தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.8.11

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவியேற்பு

தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
தமிழகத்தின் கவர்னராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய கவர்னராக ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ரோசய்யாவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நியமித்து உத்தரவிட்டார். கவர்னராக பொறுப்பேற்க வசதியாக, ரோசய்யா தான் வகித்து வந்த ஆந்திர எம்.எல்.சி., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 

இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், ரோசய்யாவுக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ரோசய்யா, ஆந்திர சட்டசபையில் தொடர்ந்து ஏழு முறை உட்பட மொத்தம் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை பெற்றவர். இவர், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேம்ரூ என்ற கிராமத்தில் 1933, ஜூலை 4ல் பிறந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் சீனியர் தலைவர் என புகழப்படும் ரோசய்யாவிற்கு, காங்கிரஸ் கட்சி மேலிடத்திலும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளது.




நன்றி


ஆசிரியர் பதவி உயர்வு தாமதம் ஓய்வு பெறும் போது பாதிப்பு

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பென்ஷன், பணப்பலன்கள் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து, இது வரை எந்த அறிவிப்பும் இல்லை. ஜூனில் பொது கலந்தாய்வு நடத்தி, காலியிடங்களை கணக்கிட்டு, ஜூலையில் பதவி உயர்வு வழங்கப்படும். 

தற்போது கலந்தாய்வு நடத்தாமல், பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. பதவி உயர்வு குறித்தும் எந்த முடிவும் எடுக்காத நிலை உள்ளது. இதனால், ஜூலைக்குப்பின் பணி ஓய்வு நிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு மூலம் கிடைக்கும் சம்பள உயர்வு , பென்ஷன், பணப்பலன்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பலர் பணி மூப்பு பட்டியல் பெற்றும், பதவி உயர்வு வழங்காத நிலையில் தவிக்கின்றனர்.

நன்றி


26.8.11

வரும் கல்வியாண்டு முதல் முப்பருவ தேர்வு முறை - காணொளி

தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்


தமிழக ஆளுநராக சில மாதங்களுக்கு முன்பு வரை ஆந்திர மாநில முதல்வராக இருந்து வந்த கே. ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று பிறப்பித்தார்.

எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை இன்று மாலை வெளியிட்டது.

ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ரோசய்யா 2009ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். பின்னர் உள்கட்சிப் பூசல் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவரை சமாதானப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவியைக் கொடுக்கிறது காங்கிரஸ்.

கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் இருந்தவர் ரோசய்யா. என்.ஜி.ரங்காவின் சிஷ்யர் ஆவார். சென்னா ரெட்டி, அஞ்சய்யா, விஜயபாஸ்கர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். 


1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர். சாதனை அளவாக 16 முறை ஆந்திர பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ரோசய்யா.

1998ம் ஆண்டு லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருந்துள்ளார். 1995ம் ஆண்டு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது ரோசய்யா ஆந்திர மாநில மேல்சபையில், எம்.எல்.சியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி

தமிழக கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் - சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார்


பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்:

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இந்த அரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை ரூ. 419.60 கோடி செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்- மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன்.

உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.99.29 கோடி செலவு ஏற்படும்.

முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள். பொதுப் பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.

இதனை நன்கு உணர்ந்த எனது அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வி ஆண்டில் ரூ.1,082.71 கோடி மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.

மேலும், நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1985ம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கற்றலுக்குத் தேவையான ஜியோமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.119.48 கோடி செலவிடப்படும்.

சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் பள்ளிக் கூடங்களில் அமையப் பெற வேண்டும் என்பது எனது திடமான எண்ணம் ஆகும். எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 60 கோடி செலவு ஏற்படும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், குழந்தைகளின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

கணினி மூலம் கற்பது பள்ளிகளில் தற்போது இன்றியமையாததாக உள்ளது. மாணவ, மாணவியர்கள் தமது பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பற்பல குறிப்புகளையும் பாடத்திற்கு ஏற்ற மேற்கோள்களையும் மற்றும் தேவையான தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு கணினி முக்கியமான ஒன்று என்பதனை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளேன்.

அதனைத் தொடர்ந்து, எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்/ ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் ICT@Schools (Information and Communication Technology@Schools), Tamil Nadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைகோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த அவைக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத்
திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

நன்றி

24.8.11

பள்ளிக் கல்வித்துறை செய்முறைத் திட்டம் மற்றும் புள்ளிவிவர கையேடு வெளியீடு

பள்ளிக் கல்வித்துறை செய்முறைத் திட்டம் மற்றும் புள்ளிவிவர கையேடு, சட்டசபையில் நேற்று உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், தமிழகத்தின் கல்வி நிலையை விளக்கும் வகையில், பல்வேறு புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

அதன் விவரம்: 
  • நடப்பாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை-7 கோடியே 21 லட்சம். 
  • மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதம் - 80.33 (ஆண்கள் - 86.81, பெண்கள் - 76.86)
  • கன்னியாகுமரி மாவட்டம், 92.14 சதவீதம் எழுத்தறிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடம் சென்னைக்கு (90.33%) கிடைத்துள்ளது.
  • 64.71 சதவீதத்துடன், தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களில், முறையே அரியலூர் (71.99%), விழுப்புரம் (72.08%) மாவட்டங்கள் உள்ளன.
  • தொடக்கப்பள்ளிகள் 34 ஆயிரத்து 226, நடுநிலைப்பள்ளிகள் 10 ஆயிரத்து 614, உயர்நிலைப் பள்ளிகள் 4,557, மேல்நிலைப் பள்ளிகள் 5,560 என மொத்தம், 54 ஆயிரத்து 957 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தொடக்க கல்வித்துறையில், 54 லட்சத்து, 98 ஆயிரத்து 419 மாணவர்களும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 81 லட்சத்து 22 ஆயிரத்து 678 மாணவ, மாணவியரும் படிக்கின்றனர்.
  • 31 ஆயிரத்து 816 அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் உள்ளன என்றும், 3,979 பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன என்றும், அரசு தெரிவித்துள்ளது. 16 ஆயிரத்து 75 வகுப்பறைகள் கூடுதலாக தேவைப்படுகின்றன. இதில், 4,444 வகுப்பறைகள், நடப்பு கல்வியாண்டில் கட்டப்பட உள்ளன.
  • 14 ஆயிரத்து 836 பள்ளிகளில் தளவாட சாமான்கள் முழுமையாக உள்ளன. 14 ஆயிரத்து 16 பள்ளிகளில், ஓரளவுக்கு உள்ளன. 6,943 பள்ளிகளில், தளவாட சாமான்களே இல்லை என்றும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2,248 பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
  • 1,510 பள்ளிகளில் குடிநீர் வசதி, பயன்பாட்டில் இல்லை.
இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, நடப்பு கல்வியாண்டில் 1,820 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராப் பகுதிக்கு...

அரசு பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள்
  • 33,547 பள்ளிகளில் கழிவறை வசதி உள்ளது.
  • 31,010 பள்ளிகளில் உள்ள கழிவறைகள் முழு பயன்பாட்டில் உள்ளன.
  • 2,537 பள்ளிகளில், மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.
  • 2,248 பள்ளிகளில் கழிவறை வசதியே கிடையாது.

குடிநீர்:
  • 31,710 பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது.
  • 4,085 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.
சுற்றுச்சுவர்:
  • 10,190 பள்ளிகளில் முழுமையான அளவிற்கு சுற்றுச்சுவர் உள்ளது.
  • 11,820 பள்ளிகளில் பகுதியாக சுற்றுச்சுவர் உள்ளது.
  • 13,785 பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை.
  • நடப்பு கல்வியாண்டில், 2,625 பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது.
நன்றி



23.8.11

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை - அமைச்சரின் அறிவிப்புகள்

Demand - School Education - Minister's Announcement

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை - அரசின் கொள்கைக் குறிப்புகள்

School Education - policy Note 2011

படைப்பாற்றல் கல்விமுறையில் வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டிக் குறிப்புகள்

General Instructions for ALM

குறுவள மைய பயிற்சி(CRC Training) - வழிகாட்டிக் குறிப்புகள்

CRC Workshop Guidelines

சமச்சீர்கல்வி அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? : முதல்வர்

சமச்சீர்கல்வி அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? குறை கூறியவர்களிடம் முதல்வர் ஆவேசம்
 
"அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி நாங்கள் கூறிய போது, யாருமே கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக, திட்டம் அமல்படுத்திய பின், இப்போது பல்வேறு குறைகளைக் கூறி அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?'' என்று, சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டிய உறுப்பினர்களிடம், முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பீம்ராவ்-மார்க்சிஸ்ட்: பட்ஜெட்டில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 4.25 சதவீதமாக உள்ளது. இதை, 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக 109 பரிந்துரைகளை, முத்துக்குமரன் குழு, முந்தைய அரசுக்கு பரிந்துரைத்தது. அதில், ஒருசில பரிந்துரைகளை மட்டுமே தி.மு.க., அரசு ஏற்றுள்ளது. அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சண்முகம்: "சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்' என்று, முதல்வர் கூறினார். ஆனால், இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று, உங்களது கட்சியைச் சார்ந்தவர்களும், மற்றவர்களும் கோர்ட்டுக்கு சென்றனர். அதன் காரணமாக, இன்று திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பீம்ராவ்: முந்தைய அரசில், துணைவேந்தர் பணியிடங்கள் பணத்திற்கு விற்கப்பட்டன. ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,விற்கு வந்தார் என்பதற்காகவே, சபாபதி மோகனுக்கு துணைவேந்தர் பதவியை வழங்கினர். உயர்கல்வியில் பெரும் ஊழல் நடந்தது. அதுகுறித்து விசாரிக்க, தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளில் ஏ.பி.எல்., திட்டம் அமலில் இருக்கிறது. இப்போது, சமச்சீர் கல்வித் திட்டம் வந்துள்ளதால், எந்த திட்டத்தை அமல்படுத்துவது என்பதில் குழப்பம் இருக்கிறது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பாட அட்டைகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் திட்டம் (ஆக்டிவ் பேஸ்டு லேர்னிங்-ஏ.பி.எல்.,) இருக்கிறது. பாடத்திட்டம் சார்ந்த கார்டுகளை அச்சடித்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் வகுப்பிற்கு கார்டுகளை அச்சடித்து விட்டனர். இதர வகுப்புகளுக்கு கார்டுகளை அச்சடிக்காமல், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மட்டும் நடவடிக்கை எடுத்தனர். பழைய பாடத் திட்டத்தின் கீழ் கார்டுகளை அச்சடித்ததில், 32 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

குரு - பா.ம.க.,: சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: இவர்களது கொள்கை, நிமிடத்திற்கு நிமிடம் மாறும்போல் இருக்கிறது. அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த முடியாது. தரத்தை உயர்த்த கால அவகாசம் தேவை. அடுத்த ஆண்டு அமல்படுத்துகிறோம் என்று கூறினோம். கம்யூனிஸ்ட், பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அதன் தலைவர்களும் கேட்கவில்லை. இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துங்கள் என குரல் கொடுத்தனர். திட்டத்தை அமல்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், இப்போது திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இப்போது, பாடப்புத்தகம் சரியில்லை; சரி செய்யுங்கள் என அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வீணடிப்பதா என்று, பலர் கேள்வி கேட்டனர்.
பாடப் புத்தகங்களின் தரத்தைப் பற்றி பத்திரிகைகளில் தினமும் செய்தி வருகிறது. காமராஜர் மறைந்த தேதியை தவறாகத் தந்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தேதியை தவறாக அச்சிட்டுள்ளனர். இந்த லட்சணத்தில் பாடப் புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்களோ என கவலையாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

நன்றி


14,377 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் : பள்ளிக்கல்வி அமைச்சர் சண்முகம் அறிவிப்பு

"பட்டதாரி ஆசிரியர்கள் 5,790 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,682 பேர் உட்பட இந்த ஆண்டு 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 

பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு நிறைவேற்ற உள்ள திட்டங்கள் பற்றி அமைச்சர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,682 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,790 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 4,342 பேர், சிறப்பாசிரியர்கள் 1,538 பேர், வேளாண் பயிற்றுனர்கள் 25 பேர் என, மொத்தம் 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
  • மாவட்ட நூலகங்களில் காலியாக உள்ள 1,353 பணியிடங்கள் நிரப்பப்படும். இதில், நூலகர் 3ம் நிலை பணியிடங்கள் 260, ஊரக நூலகர் 1,093 பணியிடங்கள் இடம்பெறும். 
  • தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 6,7, 8ம் வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிக்க, இந்த கல்வியாண்டில், 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்.
  • ஆசிரியர் பணியிடங்கள் தவிர, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 34 பேர், முதுநிலை விரிவுரையாளர் (மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) 34 பேர் என 68 பணியிடங்கள் அனுமதிக்கப்படும். 
  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள, 344 பள்ளிகளுக்கு தலா ஒரு இளநிலை உதவியாளர்களும், 544 பள்ளிகளுக்கு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் பாடத்திறனை மேம்படுத்த, 544 ஆய்வக உதவியாளர்களும் என, 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனுமதிக்கப்படும்.
  • பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற பணியாளர்களுக்கு 2 சதவீத பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல, அமைச்சுப் பணியாளர்களில் முதுகலை ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு, பணிமாறுதல் மூலம், 2 சதவீத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படும். 
  • நபார்டு திட்டத்தின் கீழ், 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 260 கோடி ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்களாகவும் மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களிலும் அந்த கல்வியாண்டிலேயே, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு எழுத அனுமதித்து, வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், பெற்றோர், முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன்மூலம், மாணவர்கள் குடும்பச் சூழ்நிலையால் இடம்பெயர நேரும் போது, இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில், எந்த பள்ளியிலும் சேர முடியும். மேலும், மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாக கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்படும்.
  • ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் கற்றல், கற்பித்தல் மிக சிறப்பாக அமையும். வகுப்பறை முழுவதும் கணினி முறையில் பயன்பெறும். முதல்கட்டமாக, ஐந்து அரசுப் பள்ளிகளில் 1.25 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்படும். 
  • தற்போதுள்ள கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிய, ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும். 
  • பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக நடத்தப்படும் சமூகநல பாதுகாப்பு சிறார் பள்ளி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நலப்பள்ளி போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்ற அரசு சலுகைகள் வழங்கப்படும்.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும். 
  • ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்த முதல்வர் அனுமதித்துள்ளார். 
  • கல்வி தகவல் மேலாண்மை முறையில், பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவை பதிவு செய்யப்படும். மேலும், அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வுபெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும்.
நன்றி


21.8.11

தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்


தமிழகத்தில் தற்போது மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதைப் போல, விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இந்தத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி, சத்தான உணவை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்தத் திட்டமும் பெரும் புரட்சி படைத்தது. இத்திட்டத்தை பல மாநிலங்களும் இன்று கடைப்பிடிக்கின்றன.

இந்தநிலையில் தற்போது இன்னொரு புதிய புரட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு வருகிறார். அது காலை உணவுத் திட்டம்.

தற்போத நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே காலை உணவுத் திட்டம் அமலில் உள்ளது. ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் என்று இதற்குப் பெயர். தற்போது இந்த வரிசையில் தமிழகமும் விரைவில் சேரவுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி மாணவ, மாணவியருக்கு காலை உணவாக பால், பன், உப்புமா உள்ளிட்டவை தரப்படும் என்று தெரிகிறது. இத்திட்டம் குறித்து தமிழக அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. திட்ட வரைவு இறுதியானவுடன் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மதிய உணவு மற்றும் சத்துணவுத் திட்டத்திற்கு தமிழகம்தான் நாட்டுக்கே முன்னோடியாகும். இந்தத் திட்டங்களால் தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. இப்போது அதே பாணியில் காலை உணவுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.

தமிழகத்தில் 1985ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தை 1995ம் ஆண்டு மத்திய அரசு ஏற்று நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2001ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இந்தத் திட்டத்தைப் பாராட்டி அனைத்து மாநிலங்களும் சத்துணவை வழங்க வேண்டும் என்று உத்தரவே பிறப்பித்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்த வரிசையில் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் அமலாகும்போது அது மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

காலாண்டு விடுமுறை நாட்கள் குறைப்பு

பள்ளிகள் திறக்க காலதாமதம், பாடங்கள் நடத்தாமை போன்ற காரணங்களால், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில், சமச்சீர் கல்வி முறை குறித்த சர்ச்சையால், பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறி மாறி சென்றதால், இறுதி தீர்ப்பு வரும் வரை, மாணவர்களுக்கு பாடம் எதுவும் நடத்தவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பின், கடந்த சில நாட்களாக பாடங்கள் நடந்து, செப்., 22ம் தேதி, காலாண்டு தேர்வு துவங்கவுள்ளது. 

வழக்கமாக செப்., 25க்குள் காலாண்டு தேர்வு முடிந்து, ஒரு வாரத்திற்கு மேல், காலாண்டு விடுமுறை அளிக்கப்படும். தற்போது செப்., 29 வரை தேர்வு உள்ளதால், செப்., 30, அக்., 1 மற்றும் 2 ஆகிய, மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அக்., 3 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

நன்றி


அரசு பள்ளிகளில் 1:35 விகிதாச்சாரப்படி ஆசிரியர்களை மாற்றியமைக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் 1:35 என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்களை மாற்றி அமைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேசிய குழந்தைகள் கட்டாயக் கல்வி ஆணையம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடந்தது. டில்லியில் இருந்து வந்த ஆணைய உறுப்பினர், ஒன்றியம் வாரியாக நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். இவர் நடத்திய ஆய்வில், பெரும்பாலான பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மாணவர்கள் வரத்து இல்லாத கிராமப்புற பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பணியாற்றி வருவதை கண்டறிந்தார். 

அரசு உத்தரவு
இதையடுத்து, தேசிய குழந்தைகள் கட்டாய கல்வி ஆணையம், பள்ளிகளில் 1:35 என்ற மாணவர்கள் விகிதத்தில் ஆசிரியர் பணியிடம் நியமிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் இந்த விகிதாச்சார முறைப்படி ஆசிரியர் பணியிடங்களை மாற்றி அமைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரிடமிருந்து தகவல் வந்துள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

நன்றி



18.8.11

காலாண்டுத் தேர்வு செப்.22-ம் தேதி தொடங்குகிறது

சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின்படி காலாண்டு தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி அன்று தொடங்கும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:  
நடப்பு கல்வியாண்டிற்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  கற்றல் மற்றும் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  காலாண்டுத் தேர்வுக்கு இருக்கக்கூடிய கால அளவை கருத்தில் கொண்டு பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுகளை எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காலாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் காலத்திலிருந்து நீட்டித்து ஒரு வார காலத்திற்குப் பின்னர் 22.9.2011 அன்று தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகள்:  

5-ம் வகுப்பு:  தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; கணிதம்: ஒன்று முதல் நான்கு வரை; அறிவியல்: இயல் ஒன்று முதல் மூன்று வரை; சமூக அறிவியல்: இயல் ஒன்று முதல் மூன்று வரை.  

6-ம் வகுப்பு:  தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; கணிதம்: இயல் 1,2,3,10. அறிவியல்: இயற்பியல் இயல் 1 மட்டும், வேதியியல் இயல் 2 மட்டும், உயிரியல் இயல் 2 மட்டும். சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 2 மட்டும், வரலாறு இயல் 2 மட்டும், புவியியல் இயல் 2 மட்டும்.  

7-ம் வகுப்பு:  தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; கணிதம்: இயல் 1, 5.1 மட்டும்,6.1 மட்டும்; அறிவியல்: வேதியியல் இயல் 9 மட்டும், உயிரியல் இயல் 1 மட்டும். சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1 மட்டும், வரலாறு இயல் 1 மட்டும், புவியியல் இயல் 1 மட்டும்.  

8-ம் வகுப்பு:  தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; கணிதம்: இயல் 1, 5.1, 5.2, 6.1, 6.2 மட்டும்; அறிவியல்: இயற்பியல் இயல் 12 மட்டும், வேதியியல் இயல் 9 மட்டும் உயிரியல் இயல் 1 மட்டும். சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1 மட்டும், வரலாறு இயல் 1 மற்றும் 2 மட்டும், புவியியல் இயல் 1 மற்றும் 2 மட்டும்.  

9-ம் வகுப்பு:  தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; கணிதம்: இயல் 1,2,3, 4.1 முதல் 4.5 வரை, 7.1, 9.1, 10.1 மட்டும். அறிவியல்: இயற்பியல் இயல் 14 மட்டும், வேதியியல் இயல் 9,10 மட்டும். உயிரியல் : இயல் 1,2 மட்டும். சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1 மட்டும், வரலாறு இயல் 1 மட்டும், புவியியல் இயல் 1, 2 மட்டும், பொருளியல் : இயல் 1 மட்டும்.  

10-ம் வகுப்பு:  தமிழ்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; ஆங்கிலம்: இயல் ஒன்று மற்றும் இரண்டு; கணிதம்: இயல் 1 முதல் 2.5 வரை. இயல் 4.1 முதல்.4.7 வரை. இயல் 5.1 முதல் 5.5 வரை. இயல் 6.1 மட்டும். இயல் 9.1, 9.2, 9.3 மட்டும். இயல் 10.1, 10.2 மட்டும். அறிவியல்: இயற்பியல் இயல் 14,15 மட்டும், வேதியியல் இயல் 9, 10 மட்டும், உயிரியல் இயல் 1,2 மட்டும். சமூக அறிவியல்: குடிமையியல் இயல் 1, 2 மட்டும், வரலாறு இயல் 1,2 மட்டும், புவியியல் இயல் 1,2, மட்டும், பொருளியல் : இயல் 1 மட்டும்.

நன்றி

   Quarterly Syllabus

குறுவள மைய பயிற்சி(CRC Training) - சுற்றறிக்கை

CRC Meeting

17.8.11

காலாண்டுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் காலாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2-வது வாரம் முடிய, ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் பாடங்களை வைத்து காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வழக்கமாக காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2-வது வாரத்தில் நடைபெறும். இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 15-க்குப் பிறகே புத்தகங்கள் வழங்கப்படுகிறது. எனவே, காலாண்டுத் தேர்வு தள்ளிப்போக வாயப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், நடத்தப்படும் பாடங்களை வைத்தே தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

 

சமச்சீர் புத்தகம் தட்டுப்பாடு: மாவட்டங்களுக்கு தேவைப்பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு

சமச்சீர் புத்தகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் தேவை குறித்து பட்டியல் அனுப்பும் படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் நடக்கவுள்ளதால் புத்தகங்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சமச்சீர் புத்தகங்களை ஆக., 15 ல் மாணவர்களுக்கு வினியோகித்து 16 ல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு புத்தகங்களுடன் வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது பள்ளிகளில் சமச்சீர் புத்தகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 

புத்தகங்கள் அச்சகங்களில் அச்சிடப்பட்டு அங்கிருந்து அரசு குடோன்களுக்கு அனுப்பப்பட்டு, கல்வி மாவட்டங்களில் உள்ள ஸ்டாக் பாய்ண்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. தற்போது ஸ்டாக் பாயிண்டுகளிலும், அரசு குடோன்களிலும் உள்ள புத்தகங்கள் முழுமையாக பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. சில வகுப்புகளுக்கு சில புத்தகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 


லாரி ஸ்டிரைக் நடக்கவுள்ளதால் புத்தகங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அந்தந்த மாவட்டங்களில் சப்ளை செய்யப்பட்ட புத்தகங்கள் எவ்வளவு. இன்னும் தேவைப்படும் புத்தகங்கள் எவ்வளவு என பட்டியல் அனுப்பும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை ஓரிரு நாளில் சரியாகிவிடும்,'' என்றார்.

நன்றி


சமச்சீர் கல்வி - புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. அதேநேரத்தில், புத்தகங்களை விநியோகிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது.இதுவரை மொத்தம் 70 சதவீதப் புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வியை 10 நாள்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கிடங்குகள், கல்வி மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்தப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்தப் பகுதிகளை நீக்கும் பணிகள் அந்தந்தப் பள்ளிகளில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகள் குறித்து தலைமையாசிரியர்கள் கூறியது:
சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு எடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விநியோகிக்கப்பட்டது. பல்வேறு வகுப்புகளுக்கான புத்தகங்கள் இன்னும் வரவேண்டியுள்ளது. புத்தகங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளும் தொடர்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 90 சதவீத சமச்சீர் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள புத்தகங்களை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அச்சடித்தல், பைன்டிங் செய்தல், கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. புத்தகங்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரிக் பள்ளிகளுக்கு புத்தகங்கள் இல்லை
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வட்டார அலுவலகங்களில் சமச்சீர் பாடப்புத்தகங்களை வாங்குவதற்கு காசோலைகளுடன் தனியார் பள்ளி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை திரண்டனர். அனைத்துப் புத்தகங்களுக்கும் பள்ளி நிர்வாகிகள் காசோலைகளைச் செலுத்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு உள்ளிட்ட ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தயாராகி வருவதாகவும், புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்க ஒரு சில நாள்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

நன்றி


15.8.11

கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு கொடி ஏற்றும் நேரம் மாற்றம்

சுதந்திர தினவிழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் 9.30 மணிக்கு கொடி ஏற்ற வேண்டும் என கடைசி நேரத்தில் உத்தரவிடப்பட்ட தால், பள்ளி நிர்வாகத்தினர் தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

ஆண்டுதோரும் சுதந்திர தினவிழாவை ஒட்டி அனைத்து வகையான அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள், தேசியக் கொடி ஏற்றி வைப்பது வழக்கம்.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக் கொடியை முக்கிய விருந்தினர் ஒருவர் தான் ஏற்றி வைப்பது உண்டு. கடந்த ஆண்டை போல, காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் நேரத்தை அந்தந்த முக்கிய பிரமுகர்களிடம், பள்ளிகள் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்நிலையில், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கொடி ஏற்றி வைக்கிறார் என, அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. கோட்டையில் கொடி ஏற்றும் அதே நேரத்தில் தான், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொடி ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு நேற்று முன்தினம் இரவில் தான், பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ஏற்கனவே முக்கிய விருந்தினர்களுக்கு, 8 மணிக்கு கொடி ஏற்றும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களை ஒரு மணிநேரம் தாமதமாக வரும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நன்றி


இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஸ்தாபன தினம்


இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட கிளை சார்பில் ஸ்தாபன தினம் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் பாஸி தலைமை வகித்தார். 
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் வள்ளிவேலு முன்னிலை வகித்தார். இயக்க கொடியினை இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் ஏற்றி வைத்தார்.

கோரிக்கைகள் குறித்து முன்னாள் எஸ்டிஎப்ஐ தலைவர் ஆதித்தன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராபர்ட் ஜேம்ஸ், இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் எட்வின் பிரகாஷ், பால் ஜெபஸ்டின், ராபின்சன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சேவியர் ஆகியோர் பேசினர். 

இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் சேம்பிரின்ஸ் குமார் நன்றி கூறினார். 

நன்றி


14.8.11

கன்னியாகுமரி மாவட்டம் - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் 2011 - 12

Promotion Panel KK

தேசியத் திறனறித் தேர்வு

National Talent Search Examination

சமச்சீர் கல்வி பாடங்கள் ABL, SALM & ALM முறைகளில் கற்பிக்க வேண்டும்

SSA - SPD Proceedings - Samacheerkalvi

12.8.11

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிறுவன நாள்

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிறுவன நாள் இன்று 12-07-2011 கடைபிடிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் அமைப்புகள்(TIAS, TNPTF, TNPGTA) சார்பில் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கொடி மாலை 5 மணிக்கு ஏற்றப்படுகிறது.  தொடர்ந்து "டீம் இல்லத்"தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தலைமை: க. இசக்கியப்பன், தஇஆச, மாநில அமைப்புச் செயலாளர்
.

11.8.11

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் பணியிடம் ஒப்பளிப்பு விவரங்கள் கோருதல் - இணை இயக்குநர் செயல்முறைகள்

SGT to BTpromotion Director Proceedings

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள்15ம் தேதி மாணவர்களுக்கு வினியோகம்

சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டாலும், 15ம் தேதிக்குப் பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. 

சென்னை உட்பட, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. பள்ளி சார்பாக ஆசிரியர்கள், பிரதிநிதிகள் தங்களது பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்களை, வாங்கிச் சென்றனர். பள்ளிகளுக்கு புத்தகம் சென்றடைந்தாலும், மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பின்னரே வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

இதற்கு காரணம், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில், முன்னாள் முதல்வர் குறித்த தகவல்கள் உட்பட, பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, ஒன்று முதல் 6ம் வகுப்பு பாடப் புத்தகங்களில், முன்னாள் முதல்வர் குறித்த தகவல்கள், ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்பட்ட பின்னரே வழங்கப்பட்டது. இதற்கு பல லட்சம் ரூபாய் செலவானது.

இந்நிலையில், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 9 கோடி புத்தகங்கள் உள்ளன. இவற்றில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் குறித்த தகவல்களை லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மறைப்பதா அல்லது அந்த பக்கங்களை அகற்றி வழங்குவதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆலோசனைக்குப் பின், 15ம் தேதிக்குப் பின்னர் தான் மாணவர்கள் கைகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் சேரும். 

அதுவரை, அவர்கள் காத்திருக்க வேண்டியது தான்.

10.8.11

தனி ஊதியம் ரூ. 750/-ஐ ஜனவரி மாத காலாண்டின் ஆண்டு ஊதிய உயர்வுக்கும் பதவி உயர்வு ஊதிய நிர்ணயத்திற்கும் கணக்கில் கொள்ளுதல் - நிதித்துறை கடிதம்

pp 750 letter 19-07-2011

சமச்சீர் கல்வி - உச்ச நீதிமன்ற தீர்ப்பு

Samacheerkalvi Final Supreme Court Judgement

சமச்சீர் கல்வி இதுவரை...

சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

மாநில அரசு கல்வி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி முறைகளை ஒன்றாக்குவதே இதன் முக்கிய நோக்கம். 
  • 2010: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் அறிக்கை மற்றும் கல்வியாளர்கள் குழுவின் ஆய்வு அறிக்கையை அடுத்து சமச்சீர் கல்வி சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்.
  • 2010 -11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டது. இக்கல்வியை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
  • 2011 மே 11: தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது.
  • மே 22: சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அ.தி.மு.க., அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
  • ஜூன் 7: சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். இதன்படி இந்தாண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு. பல்வேறு திருத்தங்களுடன் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., தகவல்.
  • ஜூன் 8: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.
  • ஜூன் 10: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை. மேலும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புடன் சேர்த்து ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.
  • ஜூன் 13: சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு. 
  • தங்களது மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.
  • ஜூன் 15: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு இந்தாண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் அதை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட் அதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
  • ஜூன் 17: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தலைமை செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
  • ஜூலை 5: தமிழக அரசின் நிபுணர் குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
  • ஜூலை 18: அறிக்கையை விசாரித்த ஐகோர்ட் இந்தாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு.
  • ஜூலை 19: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
  • ஆக. 4: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
  • ஆக. 8: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
  • ஆக. 9: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தாண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
  • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து சமச்சீர் கல்வி இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., அறிவிப்பு. 
 .

சமச்சீர் கல்வி உச்ச நீதிமன்ற தீர்ப்பு - முழு விவரம்

சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' நேற்று தீர்ப்பு வெளியிட்டது. 

தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, தீர்ப்பளித்த ”ப்ரீம் @கார்ட் "பெஞ்ச்' , இதற்கு, 25 காரணங்களையும், பட்டியலிட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு
  • தமிழகத்தில், புதிய அரசு பதவியேற்ற பின், மே 22ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய தினம், அதாவது மே 21ல், பழைய கல்வி முறையில் பாடப் புத்தகங்களை வெளியிட டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது, சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் கூட்டியே அரசியல் முடிவு எடுக்கப்பட்டது என்பதை காட்டுகிறது.
  • சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்பதற்கு அடிப்படையாக, அரசு முன் எந்த ஆவணமும் இல்லை. சமச்சீர் பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை.
  • ஆட்சியில் இருந்த அரசியல்கட்சித் தலைவரின் (கருணாநிதி) சொந்த கொள்கையை விளம்பரப்படுத்தும் வகையில், தனிப்பட்ட புகழ் பாடும் வகையில் பாடப் புத்தகங்களில் சில பகுதி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
  • அத்தகைய பகுதிகளை நீக்கியிருக்கலாம். அதற்குப் பதில், காலவரையற்ற முறையில் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். 
  • பொருளாதார, சமூக, கலாசார பாகுபாடு பார்க்காமல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வர, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 
  • ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு, 2011-12ம் ஆண்டிலும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது என சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்பதால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை தவிர்க்க, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. 
  • ஐகோர்ட் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்தீர்ப்பளித்துள்ளது. 
  • சட்டத் திருத்தம் மூலம் இந்த தீர்ப்புகளை ரத்து செய்யும் விதத்தில், சட்டசபையை அனுமதிக்க முடியாது. 
  • ஏற்கனவே, முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வகையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, இந்த வகுப்புகளைப் பொறுத்தவரை, சமச்சீர் கல்வி சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. 
  • கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் வகை செய்யப்பட்டபடி, அட்டவணையை மாற்றி உத்தரவுகளை பின்பற்றியிருக்கலாம். 
  • சட்டத்தில் கூறியுள்ள பிரிவுகளை அமல்படுத்த, நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்க, சமச்சீர் கல்வி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 
  • பாடப் புத்தகங்கள் தரக் குறைவாக இருக்கிறது என, பலர் முறையீடுகள் செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • மே 16ம் தேதி புதிய அரசு பதவியேற்றது. அதன்பின், சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள், அமைப்புகள் தரப்பில் அளிக்கப்பட்ட முறையீடுகளை, 17, 18ம் தேதிகளில் அரசு பெற்றுள்ளது. 
  • இவ்வாறு முறையீடுகள் செய்த பெரும்பாலான அமைப்புகள், சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து, அதில் தோல்வியடைந்தவர்கள். 
  • இந்த முறையீடுகள் எல்லாம் விசாரணைக்கு உகந்ததல்ல. அரசே இந்த முறையீடுகளை அனுமதித்திருக்கக் கூடாது. 
இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

நன்றி


சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் துவங்கியது : இன்று முடிக்க அதிகாரிகள் தீவிரம்

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று மாலை துவங்கியது. 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து, அரசு வழங்கும் உத்தரவின் அடிப்படையில் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுச்செல்ல, குறிப்பிட்ட மையங்களுக்கு தயாராக வருமாறு, அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
 
அதன்படி, சென்னையில் நேற்று பல பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை வாங்க காத்திருந்தனர். எனினும், மாலை 4 மணி வரை எந்தவித உத்தரவும் வராததால், பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யவில்லை. 4.30 மணிக்கு, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டதும், காத்திருந்த ஒரு சில பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், மற்ற இடங்களிலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறியதாவது

சென்னையில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. நான்கு மாவட்டங்களிலும், தலா ஒரு மையத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை (நேற்று) தான், பாடப்புத்தகங்கள் வழங்க அனுமதி கிடைத்தது. அதன்படி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த பல்வேறு பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகிய அனைத்திற்கும், நாளை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். ஒவ்வொரு பள்ளியிலும், அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் குறித்த விவரங்களை ஏற்கனவே நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனடிப்படையில், பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். வினியோக மையத்தில் இருந்து, பள்ளி பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, அதன்பின் மாணவர்களுக்கு வழங்குவர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அவர்கள், விலைக்குத் தான் வாங்க வேண்டும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு நாகராஜ முருகன் கூறினார்.
அனைத்துப் பள்ளி பிரதிநிதிகளும், இன்று மதியத்திற்குள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, பள்ளி முடிவதற்குள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இன்றைக்குள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைத்துவிடும். இதன்மூலம், இரண்டு மாதங்களாக நீடித்துவந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

சென்னையில் சமச்சீர் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படும் மையங்கள் விவரம்
சென்னையில், நான்கு இடங்களில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி-ராயபுரம் (சென்னை-கிழக்கு)
2. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் (சென்னை-வடக்கு)
3. எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி-சேத்துப்பட்டு (சென்னை-தெற்கு)
4. ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை (சென்னை-சென்ட்ரல்)
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், சம்பந்தபட்ட மையத்திற்குச் சென்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.



நன்றி:


9.8.11

சமச்சீர் புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்க தயாராக உள்ளது: பள்ளிக் கல்வி இயக்குனர்

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கத் தயாராக இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படு்தத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும் தெளிவடைந்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு உடனே அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதையடுத்து சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோக்கிக்கும் பணியைத் துவங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி கேட்டதற்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது,

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அவற்றை ஏற்கனவே அந்தந்த மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசவிருக்கிறேன். இன்னும் 10 நாட்களுக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே புத்தகங்களை வினியோகித்துவிடுவோம் என்றார்.


நன்றி

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி சமச்சீர் கல்வி நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும்- ஜெயலலிதா


உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும். இன்னும் 10 நாட்களில் இத்திட்டத்தை அமல்படுத்தி புத்தகங்களையும் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் நிலை குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் இன்று சட்டசபையில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார் முதல்வர் ஜெயலலிதா.

அப்போது அவர் கூறுகையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே தமிழகத்தில் அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு ஏற்கிறது. அதன்படி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நன்றி

சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி

பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தது. மேலும் நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறும் அது உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கிதலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பு, பெற்றோர்கள் தரப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பு என முத்தரப்பில் வாதங்கள் நடந்தன. கடந்த வியாழக்கிழமையன்று வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா மற்றும் செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி:

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை கோர்ட் ஏற்கிறது. மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சமச்சீர்கல்வித் திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வி அமலாகிறது

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

3 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு

3 பேர் அடங்கிய பெஞ்ச் என்பதால் இருவிதமான தீர்ப்பு வெளியாகலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் ஒரே மனதாக, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் இழுபறி தவிர்க்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

சமச்சீர் கல்வியே தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்றுள்ளனர். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வாரம் - ஆகஸ்ட் 12-18

Stfi Letter 02.08

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்