தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.4.13

மாநில செயற்குழு முடிவுகள்


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமையில் ஈரோடு மாவட்டம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜெயராணி, தணிக்கையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் வேலை அறிக்கையையும், துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் இயக்க இதழ் அறிக்கையையும் அளித்து விளக்கினர். மாநில துணைத் தலைவர் பாக்கியராஜ், ஹெர்பர்ட் ராஜா சிங்(குமரி), சரவணன்(நெல்லை), சந்திரகுமார்(நீலகிரி), சக்திவேல்(திருப்பூர்), பால்ராஜ்(ஈரோடு), கமலக்கண்ணன்(சென்னை), ஜெயராணி(காஞ்சிபுரம்), தியாகராஜன்(திருச்சி), துரை பாண்டி(தஞ்சை) உள்பட பலர் விவாதத்தில் பங்கேற்றனர்.

கவிதா, ரெஜினா, அருள்மேரி, பழனியம் மாள், ஈஸ்வரி, புனிதா, தயாநிதி, ராஜ லெட்சுமி, அம்சராணி, அலமேலு என 10 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேர் இச்செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

1. மே 10 பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது அரசு / நகராட்சி /மாநகராட்சி / உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக 01.06.2006க்கு முன்பிருந்து உட்படுத்திட பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வரை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.

2. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து பழையமுறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.

3. CPS எனப்படும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி முதல்வ ரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட கேட்டுக் கொள்கின்றோம்.

4. மூன்று நபர் குழு அறிக்கையை முழுமையாக வெளியிட்டு இடைநிலை ஆசிரியரின் சாதாரண நிலை ஊதிய விகி தத்தை Pay band 1லிருந்தது 2க்கு மாற்றி 5,200 + 2,800 - 20,200 என்பதை 9,300 + 4,200 - 34,800 என மாற்றி அமைத்திடவும் தேர்வு நிலை / சிறப்புநிலைக்கு தனி ஊதிய விகிதங்களும் மத்திய அரசு போல் இதர படிகளையும் தந்திட கேட்டுக் கொள்கின்றோம்.

5. ஆசிரியர் - அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தின் மாத பிரீமியம் ரூ.150 என்பதை ரூ. 50 என குறைப்பதோடு அனைத்து மாநிலங்களிலும் சிகிட்சை பெற அனுமதி அளித்திட கேட்டுக் கொள்கின்றோம்.

6. மேல்நிலை, இடைநிலைக் கல்வி பொது தேர்வின் போது முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிக்கு நியமனம் செய்த பின்பு தேவைப்படின் இடைநிலை ஆசிரியர்களை பயன் படுத்திடுமாறு தேர்வுதுறை இயக்குனர் அவர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

7. தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளையும் கோடை வெயிலின் வெப்ப தாக்கத்தின் காரணமாக வரும் கல்வியாண்டு முதல் மார்ச் 31ம் தேதிக்குள் முடித்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

8. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பின்பு இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் வழங்கிட பள்ளிக்கல்வி செயலரை கேட்டுக் கொள்கின்றோம்.

9. 10 முடித்து D.T.Ed. முடித்தவர்களுக்கு 10.09.2012ல் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணை மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட கேட்டுக் கொள்கின்றோம்.

10. பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட கேட்டுக் கொள்கின்றோம்.

11. மே 12, 13 கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் வைத்து இயக்க உறுப் பினர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்திடவும் நுழைவு கட்டணமாக ரூ.200/- பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

12. நமது முழக்கம் இதழ் சந்தாவை மாவட்டங்கள் விரைந்து முடித்திடவும் உறுப்பினர் சந்தா பட்டியல், அடிக்கட்டுகளை மே 12ல் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

13. மலை மாவட்டங்களில் பணியாற்றி மாறுதல் பெறும் ஆசிரியர்களை உடனடியாக (மாற்றுப்பணி மூலம் பணி வழங்கி) பணி விடுவிப்பு வழங்கிட கேட்டுக் கொள்கின்றோம்.

14. TANFETO சார்பில் ஏப்ரல் 17ல் வட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக்கிட தீர் மானிக்கப்பட்டது.

15. ஏப்ரல் 19ல் “பட்டதாரியாக உட்படுத் துதல்” கோரிக்கைகாக தமிழக முதல்வருக்கு Fax அனுப்பும் இயக்கம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்