சமச்சீர்  பாடத்திட்டத்தின் கீழ் காலாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது. செப்டம்பர்  2-வது வாரம் முடிய, ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் பாடங்களை வைத்து  காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
வழக்கமாக காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2-வது  வாரத்தில் நடைபெறும். இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 15-க்குப் பிறகே  புத்தகங்கள் வழங்கப்படுகிறது. எனவே, காலாண்டுத் தேர்வு தள்ளிப்போக  வாயப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், நடத்தப்படும் பாடங்களை வைத்தே  தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக