நிதி சார்ந்த பாடத்திட்டம் வரும் கல்வியாண்டிலிருந்து எட்டாம் வகுப்பு,  பிளஸ் 1  மாணவர்களுக்கு  அறிமுகப்படுத்தப்படுகிறது. 
சமச்சீர் கல்வி முறையில்  கூடுதல் பாடமான இதில் எட்டாம் வகுப்புக்கு  நிதி மேலாண்மை, பிளஸ் 1க்கு  "நிதித்துறையும், மார்க்கெட்டும்" என்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  பணம் பற்றிய விளக்கம், வருமானம், செலவு, சேமிப்பு, வங்கிகள், இவற்றின்  செயல்பாடுகள், மார்க்கெட்  விவரங்கள் உள்ளன. 
முதல் முறையாக  அறிமுகப்படுத்தப்படுவதால் இதுகுறித்து சில ஆசிரியர்களுக்கு சென்னையில்  பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி  அளிக்க உள்ளனர். 
இதற்கென தனியாக ஒரு பாடவேளை ஒதுக்கப்படுகிறது. 
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக