இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட கிளை சார்பில் ஸ்தாபன தினம் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் பாஸி தலைமை வகித்தார்.
முதுகலை  பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் வள்ளிவேலு முன்னிலை  வகித்தார். இயக்க கொடியினை இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர்  இசக்கியப்பன் ஏற்றி வைத்தார். 
கோரிக்கைகள்  குறித்து முன்னாள் எஸ்டிஎப்ஐ தலைவர் ஆதித்தன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்  சங்க மாவட்ட தலைவர் ராபர்ட் ஜேம்ஸ், இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில்  எட்வின் பிரகாஷ், பால் ஜெபஸ்டின், ராபின்சன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி  ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சேவியர் ஆகியோர் பேசினர். 
இடைநிலை  ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் சேம்பிரின்ஸ் குமார் நன்றி கூறினார். 



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக