தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.12.10

மக்கள் தொகை கணக்கெடுப்பு - டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. வீட்டுப்பட்டியல் தயாரிப்பு மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப்., 9 ல் துவங்கி 28 வரை நடக்கிறது. 28 ல் வீடற்றோர், தெருவோரங்களில் வாழ்வோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மார்ச் 1 முதல் 5 வரை கணக்கெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பிறப்பு இறப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மக்கள் தொகை விவரம் அறிவிக்கப்படும்.

கணக்கெடுப்பு குறித்து, தலைமை பயிற்சியாளர்களுக்கு டிச., 14 முதல் 16 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கின்றனர்.

மூன்றாம் கட்ட பயிற்சியின் போது, கணக்கெடுப்பு படிவங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும், கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதன்முறையாக பிப்., 6 ல் துவங்கி, 8 வரை கணக்கெடுப்பாளர்களுக்கு தங்கள் கணக்கெடுப்பு பகுதிகளை சரிபார்க்க விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அரை நாள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் கணக்கெடுப்பு பகுதியை, வீட்டு பட்டியல் புத்தகத்தில் உள்ளவாறு உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனடியாக திருத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்