சட்ட மேலவைக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,  செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த பெயர் சேர்ப்புப்  பணிகள், டிசம்பர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில்  சட்ட மேலவைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிரியர் மற்றும்  பட்டதாரிகள் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயார்  செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வரைவு  வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில்,  பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளைச் செய்வதற்கான  காலக்கெடு டிசம்பர் 7-ம் தேதி என அறிவிக்கப்பட்டு, அதன்படி  செவ்வாய்க்கிழமையுடன் பணிகள் முடிவடைதாக இருந்தது. 
கனமழை காரணமாக... 
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக பெயர் சேர்ப்புப்  பணிகளை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டித்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்  மூலமாக, பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில்  சேர்க்கப்படும் பெயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக