தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.1.12

பொது விழாக்களில் மாணவர்களின் சாகச நிகழ்வை அனுமதிக்கக்கூடாது

குடியரசு தினவிழாவில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சாகச விளையாட்டுகள், இந்த ஆண்டு துயர சம்பவங்களை ஏற்படுத்தியதால், பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு, இனிமேல் அனுமதியளிக்க கூடாது, என எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.

"கரணம் தப்பினால் மரணம்' என்பது தான் சாகச விளையாட்டுகளின் இலக்கணம். சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவர்களால் நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சிகளால் விபத்துகள் ஏற்பட்டன. இதனால், இது போன்ற சாகசங்களை நடத்தக் கூடாது, என அரசால் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவு பள்ளிகளில் இன்றளவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், அதிகாரிகள் பங்கேற்கும் குடியரசு, சுதந்திர தினம் போன்ற பொது விழாக்களில் சாகச நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. 

இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் ஊட்டியில் பள்ளி மாணவர்களை கொண்டு நடந்த சாகச நிகழ்ச்சியில், போலீஸ்காரர் பாண்டியன் பலியானார். அதே நாளில், மதுரையில் நடந்த சாகச நிகழ்ச்சியில், பள்ளி மாணவர் சுபம் ரணாவிற்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு பின், இது போன்ற சாகசங்கள் நிகழ்த்தக்கூடாது என, விளையாட்டு சங்கங்களும்வலியுறுத்தியுள்ளன. 

தமிழ்நாடு அனைத்து விளையாட்டு சங்கங்களின் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் கூறியதாவது
பொதுமக்கள் முன்னிலையில் காட்சிக்காக நடத்தப்படும், ஜிம்னாஸ்டிக் போன்ற சாகச விளையாட்டுக்களை, அதற்குரிய அரங்கத்தில் மட்டுமே நடத்த வேண்டும். அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் தங்கள் சாகசத்தை காண்பிக்கும் ஆசையில், அவசரத்தில் மாணவர்கள் செயல்படுவது தான், விபத்திற்கான முதல் காரணம். சாதாரணமாக நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளைப் போன்று தான் இந்த விளையாட்டு. இதில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சரியான "ஸ்டெப்' கிடைக்கவில்லை எனில், ஓடிவந்து அப்படியே தனது போக்கை மாற்றிக் கொள்வார். ஆனால், அதிகாரிகள் முன்னிலையில் நடத்தும் போது, இதற்கான காலஅவகாசம் கிடைப்பது இல்லை. சரியாக வரவில்லை என்றாலும், முயற்சியை தொடர்ந்து, விபத்தில் சிக்கிவிடுகின்றனர். 

இந்த காட்சி விளையாட்டில் பள்ளி அல்லது விளையாட்டு சங்கங்கள் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. போதிய பயிற்சிகள் இல்லாமல் அவசர கோலத்தில் இவை நடத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன் இந்த இடத்திற்கு வந்து பயிற்சிகள் எடுப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகளும் அனுமதி வழங்குவது இல்லை. இப்படி பல சிக்கல்களின் மத்தியில் தான் இந்த காட்சி விளையாட்டு நடத்தப்படுகிறது. அதனால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்த சாகச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும், என்றார்.

நன்றி:

1 கருத்து:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்