- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
29.4.13
மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி - முதன்மை கல்வி அதிகாரிகள் அனுமதித்து வழங்க ஆணை
பள்ளி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துப்படி கோரும் மனுக்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக பெறப்பட்டு உரிய பரிசீலனைக்கு பின்னர் துறை தலைவர் என்ற நிலையில் பள்ளி கல்வி இயக்குநரால் அதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் போக்குவரத்து படியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிலையிலேயே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் செயல்முறைகளில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரிடம் இருந்து 60 சதவீதத்திற்கு மேலான உடல் ஊனமுற்ற மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை 40 சதவீதம் ஊனமுற்றோர் என மருத்துவ சான்று பெற்றுள்ளவர்களுக்கும் வழங்க அனைத்து துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைத்துள்ள உத்தரவில், "மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி அனுமதிக்கப்பட ஏதுவாக வருவாய் மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகளே அனுமதித்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் போக்குவரத்து படியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிலையிலேயே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் செயல்முறைகளில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரிடம் இருந்து 60 சதவீதத்திற்கு மேலான உடல் ஊனமுற்ற மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை 40 சதவீதம் ஊனமுற்றோர் என மருத்துவ சான்று பெற்றுள்ளவர்களுக்கும் வழங்க அனைத்து துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைத்துள்ள உத்தரவில், "மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி அனுமதிக்கப்பட ஏதுவாக வருவாய் மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகளே அனுமதித்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
.
ஆன்-லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு செய்யலாம்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும்.
தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம். இதற்காக, www.rtionline.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
.
27.4.13
தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம்
25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 19ம் தேதி தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது
தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 2004ம் ஆண்டு முதல் 6,7,8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 1.6.2006ன்படி இந்த பட்டதாரி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றுகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் 6,7,8ம் வகுப்புகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திடாமல் அரசாணை வெளியிட்டதால் ஒரே பணி, இரு வேறு ஊதிய விகிதம் என்ற அவநிலையில் தற்பாது 6,7,8ம் வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடந்த 2007ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 19ம் தேதி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வருவாய், கல்வி மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
.
தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 2004ம் ஆண்டு முதல் 6,7,8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 1.6.2006ன்படி இந்த பட்டதாரி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றுகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் 6,7,8ம் வகுப்புகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திடாமல் அரசாணை வெளியிட்டதால் ஒரே பணி, இரு வேறு ஊதிய விகிதம் என்ற அவநிலையில் தற்பாது 6,7,8ம் வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடந்த 2007ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 19ம் தேதி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வருவாய், கல்வி மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
.
20.4.13
நாகர்கோவிலில் பணிநிறைவு இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - பொதுச் செயலாளர் பங்கேற்பு
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட கிளையின் சார்பாக 2012-13ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 13.04.2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நாகர்கோவிலில் வைத்து நடைபெற்றது.
பாராட்டு விழாவிற்கு மாவட்டத்தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மரிய ஜாண் டெல்லஸ், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்புச் செயலாளர் திவாகரன் பிள்ளை அனைவரையும் வரவேற் றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களைப் பாராட்டி உரையாற்றினார். பொதுச்செயலாளர் க. இசக்கியப்பன் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னாள், இன்னாள் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். குழித்துறை கல்வி மாவட்டச் செயலாளர் ஹரிகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தலைமையிடச் செயலாளர் பால் செபாஸ்டின் தொகுத்து வழங்கினார்.
.
திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத் தின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை ஜாண்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராஜமார்த்தாண்டம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.கு. சரவணன், மாவட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின், தென் காசி கல்வி மாவட்டத் தலைவர் சசிக் குமார், செயலாளர் செல்வ சுந்தரராஜ், திரு நெல்வேலி கல்வி மாவட்டச் செயலாளர் சாம்ராஜ் மற்றும் ராஜா, மாநிலத் தணிக்கையாளர் பாபு உள்பட பலர் உரையாற்றினர்.
மேனாள் மாவட்டச் செயலாளர் மாடக்கண்ணு, மேனாள் மாவட்டத் தலைவர் J.D. நிம்ரோத் ஆகியோர் 216 அரசாணை பற்றிய விபரங்கள், வழக்கு தொடர்பான விபரங்கள் பற்றி எடுத்துரைத்தனர். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் மாநில செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்:
1. உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை மே 10 பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வலியுறுத்தப் பட்டது.
2. கோடை வெப்ப தாக்குதல் அதிகமாகி வருவதால் மாணவர்கள் நலன் கருதி அனைத்து வகை பள்ளிகளின் வேலை நாள்களை மார்ச் 31க்குள் முடிக்கும் அளவில் பள்ளி நாள்காட்டி தயார் செய்து கேரள மாநிலம் போல் ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை வழங்கிட மாண்புமிகு முதல்வர் அவர்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. மே 12, 13 மாநில பயிற்சி பட்டறை யில் நெல்லை மாவட்டத்தின் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
4. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடைபெற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
5. CPFஐ ரத்து செய்து GPFஐ அமல்படுத் திட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
6. மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை யை ரூ.150லிருந்து ரூ.50 ஆக குறைத்திடு தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
.
தலைப்புகள்:
செயற்குழு,
தஇஆச கிளை - நிகழ்வுகள்,
தீர்மானங்கள்
மாநில செயற்குழு முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமையில் ஈரோடு மாவட்டம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜெயராணி, தணிக்கையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் வேலை அறிக்கையையும், துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் இயக்க இதழ் அறிக்கையையும் அளித்து விளக்கினர். மாநில துணைத் தலைவர் பாக்கியராஜ், ஹெர்பர்ட் ராஜா சிங்(குமரி), சரவணன்(நெல்லை), சந்திரகுமார்(நீலகிரி), சக்திவேல்(திருப்பூர்), பால்ராஜ்(ஈரோடு), கமலக்கண்ணன்(சென்னை), ஜெயராணி(காஞ்சிபுரம்), தியாகராஜன்(திருச்சி), துரை பாண்டி(தஞ்சை) உள்பட பலர் விவாதத்தில் பங்கேற்றனர்.
கவிதா, ரெஜினா, அருள்மேரி, பழனியம் மாள், ஈஸ்வரி, புனிதா, தயாநிதி, ராஜ லெட்சுமி, அம்சராணி, அலமேலு என 10 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேர் இச்செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்:
1. மே 10 பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது அரசு / நகராட்சி /மாநகராட்சி / உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக 01.06.2006க்கு முன்பிருந்து உட்படுத்திட பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வரை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.
2. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து பழையமுறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.
3. CPS எனப்படும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி முதல்வ ரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட கேட்டுக் கொள்கின்றோம்.
4. மூன்று நபர் குழு அறிக்கையை முழுமையாக வெளியிட்டு இடைநிலை ஆசிரியரின் சாதாரண நிலை ஊதிய விகி தத்தை Pay band 1லிருந்தது 2க்கு மாற்றி 5,200 + 2,800 - 20,200 என்பதை 9,300 + 4,200 - 34,800 என மாற்றி அமைத்திடவும் தேர்வு நிலை / சிறப்புநிலைக்கு தனி ஊதிய விகிதங்களும் மத்திய அரசு போல் இதர படிகளையும் தந்திட கேட்டுக் கொள்கின்றோம்.
5. ஆசிரியர் - அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தின் மாத பிரீமியம் ரூ.150 என்பதை ரூ. 50 என குறைப்பதோடு அனைத்து மாநிலங்களிலும் சிகிட்சை பெற அனுமதி அளித்திட கேட்டுக் கொள்கின்றோம்.
6. மேல்நிலை, இடைநிலைக் கல்வி பொது தேர்வின் போது முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்த பின்பு தேவைப்படின் இடைநிலை ஆசிரியர்களை பயன் படுத்திடுமாறு தேர்வுதுறை இயக்குனர் அவர்களை கேட்டுக் கொள்கின்றோம்.
7. தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளையும் கோடை வெயிலின் வெப்ப தாக்கத்தின் காரணமாக வரும் கல்வியாண்டு முதல் மார்ச் 31ம் தேதிக்குள் முடித்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
8. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பின்பு இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் வழங்கிட பள்ளிக்கல்வி செயலரை கேட்டுக் கொள்கின்றோம்.
9. 10 முடித்து D.T.Ed. முடித்தவர்களுக்கு 10.09.2012ல் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணை மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட கேட்டுக் கொள்கின்றோம்.
10. பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட கேட்டுக் கொள்கின்றோம்.
11. மே 12, 13 கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் வைத்து இயக்க உறுப் பினர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்திடவும் நுழைவு கட்டணமாக ரூ.200/- பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
12. நமது முழக்கம் இதழ் சந்தாவை மாவட்டங்கள் விரைந்து முடித்திடவும் உறுப்பினர் சந்தா பட்டியல், அடிக்கட்டுகளை மே 12ல் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
13. மலை மாவட்டங்களில் பணியாற்றி மாறுதல் பெறும் ஆசிரியர்களை உடனடியாக (மாற்றுப்பணி மூலம் பணி வழங்கி) பணி விடுவிப்பு வழங்கிட கேட்டுக் கொள்கின்றோம்.
14. TANFETO சார்பில் ஏப்ரல் 17ல் வட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக்கிட தீர் மானிக்கப்பட்டது.
15. ஏப்ரல் 19ல் “பட்டதாரியாக உட்படுத் துதல்” கோரிக்கைகாக தமிழக முதல்வருக்கு Fax அனுப்பும் இயக்கம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
.
10.4.13
தஇஆச, குமரிக் கிளை சார்பில் பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட கிளையின் சார்பாக 2012-13ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 13.04.2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறுகிறது.
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் அமைந்துள்ள TNPGTA அலுவலகமான டீம் இல்லத்தில் வைத்து நடைபெறும் பாராட்டு விழாவில் பணிநிறைவு பெறும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
தஇஆச, குமரிக் கிளை.
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் அமைந்துள்ள TNPGTA அலுவலகமான டீம் இல்லத்தில் வைத்து நடைபெறும் பாராட்டு விழாவில் பணிநிறைவு பெறும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
தஇஆச, குமரிக் கிளை.
பணிநிறைவு
பெறும் ஆசிரியர்கள் விபரம்
1.
திருமதி. L. ஆறுமுகம், SLB அரசு
மே.நி.ப.,
நாகர்கோவில்.
2. திருமதி. T. ஸ்டெல்லா பாய், புனித பிரான்சிஸ் உ.ப., நாகர்கோவில்.
3.
திருமதி. V. பார்வதியம்மாள், அ.உ.ப., ஏழகரம்.
4.
திருமதி. M. முத்தம்மாள், அ.உ.ப., இரவிபுதூர்.
5.
திருமதி. A. சமாதானம்,
அ.உ.ப.,
இலந்தையடிவிளை.
6.
திருமிகு. M. மங்கபெருமாள் பிள்ளை, அ.மே.நி.ப.,
தாழக்குடி.
7.
திருமதி. A. மேரி ஜெனிட்டா, பு.சூ.உ.ப., இராஜாக்கமங்கலம்துறை.
8.
திருமதி. S. மெர்சிலின் பெர்னாண்டோ, அ.உ.ப., ஈத்தாமொழி.
9.
திருமதி. T. சின்னம்மாள், அ.உ.ப., ஈத்தாமொழி.
10. திருமதி. R. மரிய ரோசம்மாள், சிறுமலர்
உ.ப., மணக்குடி.
11. திருமதி. S. லத்தீஸ் மேரி, திருஇருதய
மே.நி.ப., கடியப்பட்டணம்.
12. திருமதி. S.V. ஷைலம், V.K.P. மே.நி.ப.,
குளச்சல்.
13. திருமதி. D. ராஜம், V.K.P. மே.நி.ப., குளச்சல்.
14. திருமதி. K. ராமலெட்சுமி, அ.மே.நி.ப., இரணியல்.
15. திருமதி. K. சாந்தா எலிசபெத், அ.மே.நி.ப., திருவிதாங்கோடு.
16. திருமதி. A. மேரிபாய், உ.பெ.மே.நி.ப., ஏற்றக்கோடு.
17. திருமதி. O. நளினகுமாரி, உ.பெ.மே.நி.ப., ஏற்றக்கோடு.
18. திருமிகு. N. ஹாஜா,
அ.உ.ப.,
திருநந்திக்கரை.
19. திருமதி. C. பிரசன்னா, அ.உ.ப., மேல்புறம்.
20. திருமிகு. K. சந்திரமோகன், அ.மே.நி.ப., கடையாலுமூடு.
21. திருமதி. M. கார்மல்மேரி, புனித மரியன்னை. மே.நி.ப., மேல்பாலை.
22. திருமதி. K. வசந்தா, ஸ்ரீதேவி மே.நி.ப., கொல்லங்கோடு.
23. திருமதி. R. நிர்மலா, அ.மே.நி.ப., ஏழுதேசபற்று.
24. திருமிகு. C. பிலிப், அ.மே.நி.ப., ஏழுதேசபற்று.
25. திருமதி. R. லில்லிபாய், ஆபிரகாம் நினைவு மே.நி.ப., மருதங்கோடு.
26. திருமிகு. சாரங்காதரன், அ.மே.நி.ப., பளுகல்.
27. திருமதி. J. விஜயகுமாரி, அ.உ.ப. நெசவாளர் தெரு, வடசேரி.
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப...
-
பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும...
-
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
-
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...