தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.1.12

பொது விழாக்களில் மாணவர்களின் சாகச நிகழ்வை அனுமதிக்கக்கூடாது

குடியரசு தினவிழாவில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சாகச விளையாட்டுகள், இந்த ஆண்டு துயர சம்பவங்களை ஏற்படுத்தியதால், பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு, இனிமேல் அனுமதியளிக்க கூடாது, என எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.

"கரணம் தப்பினால் மரணம்' என்பது தான் சாகச விளையாட்டுகளின் இலக்கணம். சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவர்களால் நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சிகளால் விபத்துகள் ஏற்பட்டன. இதனால், இது போன்ற சாகசங்களை நடத்தக் கூடாது, என அரசால் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவு பள்ளிகளில் இன்றளவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், அதிகாரிகள் பங்கேற்கும் குடியரசு, சுதந்திர தினம் போன்ற பொது விழாக்களில் சாகச நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. 

இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் ஊட்டியில் பள்ளி மாணவர்களை கொண்டு நடந்த சாகச நிகழ்ச்சியில், போலீஸ்காரர் பாண்டியன் பலியானார். அதே நாளில், மதுரையில் நடந்த சாகச நிகழ்ச்சியில், பள்ளி மாணவர் சுபம் ரணாவிற்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு பின், இது போன்ற சாகசங்கள் நிகழ்த்தக்கூடாது என, விளையாட்டு சங்கங்களும்வலியுறுத்தியுள்ளன. 

தமிழ்நாடு அனைத்து விளையாட்டு சங்கங்களின் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் கூறியதாவது
பொதுமக்கள் முன்னிலையில் காட்சிக்காக நடத்தப்படும், ஜிம்னாஸ்டிக் போன்ற சாகச விளையாட்டுக்களை, அதற்குரிய அரங்கத்தில் மட்டுமே நடத்த வேண்டும். அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் தங்கள் சாகசத்தை காண்பிக்கும் ஆசையில், அவசரத்தில் மாணவர்கள் செயல்படுவது தான், விபத்திற்கான முதல் காரணம். சாதாரணமாக நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளைப் போன்று தான் இந்த விளையாட்டு. இதில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சரியான "ஸ்டெப்' கிடைக்கவில்லை எனில், ஓடிவந்து அப்படியே தனது போக்கை மாற்றிக் கொள்வார். ஆனால், அதிகாரிகள் முன்னிலையில் நடத்தும் போது, இதற்கான காலஅவகாசம் கிடைப்பது இல்லை. சரியாக வரவில்லை என்றாலும், முயற்சியை தொடர்ந்து, விபத்தில் சிக்கிவிடுகின்றனர். 

இந்த காட்சி விளையாட்டில் பள்ளி அல்லது விளையாட்டு சங்கங்கள் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. போதிய பயிற்சிகள் இல்லாமல் அவசர கோலத்தில் இவை நடத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன் இந்த இடத்திற்கு வந்து பயிற்சிகள் எடுப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகளும் அனுமதி வழங்குவது இல்லை. இப்படி பல சிக்கல்களின் மத்தியில் தான் இந்த காட்சி விளையாட்டு நடத்தப்படுகிறது. அதனால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்த சாகச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும், என்றார்.

நன்றி:

26.1.12

தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்

தமிழக அமைச்சரவை இன்று 7வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சரவையிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

வருவாய்த்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை முக்கூர் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் அமைச்சராக சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஒரு வாரத்திற்கு முன்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி., வேலுமணி வருவாய்த்துறையை கவனித்து வந்தார்.

நன்றி:

பள்ளிக் கல்வித்துறை இணையதளம் முடங்கியது :ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் சிக்கல்

பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளம், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால், ஒரு வாரமாக முடங்கி உள்ளது. 

முந்தைய தி.மு.க., ஆட்சியில், பள்ளிக் கல்வித்துறைக்கென தனி இணையதளம் (www.pallikalvi.in) உருவாக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த, "மார்க் மெக்லிங் சொல்யூஷன்' நிறுவனம், இணையதளத்தை வடிவமைத்தது. 

நல்ல வரவேற்பு
இணையதளத்தை இந்நிறுவனமும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகமும் சேர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு, மே 2009ல், செயல்பாட்டுக்கு வந்தது. பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வித்துறை அலுவலகங்களும், பள்ளிக்கல்வி இணையதளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. அரசாணை, ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவு என, பல்வேறு தகவல்கள், இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் இந்த இணையதளம், மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. 

ஒப்பந்தம் முடிவு
இணையதளத்தில் விளம்பரம் மூலம் வரும் வருவாயை, மார்க் நிறுவனமும், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகமும் பிரித்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு விளம்பரம் வரவில்லை. அரசுத் தரப்பில் இருந்து, போதிய ஆதரவு இல்லாததால், நிறுவனம் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நிறுவனத்துடனான அரசின் ஒப்பந்தம், கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஒரு வாரமாக இணையதளம் முடங்கியுள்ளது. 

ரூ.50 லட்சம் நஷ்டம்
இதுகுறித்து, நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: 
முதல் இரண்டு ஆண்டுகள், விளம்பரத்தின் மூலம் வந்த வருவாயில், இணையதளத்தை நடத்தி வந்தோம். ஆனாலும், சொல்லும்படி வருவாய் கிடையாது. தேர்வு முடிவுகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வரும்போது, அதிகமான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அதற்கேற்ப, கூடுதல், "நெட்வொர்க்' ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக, "நெட் 4 இந்தியா' என்ற நிறுவனத்திற்கு, 6 லட்ச ரூபாய் வரை கட்டணம் கொடுத்து, கூடுதல் வசதிகளை பெறுகிறோம்.மாதந்தோறும் குறைந்தபட்சம், 1.50 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளையும் செய்ய வேண்டும். எங்களால் சமாளிக்க முடியாமல் திணறி வந்தோம். இதுவரை, 50 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 19ம் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகளைச் சந்தித்து பேசினோம். இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. "இணையதளத்தை நடத்துவதற்கான செலவை மட்டுமாவது கொடுங்கள் போதும்' என்று தான் கேட்கிறோம்; ஆனாலும், எந்தவித பதிலும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
"எனக்கு எதுவும் தெரியாது'

பெற்றோர் ஆசிரியர் கழக செயலரும், இணையதள நிர்வாகத்திற்கான பொறுப்பாளருமான (துணை இயக்குனர்) கலைச்செல்வனிடம், இதுகுறித்து கேட்டபோது: இணையதளம் முடங்கி இருப்பது குறித்தும், ஒப்பந்த தேதி முடிந்ததும், எனக்குத் தெரியாது. இணையதள நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்கவில்லை. இணையதளம் செயல்படாமல் இருப்பது குறித்து விசாரிக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

22.1.12

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம்

"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்,'' என, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்கள், 16,549 பேரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாதம், 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 27ம் தேதியில் இருந்து, அனைவரும் பணிகளில் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டிருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்ததால், நேர்முகத் தேர்வுப் பணிகள், இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் கூறியதாவது
சில மாவட்டங்களில், அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதனால், நேர்முகத் தேர்வு பணிகள் முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிந்ததும், பிப்ரவரி முதல் வாரத்தில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் அனுப்பப்படும்.

இவ்வாறு அஸ்லம் கூறினார். 

நன்றி:

21.1.12

முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்யுங்கள் : புதிய கல்வி அமைச்சர் வேண்டுகோள்

"பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும், முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும்,'' என, துறைக்கு, புதிய அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார். 

அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது முதல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக சி.வி.சண்முகம் பதவி வகித்து வந்தார். இவரை மாற்றிவிட்டு, வணிக வரித்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். முதலில் உணவுத் துறை, இரண்டாவதாக வணிக வரித்துறை என, தற்போது மூன்றாவது துறைக்கு மாறியிருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துறை உயர் அதிகாரிகளுடன், துறை செயல்பாடுகள் குறித்து, டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று ஆய்வு செய்தார். 

துறையின் முதன்மைச் செயலர் ஸ்ரீதர், அனைவருக்கும் கல்வி இயக்குனர் முகமது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் மணி, தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர், ஆசிரியர் கல்வி இயக்குனர் தேவராஜன், ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் இளங்கோவன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். துறை வாரியான செயல்பாடுகள் குறித்தும், தற்போது நடந்து வரும் பணிகள் குறித்தும், அந்தந்த துறை அதிகாரிகள் விவரித்தனர்.

கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது
தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றோர் சதவீதம், 80.33ஆக உள்ளது. இதில், ஆண்கள் 86.81 சதவீதமாகவும், பெண்கள் 73.86 சதவீதமாகவும் உள்ளனர். பெண் கல்வியை வளர்க்கும் வகையில், கல்வியில் பின் தங்கியுள்ள 38 தாலுகாக்களில், பெண்களுக்கான தேசிய தொடக்கக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவை எல்லாம் மக்களிடம் செல்லும் வகையில், துறை அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட அனைவரும், முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும், அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். 

இவ்வாறு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

நன்றி:

20.1.12

"தானே' புயல்: அரசு ஊழியர் சம்பளம் பிடித்தம் விதிகள் அறிவிப்பு

"தானே' புயல் நிவாரணத்துக்காக, தமிழக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க, அதிகளவு நிதி தேவைப்படும் என்பதால், தாராளமாக நிதி வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை, புயல் நிவாரணத்துக்கு தர தயாராக இருப்பதாக, அரசுக்கு கடிதங்கள் கொடுத்திருந்தனர்.

இதை ஏற்று, தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு


ஒரு நாள் சம்பளத்தை வழங்க விரும்பும் ஊழியர்கள், தங்கள் சம்மதத்தை, சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக கொடுக்க வேண்டும்.

* பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.

* ஒரு நாளுக்கு மேலாக சம்பளத்தை தர விரும்பும் ஊழியர், எத்தனை நாட்கள் பிடித்தம் செய்யலாம் என்பதை எழுதிக் கொடுக்கலாம்.

* இந்த உத்தரவு, அனைத்து உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் இதர நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

* இந்த நன்கொடை என்பது, முற்றிலும் தானாக விரும்பி வந்து கொடுக்கின்றனர் என்பதை, சம்பள கணக்கு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். 


இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
.

19.1.12

'தானே' புயல் - ஒரு நாள் ஊதியம் தொடர்பான அரசாணை

Thane one day salary

தேசிய வாக்காளர் தினம் கொண்டாட உத்தரவு: அரசு அலுவலர்களுக்கு புது நிபந்தனை

"தமிழகம் முழுவதும், வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, அனைத்து ஓட்டுச் சாவடி மையம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்' என, கூடுதல் தேர்தல் கமிஷன் கூடுதல் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும், தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து ஓட்டுச் சாவடி, பள்ளி மற்றும் கல்லூரி, தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில் கொண்டாடப்பட வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூடுதல் அலுவலர் ராஜேந்திரன் அனைத்து மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பியுள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது
ஒவ்வொரு தாலுகா அளவிலும், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களில் அச்சிட்டு மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் விநியோகிக்க வேண்டும். நகர் மற்றும் கிராம பகுதிகளில், தேசிய வாக்காளர் தினம் மற்றும் ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் குறித்து தாண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், மனு செய்தவர்களின் பட்டியலை சரிபார்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து சினிமா தியேட்டர்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். கல்விக்குழுக்கள், சுயஉதவி குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனம் மூலம் ஓட்டு போடுதல் குறித்த விபரம் தெரிவிக்க வேண்டும். அதிக முறை ஓட்டு போட்ட வாக்காளர்களை கவுரவிக்க வேண்டும். 

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஓவியம், கட்டுரை, குழு விவாதம் போட்டிகளும், கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகம், வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களும், வாக்காளர் உறுதி மொழி ஏற்க செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும், மதம், இனம், ஜாதி, மொழி தாக்கம் இல்லாமலும், எந்த ஒரு தூண்டுதல் இல்லாமல் அச்சமின்றி ஓட்டு போடுவோம் என, உறுதிமொழி ஏற்க வேண்டும். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களாக இருப்பதால், அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

கமிஷன் நிபந்தனை: தேசிய வாக்காளர் தின விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சியினரை மேடையில் அமர வைக்காமல், பார்வையாளர் வரிசையில் அமர வைக்க வேண்டும். அதிகமுறை ஓட்டு போட்டவர்களை கவுரவிப்பதோடு, அரசு அலுவலர்களை மட்டுமே மேடையில் அமர வைக்க வேண்டும். என, தேர்தல் கமிஷன், நிபந்தனை விதித்துள்ளது.


நன்றி:

சத்துணவில் மாற்றம் அதிகாரிகள் ஆலோசனை

பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் மாற்றம் செய்ய, அதிகாரிகளால் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

சத்துணவில் தினமும் சாம்பார் வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மாற்றம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புளிக்குழம்பு போன்று குழம்பு வகைகளை மாற்றம் செய்து, மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதில் ஆர்வம் ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. 

இது குறித்து உயர் மட்ட அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து விரைவில் சத்துணவில் மாற்றம் செய்யப்பட உள்ளன.


நன்றி:




சீருடை,செருப்பு வழங்க மாணவர் விபரம் சேகரிப்பு

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, செருப்பு, ஜியாமெட்ரிக் பாக்ஸ் வழங்க தமிழக அரசு சட்டசபையில் அறிவித்திருந்தது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பயனாளிகளின் பட்டியல் தயாராகிறது. 

பள்ளிக்கல்வித்துறை சார்பில், இதற்கான சுற்றறிக்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு செட் சீருடைகள், செருப்பு, மற்றும் 6ம் வகுப்பு முதல் ஜியாமெட்ரிக் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவர் பட்டியலை உடன் அனுப்பி வைக்குமாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:

18.1.12

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு

தமிழக அமைச்சர்களை மீண்டும் மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, 
  • சி.வி. சண்முகத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  • அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, 
  • எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த்துறை, 
  • பி. தங்கமணிக்கு சுரங்கம், கனிமம் மற்றும் தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. 
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையிலான இந்த மாற்றத்திற்கு கவர்னர் ரோசைய்யா ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே நான்கு முறை மாற்றம் செய்யப்பட்டது. இது தவிர, இலாகாக்களும் அவ்வப்போது மாற்றப்பட்டன. இறுதியாக நடைபெற்ற மாற்றத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து, பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். செல்வி ராமஜெயம் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக திருப்பூர் ஆனந்தனும், சமூகநலத் துறை அமைச்சராக வளர்மதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி:

மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடை, இலவச காலணி, புத்தகப்பை, பென்சில்கள் வழங்க முதல்வர் உத்தரவு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும், தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பான வசதிகள் நிறைந்த சூழ்நிலைகளில் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

இதன் அடிப்படையில், 2012-13ம் ஆண்டில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்பள்ளிகள் ஆகியவற்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு சீருடைகளுடன் கூடுதலாக இரண்டு சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 4 சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு பாவாடை தாவணிக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகள் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 078 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

மேலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா ஒரு காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35 ஆயிரத்து 556 மாணவ, மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 9 முதல் 10ம் வகுப்பு படிக்கும் 18 லட்சத்து 5 ஆயிரத்து 933 மாணவ மாணவியருக்கு 142 ரூபாய் செல்வில் ஒரு காலணியும் வழங்கவும், அதனை இந்த ஆண்டே வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 94 ‌கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான ஜாமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத கலர் பென்சில்கள் மற்றும் புவியியல்படங்களை இந்த கல்வியாண்டு முதல் 2012-13 முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும் வழங்கப்படும். இதன் மூலம் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர்களும் பயன்பெறுவர். இதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 35 ரூபாய் மதிப்புள்ள ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை இரண்டாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து 6,8,10 வகுப்பு மாணவ மாணவியருக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஓர் ஆயிரத்து 572 மாணவ மாணவிகள் பயன்பெறுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 20 ரூபாய் மதிப்புடைய கலர்பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதன் மூலம் 46, 01,572 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 12-13ம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்ச ரூபாய் செலவு ஏற்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபு வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் வழங்கப்படும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும, 3ம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரத்து ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

15.1.12

நாடு முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகள் தேவை

12-வது ஐந்தாண்டு திட்ட காலமான 2017-ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படும் என மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. 

