தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.4.13

தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம்

25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 19ம் தேதி தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது

தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 2004ம் ஆண்டு முதல் 6,7,8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 1.6.2006ன்படி இந்த பட்டதாரி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றுகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் 6,7,8ம் வகுப்புகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திடாமல் அரசாணை வெளியிட்டதால் ஒரே பணி, இரு வேறு ஊதிய விகிதம் என்ற அவநிலையில் தற்பாது 6,7,8ம் வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடந்த 2007ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 19ம் தேதி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வருவாய், கல்வி மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்