சட்ட மேலவை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒட்டுச் சாவடிகளில் வீடியோ மூலம்  கண்காணிப்பு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணைய ஆலோசகர் பிரம்மம்  தெரிவித்தார். 
தமிழ்நாடு சட்ட மேலவை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு  எண்ணிக்கை தொடர்பான நெல்லை, குமரி மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு  நெல்லையில் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணைய  முன்னாள் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலக ஆலோசகர்  பிரம்மம் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி  அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது: 
தமிழக சட்டசபை மேலவை தேர்தலுக்கு  வாக்காளர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. வரும் 17ம் தேதிக்குள்  வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி  வெளியிடப்படுகிறது. மேல்சபை தேர்தலில் பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர்கள்  தொகுதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் தொகுதி, எம்.எல்.ஏக்கள் தொகுதி இடம்  பெறுகிறது. சட்ட பேரவை தேர்தலை போன்று இதற்கும் அனைத்து விதிமுறைகளும்  பொருந்தும். 
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வேலூர், தர்மபுரி, சேலம், கோவை,  திருப்பூர், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் பயிற்சி  அளிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) விருதுநகரிலும், தொடர்ந்து மதுரை,  புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் பயிற்சி  அளிக்கப்படுகிறது. 
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஓட்டுச் சாவடிகளில் ஒவ்வொரு  ஓட்டுச் சாவடிக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் நியமித்து ஓட்டுப்பதிவு  முழுவதையம் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். பிற ஓட்டுச் சாவடிகளை  பொறுத்தவரை பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் இதுபோன்ற நடைமுறையை  பயன்படுத்தலாம். 
- ஓட்டுச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படும்.
 - செல்போன், காமிரா ஆகியவை ஓட்டுச் சாவடிக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
 - ஓட்டுப்பதிவில் ஈடுபடும் ஊழியர்கள் தவிர பிறர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
 - ஓட்டுச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் பிரசாரம் செய்யவோ, போஸ்டர் ஒட்டவோ அனுமதி கிடையாது.
 
இவ்வாறு அவர்  கூறினார். 
தொடர்ந்து மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு ஓட்டு எண்ணும் முறை  குறித்தும் விளக்கப்பட்டது. இதில் கலெக்டர் ஜெயராமன், டி.ஆர்.ஓ ரமண  சரஸ்வதி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவ ராவ், பயிற்சி சப்-கலெக்டர்  கிரண் குராலா, ஆர்.டி.ஓக்கள் தமிழ்செல்வி, சேதுராமன், கலெக்டரின் நேர்முக  உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜ ஜெயபாலா, தேர்தல் தாசில்தார்கள் நெல்லை  ராமச்சந்திரன், கன்னியாகுமரி அய்யப்பன் உட்பட அனைத்து தாசில்தார்களும்  கலந்து கொண்டனர்.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக