தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.1.12

தற்காலிக பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு பொருந்தும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 அரசுத் துறைகளில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு 80 நாட்கள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்தவர் கண்ணகி. இவர் கால்நடை பராமரிப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளராக கடந்த 30.5.1985 பணியில் சேர்ந்தார். 1993ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 1995ல் அரசுக்கு தற்காலிக பணியாளர்களின் பட்டியலை நிர்வாகம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், 5.5.1996ல் கண்ணகி கர்ப்பமானதால் நிர்வாகத்திடம் பேறுகால விடுப்பு கோரினார். தற்காலிக பணியாளர் என்பதால் பேறுகால விடுப்பு தரமுடியாது என்று நிர்வாகம் மறுத்துவிட்டது. 30.6.1996ல் கண்ணகிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

அதன் பின்னர் மீண்டும் பணியில் சேர கண்ணகி முயன்றபோது நிர்வாகம் பணி வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா ரித்த நிர்வாக தீர்ப்பாயம் 18.11.1999ம் ஆண்டில் மனு தாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நிர்வாகம் கண்ணகிக்கு வேலை வழங்க மறுத்துவந்தது.

இதனால், கண்ணகி மீண்டும் நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதால் இவ் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, பேறு கால விடுப்பு சட்டம் 1961 பிரிவு 5 (2)படி ஓர் ஆண்டில் 80 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பெண் பணியாளர்களுக்கு 12 வாரம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்புக்கு தகுதியானவர்கள். இதில் ஒப்பந்த பணியாளர்களாக இருந்தாலும் தினக் கூலியாக இருந்தாலும் இவ்விதி பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும், மனுதாரருக்கு வேலை வழங்க மறுத்தது சட்ட விரோதமான செயல் என்றும் இது அரசமைப்பு சட்ட உறுப்பு எண் 14, 21 பிரிவுக்கு எதிரானது என்றும் கூறினார். எனவே, மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்கி, அனைத்து விதமான பண, பணிபயன்களையும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்