனவரி  |    14  |    வெள்ளி | போகி  |   
20  |    வியாழன்  |    தைபூசம்  |   |
பெப்ருவரி  |    18  |    வெள்ளி  |    மாசி   மகம்  |   
மார்ச்  |    02  |    புதன்  |    மகா   சிவராத்திரி  |   
09  |    புதன்  |    சாம்பல்   புதன்  |   |
ஏப்ரல்  |    17  |    ஞாயிறு  |    சித்ரா   பௌர்ணமி   |   
21  |    வியாழன்  |    பெரிய   வியாழன்  |   |
மே  |    17  |    செவ்வாய்  |    புத்த   பூர்ணிமா  |   
ஜூன்  |    29  |    புதன்  |    ஷபே   மீராஜ்  |   
ஜுலை  |    16  |    சனி  |    ஷபே   பாரத்  |   
ஆகஸ்ட்  |    02  |    செவ்வாய்  |    ரம்ஜான்   முதல் நாள்  |   
03  |    புதன்  |    ஆடிப்பெருக்கு  |   |
12  |    வெள்ளி     |    வரலட்சுமி   விருதம்  |   |
13  |    சனி  |    ரிக்   உபகர்மா, யஜுர் உபகர்மா  |   |
14  |    ஞாயிறு  |    காயத்திரி   ஜெபம்  |   |
27  |    சனி  |    ஷபே   காதர்  |   |
செப்டம்பர்  |    01*  |    வியாழன்  |    சாம   உபகர்மா  |   
09  |    வெள்ளி  |    ஓணம்,     |   |
அக்டோபர்  |    27  |    வியாழன்  |    தீபாவளி   நோன்பு  |   
நவம்பர்  |    02  |    புதன்  |    அனைத்து   ஆன்மாக்களின் தினம்  |   
06  |    ஞாயிறு  |    அரபா   தினம்  |   |
10  |    வியாழன்  |    குருநானக்   ஜெயந்தி  |   |
27  |    ஞாயிறு  |    ஹிஜிரி   வருடப்பிறப்பு  |   |
டிசம்பர்  |    08  |    வியாழன்  |    கார்த்திகை   தீபம்   |   
21  |    புதன்  |    வைகுண்ட   ஏகாதசி  |   |
24  |    சனி  |    கிறிஸ்துமஸ்   ஈவ்  |   |
31  |    சனி  |    நியு   இயர் ஈவ்  |   |
கியார்வீன்   முகைதீன் அப்துல் காதர்  |   |||
அருத்ரா   தர்ஷன்  |   
9.12.10
உட்படுத்துதல் கோரிக்கை - திரு. ஜி. எம். ஷா அவர்களுடன் சந்திப்பு
இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்துதல் தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு திமுக சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் திரு. ஜி. எம். ஷா அவர்களை சந்தித்து தஇஆச கன்னியாகுமரி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
 
ஈட்டிய விடுப்பு - தெளிவுரை
தனியார் பள்ளியில் பணிபுரிந்து, பின்னர் அரசு பணியில் சென்றவர்  முந்தைய பணிக்காலத்தில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பினை அனுபவித்தல் தொடர்பான தகவல்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்
8.12.10
மேலவைத் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சம் ஆசிரியர்கள்
மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற 96 ஆயிரம் ஆசிரியர்களும் 4.82 லட்சம் பட்டதாரிகளும், விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மேலவை தேர்தலுக்கான பட்டதாரிகள் தொகுதிகள் மற்றும் ஆசிரியர்  தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள்  அளிக்க கால அவகாசம் டிசம்பர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, விண்ணப்பித்தவர்களது பெயர்கள்  பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர்  பட்டியல் இம்மாதம் 29ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 
இந்நிலையில், மேலவை  தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க கடந்த 5ம் தேதி தமிழகம்  முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன்படி, கடந்த 5ம் தேதி வரை  ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 88 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். ஏற்கனவே,  அளிக்கப்பட்ட அவகாசத்தின் போது விண்ணப்பித்த மூன்று லட்சத்து 13 ஆயிரத்து  662 பட்டதாரிளுடன் சேர்த்து, மொத்தம் நான்கு லட்சத்து 82 ஆயிரத்து 750 பேர்  விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான நேற்று விண்ணப்பித்தவர்களையும்  சேர்த்தால், ஐந்து லட்சம் பட்டதாரிகள் தான் பட்டியலில் இடம் பெறுவர்.
இதுதவிர, ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற, தற்போது  25 ஆயிரத்து 850 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பித்த 70  ஆயிரத்து 923 ஆசிரியர்களையும் சேர்த்து, 96 ஆயிரத்து 773 பேர்  விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான நேற்று விண்ணப்பித்தவர்களையும்  சேர்த்தால், மொத்தமே ஒரு லட்சம் ஆசிரியர்கள் தான் பட்டியலில் இடம் பெறுவர். 
சிறப்பு முகாம் நடத்தப்பட்ட 5ம் தேதியன்று, தமிழகம் முழுவதும் பரவலாக மழை  பெய்ததால் அதிகளவு பட்டதாரிகளும், ஆசிரியர்களும் விண்ணப்பிக்கவில்லை. 
இதுவரை, சென்னை பட்டதாரி தொகுதிக்கு 22 ஆயிரத்து 537 பேரும், ஆசிரியர்  தொகுதிக்கு 2,873 பேரும், தமிழ்நாடு வடக்கு பட்டதாரி தொகுதிக்கு 17  ஆயிரத்து 15 பேரும், 2,590 ஆசிரியர்களும், தமிழ்நாடு வடமத்திய தொகுதிக்கு  29 ஆயிரத்து 726 பட்டதாரிகளும், 4,019 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். மேற்கு தமிழ்நாடு தொகுதிக்கு, 23 ஆயிரத்து 38 பட்டதாரிகளும், 6,686  ஆசிரியர்களும், கிழக்கு மத்திய தொகுதிக்கு 28 ஆயிரத்து 873 பட்டதாரிகளும்,  3,677 ஆசிரியர்களும், தென்மத்திய தொகுதிக்கு 23 ஆயிரத்து 694  பட்டதாரிகளும், 2,650 ஆசிரியர்களும், தெற்கு தொகுதிக்கு 24 ஆயிரத்து 205  பட்டதாரிகளும், 3,355 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். 
மேலவை தேர்தலுக்கு மாவட்டங்களில் பயிற்சி:
ஒவ்வொரு  மாவட்டத்திலும், ஆறு அதிகாரிகளுக்கு, ஆந்திராவில் மேலவை தேர்தல் அதிகாரியாக  பணியாற்றிய பிரம்மம், கடந்த 2ம் தேதி முதல் பயிற்சி அளிக்கிறார். இந்த ஆறு  பேரும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பர்.  இதுதவிர, ஓட்டு எண்ணிக்கைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நன்றி: 
மேலவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால நீட்டிப்பு
சட்ட மேலவைக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,  செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த பெயர் சேர்ப்புப்  பணிகள், டிசம்பர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில்  சட்ட மேலவைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிரியர் மற்றும்  பட்டதாரிகள் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயார்  செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வரைவு  வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில்,  பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளைச் செய்வதற்கான  காலக்கெடு டிசம்பர் 7-ம் தேதி என அறிவிக்கப்பட்டு, அதன்படி  செவ்வாய்க்கிழமையுடன் பணிகள் முடிவடைதாக இருந்தது. 
கனமழை காரணமாக... 
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக பெயர் சேர்ப்புப்  பணிகளை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டித்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்  மூலமாக, பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில்  சேர்க்கப்படும் பெயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 
நன்றி:
7.12.10
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை எதிரொலி : அரையாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல்
மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, 11  மாவட்டங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால்,  அரையாண்டுத் தேர்வுகளை குறித்த தேதியில் முடிக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.
  
 
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.  குறிப்பாக, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி,  ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால், இம்மாவட்டங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  இம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, மாவட்ட  நிர்வாகங்கள் அடிக்கடி விடுமுறை அறிவித்து வருகின்றன. கடலூர், நாகை  உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறை விடப்பட்டன.  நேற்றும் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இப்படி, பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை விடப்பட்டு வருவதால், பள்ளிகளில்  நடக்கும் அரையாண்டுத் தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
தனியார் பள்ளிகளில், கடந்த மாத இறுதியில் இருந்தும், இம்மாத  துவக்கத்தில் இருந்தும் இரண்டு கட்டங்களாக அரையாண்டுத் தேர்வுகள் நடந்து  வருகின்றன. மழையால் விடுமுறை விடப்பட்டால், அன்று நடக்கும் தேர்வுகள்,  சனிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்படுகின்றன. இதேபோல், பல தேர்வுகள் தள்ளி  வைக்கப்பட்டு, நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், 20ம் தேதிக்குள்  அனைத்து தேர்வுகளையும் முடிக்கும் வகையில், அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால், விடுமுறை காரணமாக, மேலும் ஒரு வாரம் தேர்வுகள் தள்ளிப்போகும் நிலை  ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், தேர்வுப்  பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில், அந்தந்த மாவட்ட  முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும்  பொதுத்தேர்வாக, அரையாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. சென்னை மாவட்டத்தில்,  வரும் 13ம் தேதி முதல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2  மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில்  தொடர்ந்து மழை பெய்தால், 9ம் தேதி முதல் நடக்க வேண்டிய தேர்வுகளில்  பாதிப்பு ஏற்படும்.
நன்றி: 
3.12.10
8ம் வகுப்புக்கு நிதி சார்ந்த பாடம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்
நிதி சார்ந்த பாடத்திட்டம் வரும் கல்வியாண்டிலிருந்து எட்டாம் வகுப்பு,  பிளஸ் 1  மாணவர்களுக்கு  அறிமுகப்படுத்தப்படுகிறது. 
சமச்சீர் கல்வி முறையில்  கூடுதல் பாடமான இதில் எட்டாம் வகுப்புக்கு  நிதி மேலாண்மை, பிளஸ் 1க்கு  "நிதித்துறையும், மார்க்கெட்டும்" என்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  பணம் பற்றிய விளக்கம், வருமானம், செலவு, சேமிப்பு, வங்கிகள், இவற்றின்  செயல்பாடுகள், மார்க்கெட்  விவரங்கள் உள்ளன. 
முதல் முறையாக  அறிமுகப்படுத்தப்படுவதால் இதுகுறித்து சில ஆசிரியர்களுக்கு சென்னையில்  பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி  அளிக்க உள்ளனர். 
இதற்கென தனியாக ஒரு பாடவேளை ஒதுக்கப்படுகிறது. 
நன்றி:
சென்சஸ்-2011 முதல்கட்ட பணி உழைப்பூதியத்திற்கு ரூ. 62 கோடி : ஒரு வாரத்திற்குள் பட்டு வாடா
தமிழகத்தில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில்(சென்சஸ்-2011)  ஈடுபட்ட பணியாளர்களுக்கு உழைப்பூதியமாக ரூ. 62 கோடியை மத்திய அரசு  ஒதுக்கியுள்ளது. 
கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை சென்சஸ் பணி நடந்தது.  கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர், தலைமை பயிற்சியாளர். பொறுப்பு அலுவலர்  என்ற 4 வகையில் அரசு ஊழியர்கள் இப்பணி மேற்கொண்டனர். வீட்டு பட்டியல்  தயாரிப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு, பயிற்சி வகுப்பில்  பங்கேற்பு என்ற அடிப்படையில் உழைப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர்களுக்கு தலா ரூ. 4,450ம்,  பயிற்சியாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 50ம், பொறுப்பு அலுவலர்களுக்கு ரூ. 4  ஆயிரமும் உழைப்பூதியம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் சென்சஸ்  பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு உழைப்பூதியம் தருவதற்காக ரூ. 62.23 கோடியை  அரசு ஒதுக்கியுள்ளது. இத்தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழியாக  தாசில்தார்/கமிஷனர்கள் மூலம் ஒருவாரத்திற்குள் பட்டுவாடா செய்ய  உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: 
தலைப்புகள்:
நாளிதழ் செய்திகள்,
மக்கள் தொகை கணக்கெடுப்பு
மேலவை: வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல்/நீக்கல் 5-12-2010 (ஞாயிறு) சிறப்பு முகாம்கள்
தமிழக சட்ட மேலவைத்  தேர்தலுக்கான ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளின் வாக்காளர்  பட்டியல்களில் பெயர் சேர்க்க வரும் 7-ம் தேதி கடைசி நாளாகும். 
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:
தமிழ்நாடு  சட்ட மேலவையின் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளின் வாக்காளர்  பட்டியல்களில் பெயர் சேர்த்தல்/நீக்கல் முதலியவற்றுக்கான மனுக்களை அளிக்க  இம்மாதம் 7-ம் தேதி கடைசி நாளாகும். இத்தொகுதிகளில் வாக்காளர்கள் மனுக்களை  அளிக்க வசதியாக 5-12-2010 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எல்லா நிர்ணயிக்கப்பட்ட  அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அன்று நிர்ணயிக்கப்பட்ட  அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். அங்கே  படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். பட்டதாரிகள் மற்றும்  ஆசிரியர்கள் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்கப்பட  தகுதியுள்ள நபர்கள்முறையே படிவம் 18 மற்றும் படிவம் 19 ஆகியவற்றில் தனித்தனியே விண்ணப்பிக்கவேண்டும். 
பட்டதாரிகளின்  சான்றிதழ்களைச் சான்றொப்பமிட கீழ்க்கண்ட அலுவலர்கள் கூடுதல்  நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்: 
- அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள்
 - வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
 - நகராட்சி ஆணையர்கள்
 - நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கப்படாத வட்டாட்சியர்கள்
 - அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்
 - மாநகராட்சிகளிலுள்ள உதவி செயற்பொறியாளர்கள்.
 
படிவம் 18-இல்  விண்ணப்பிக்கும் ஒரு விண்ணப்பதாரர், அத்துடன் சுய சான்றொப்பமிட்டு மேலும்  கூடுதல் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் சான்றொப்பமிடப்பட்ட பட்டச்  சான்றிதழின் நகலை இணைத்து வாக்காளர் பதிவு அதிகாரி / உதவி வாக்காளர் பதிவு  அதிகாரி / நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் தபாலிலோ நேரடியாகவோ  சமர்ப்பிக்கலாம். அப்படிச் சமர்ப்பிக்கும்போது நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம்  அசல் சான்றிதழ்களை காட்டத் தேவையில்லை. வாக்காளர்களின் வசதிக்காக இந்த  வசதி கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம்  விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து சரிபார்ப்புக்காக அசல் சான்றிதழைக் காட்டும்  நடைமுறையும் தொடர்கின்றது.
நன்றி: 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
- 
25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 19ம் தேதி தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்...
 - 
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
 - 
தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்....
 - 
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
 - 
நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.   நாகர்கோவிலை அட...
 - 
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...
 - 
மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவ...
 - 
5757_A2_2012 Deployment All Schools Circular-13.07 Deployment 13.07
 