தென்னிந்திய‌ைவை ‌பொறுத்தவரையில் கர்நாடகாவில் ஆயிரத்து 241, ஆந்திராவில் 456, கேரளாவில் 112, தமிழகத்தில் 690 உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படுகின்றன. மேலும் நாட்டின் மிக பெரிய மாநிலமான உ.பி.,யில் 3 ஆயிரம் பள்ளிகளும், குஜராத்தில் 2 ஆயிரத்து 256 பள்ளிகள், ம.பி.,யில் 2 ஆயிரத்து 180 பள்ளிகளும், பீகாரில் ஆயிரத்து 264 மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் ஆயிரத்து 6-ம் தலைநகர் டில்லியில் 51 பள்ளிகளும் கூடுதலாக தேவைப்படுகி்ன்றன.

மத்திய அரசின் திட்டமான ராஷ்டீரிய மத்யமிக்சிக்ஷா அபியான் திட்டத்தை +1மற்றும் +2 வகுப்புகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தம்முடைய திறமையை வளர்த்துக்கொள்வதற்கு குறந்தை பட்சம் அடிப்படைகல்வியை கற்றிருக்க வேண்டும் எனவும் தற்போது நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஷ அபியான் திட்டம் நல்ல பயனை தந்துள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்‌சத்து 23 ஆயிரம் பள்ளிகள் இயங்கிகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திட்டக்கமிஷன் மூலம் அமைக்கப்பட்ட குழு தயாரித்த இந்த அறிக்கை பிரதமர் தலைமையிலான ‌தேசிய வளர்ச்சி கவுன்சிலிடம் சமர்பிக்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி:

10.1.12

'நமது முழக்கம்' மின்னிதழ் - நவம்பர் 2011

N-M Nov. 2011

2.1.12

தற்காலிக பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு பொருந்தும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 அரசுத் துறைகளில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு 80 நாட்கள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்தவர் கண்ணகி. இவர் கால்நடை பராமரிப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளராக கடந்த 30.5.1985 பணியில் சேர்ந்தார். 1993ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 1995ல் அரசுக்கு தற்காலிக பணியாளர்களின் பட்டியலை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 5.5.1996ல் கண்ணகி கர்ப்பமானதால் நிர்வாகத்திடம் பேறுகால விடுப்பு கோரினார். தற்காலிக பணியாளர் என்பதால் பேறுகால விடுப்பு தரமுடியாது என்று நிர்வாகம் மறுத்துவிட்டது. 30.6.1996ல் கண்ணகிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

அதன் பின்னர் மீண்டும் பணியில் சேர கண்ணகி முயன்றபோது நிர்வாகம் பணி வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா ரித்த நிர்வாக தீர்ப்பாயம் 18.11.1999ம் ஆண்டில் மனு தாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நிர்வாகம் கண்ணகிக்கு வேலை வழங்க மறுத்துவந்தது.

இதனால், கண்ணகி மீண்டும் நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதால் இவ் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, பேறு கால விடுப்பு சட்டம் 1961 பிரிவு 5 (2)படி ஓர் ஆண்டில் 80 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பெண் பணியாளர்களுக்கு 12 வாரம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்புக்கு தகுதியானவர்கள். இதில் ஒப்பந்த பணியாளர்களாக இருந்தாலும் தினக் கூலியாக இருந்தாலும் இவ்விதி பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும், மனுதாரருக்கு வேலை வழங்க மறுத்தது சட்ட விரோதமான செயல் என்றும் இது அரசமைப்பு சட்ட உறுப்பு எண் 14, 21 பிரிவுக்கு எதிரானது என்றும் கூறினார். எனவே, மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து விதமான பண, பணிபயன்களையும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்
.

பொங்கல் பரிசு(போனஸ்) - அரசாணை வெளியிட்டப்பட்டது.

Pongal Bonus GO No: 1 dt: 02-01-2012

1.1.12

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு(போனஸ்) - அரசு அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவில் , உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்திய பணி  விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசுக்கு 264 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Bonus

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்