தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.11.10

திறந்த நிலை பல்கலை. பட்டங்கள் அரசுத்துறைகளில் செல்லாது; தேர்வாணையத்தில் செல்லுகிறது: அரசு ஊழியர்கள்-இளைஞர்கள் குழப்பம்

அரசுத்துறைகளில் செல்லாத திறந்த நிலை பல்கலைக்கழகப் பட்டம், அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் செல்லுபடியாகிறது. இந்த முரண்பாடுகள் அரசு ஊழியர்கள் மற்றும் பட்டதாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. 

பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் டூ அதற்குப் பிறகு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றால் செல்லும். ஆனால், பள்ளிப் படிப்பை முறையாக முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் எம்.ஏ., போன்ற பட்டங்களைப் பெறுவதை அடிப்படை பட்டப்படிப்பாகக் கருத முடியாது என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச்  சீர்திருத்தத்துறை அதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு தமிழகம்  முழுவதும் உள்ள அரசுத்துறைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டு வருகின்றனர். 

தலைமைச் செயலகத்தில்: தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் என பல்வேறு நிலைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களில், உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு மூலம் பிரிவு அலுவலர் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 205-க்கும்  மேற்பட்ட உதவிப்பிரிவு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் இருந்தாலும் அவர்களில் 40-க்கும் அதிகமானோர் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெற்றவர்கள். அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்தாலும், பதவி உயர்வுக்கு அவர்கள் பரிசீலிக்கப்படவில்லை. இது, தலைமைச் செயலக ஊழியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது கோபத்துக்கும், கொந்தளிப்புக்கும் காரணமாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைச் சுட்டுகிறார்கள்.

பணியாளர் தேர்வாணையத்தில்: பத்தாம் வகுப்புகூட படிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சார்புச் செயலாளராக பணியாற்றி வந்த இருவருக்கு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலையில் உள்ள இருவருக்கு அரசின் எந்த உத்தரவையும் பொருட்படுத்தாமல் பதவி உயர்வு வழங்கியுள்ளது, சாதாரண நிலையில் உள்ள அரசு ஊழியர்களையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. 

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து, தலைமைச் செயலகத்தில் தட்டச்சர் என பதவியில் சேர்ந்து உதவிப் பிரிவு அலுவலர் நிலைக்கு உயர்ந்து, பிரிவு அலுவலர் ஆகி விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஊழியர்களுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் செல்லாது என்ற உத்தரவு பேரிடியாக இருந்தது. ஆனால், இந்த உத்தரவு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மட்டும் பின்பற்றப்படாமல் இருப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தன்னாட்சிபெற்ற அமைப்பு என்பதால் அரசின் உத்தரவு தேர்வாணையத்துக்குப் பொருந்தாதா என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளைஞர்கள் எதிர்பார்ப்பு: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு தேர்வாணையத்தில் பதவி உயர்வு வழங்கியிருப்பதன் மூலம், அது செல்லுமா என்ற கேள்வியை போட்டித் தேர்வுகள் எழுதும் இளைஞர்கள் எழுப்பியுள்ளனர். 

நன்றி:

 

மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை

அரசாணை எண்: 189 பள்ளிக் கல்வி(சி2)த் துறை நாள்: 12-07-2010                                                            

25.11.10

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி - அரை நாள் அனுமதி அரசாணை

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு  பணிக்காலத்தில் அரை நாள் அனுமதி அளிக்கப்படும். 


அரசாணை எண்: 164 நாள்: 22 - 11 - 2010 
.

24.11.10

மக்கள்தொகை கணக்கெடுப்பு - ஊக்கத்தொகை டிசம்பர் முதல் வாரத்திற்குள் வழங்கப்பட்டுவிடும்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 முடிய  இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது,  பொதுமக்கள் தட்டிக்கழிக்காமல் சரியான தகவல்களைத் தெரிவிக்குமாறு மக்கள்தொகை  கணக்கெடுப்புப் பணிகள் இயக்குநர் (சென்னை) எஸ். கோபாலகிருஷ்ணன் கேட்டுக்  கொண்டுள்ளார். 

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி  குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:  

கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் முதல் கட்டமாக வீடு மற்றும் மக்கள்தொகை  கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்போது அதை அடிப்படை தகவலாகக் கொண்டு  2-வது கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 ஆம் தேதி முடிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இந்தக்  கணக்கெடுப்பின்போது தெரியவரும் மக்கள்தொகையானது அதிகாரபூர்வ மக்கள்தொகையாக அறிவிக்கப்படும். 

இந்தக் கணக்கெடுப்பின்போது சமுதாயத்தில் உள்ள எவரும் விடுபடாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும். கணக்கெடுப்புக் காலத்தில் விடுதிகள், இல்லங்கள் உள்ளிட்ட  தங்கும் இடங்களில் உள்ளவர்களையும், சாலையோரம் வசிப்போரையும் அவர்கள்  அங்கேயே ஒரு மாத காலம் தங்கி இருப்பார்களானால் அவர்களையும் கணக்கெடுக்க  வேண்டும். துறைமுக நகரங்களில் பிப்ரவரி 28 அன்று இரவு கப்பலில் தங்கி இருக்கும்  வெளிநாட்டவர்களையும் கணக்கெடுக்க வேண்டும். அவர்கள் வேறு ஏதேனும் இடத்தில்  நடந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களை விட்டுவிடலாம். இந்தக் கணக்கெடுப்பில் ஆண், பெண் மட்டுமன்றி திருநங்கைகளையும் கணக்கெடுக்க  வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகளையும் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும்.  மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச்செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு  அவசியமாகிறது. எனவே, கணக்கெடுப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். 

மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்ட வீடுகளில் நீல வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்தப் பயிற்சிக்கு பின்னர் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும்  முதன்மை பயிற்சியாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரியில் அந்தந்த வட்டம் மற்றும்  நகராட்சிப் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 

முதல் கட்ட கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அதற்கான ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதை வழங்குவதற்கான ஆணையை அரசு வழங்கியுள்ளது. எனவே, டிசம்பர் முதல் வாரத்திற்குள் அந்த தொகையை அனைவருக்கும் வழங்கிவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் இரண்டாவது கட்ட கணக்கெடுப்புப்  பணியை உற்சாகமாக மேற்கொள்வார்கள். 

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு  பணிக்காலத்தில் அரை நாள் அனுமதி அளிக்கப்படும். ஆசிரியர்களை கணக்கெடுப்புப்  பணிக்கு அனுப்பாத பள்ளிநிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 

மக்கள்தொகை கணக்கெடுப்புப்  பணியை மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சி ஆணையரும், நகராட்சி, பேரூராட்சிப்  பகுதிகளில் நகராட்சி ஆணையர்களும், கிராமப்புறங்களில் அந்தந்த வட்டாட்சியர்களும் மேற்பார்வை செய்வார்கள். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஊழியர்கள் வீடுகளுக்கு  வரும்போது அவர்களை தட்டிக் கழிக்காமல் தேவையான அனைத்து தகவல்களையும்  சரியான முறையில் தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  அப்போதுதான் கணக்கெடுப்பு துல்லியமாக அமையும் என்றார். 

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மு. ஜெயராமன் (திருநெல்வேலி), சி.என். மகேஸ்வரன் (தூத்துக்குடி), ராஜேந்திர ரத்னூ (கன்னியாகுமரி), மாவட்ட வருவாய்  அலுவலர்கள் துரை ரவிச்சந்திரன் (தூத்துக்குடி), கலைச்செல்வன் (கன்னியாகுமரி),  சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் வீரராகவராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன், கோட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வி  (திருநெல்வேலி), சேதுராமன் (தென்காசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

22.11.10

மேலவை: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

மேலவைத் தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது. 

டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

எங்கெங்கு வைக்கப்படும்: மேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க 3 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேரும், ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க 72 ஆயிரம் பேரும் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் சென்னையில் மாநகராட்சி அலுவலகம், அதன் மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் தாலுகா அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.

இறுதி பட்டியல்: டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கும். டிசம்பர் 29-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதிப் பட்டியல் வெளியானால் மேலவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாரானதாக அர்த்தம். ஏனென்றால், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு இறுதியாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 78 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் 26 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமனம் செய்வார். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தலா ஏழு தொகுதிகளுக்கு (மொத்தம் 14) வாக்களிப்பர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேரும் தேர்வு செய்யப்படுவர்.

நன்றி: 

20.11.10

"டிட்டோஜாக்" உண்ணாவிரத போராட்டம் வெல்ல "தஇஆச" வாழ்த்து

ஒரு நபர் குழு அறிக்கையை கண்டித்து, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 20 - 11 - 2010 சனிக்கிழமை மாநில அளவில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 2006ல், மத்திய அரசு நியமித்த ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 9,300; தர ஊதியம்(கிரேடு பே) ரூ.4,200 ரூபாய் என நிர்ணயம் செய்தது.

மத்திய அரசு வழங்கும் சம்பளத்தில் சிறிதளவும் குறைவு இன்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால், அலுவலர் குழு  தமிழகத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5,200; தர ஊதியம் ரூ.2,800 என குறைவாக நிர்ணயம் செய்தது. இது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இப்பிரச்னையை தீர்க்க ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது. ஒரு நபர் குழு அறிக்கையிலும், ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை கண்டித்து, மாநில அளவில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

போராட்டம் வெல்ல "தஇஆச"-வின் வாழ்த்துகள். 
.

16.11.10

ஆர்வமிக்க பட்டதாரி-ஆசிரியர் தொகுதிகள் எவை? தேர்தல் ஆணையம் தகவல்

மேலவைத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமிக்க பட்டதாரிகள்-ஆசிரியர்கள் எந்தத் தொகுதியில் உள்ளனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 48,741 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேற்கு பட்டதாரி தொகுதியைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவுக்கே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. நவம்பர் 22-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பின், டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு பட்டியலில் திருத்தங்கள், சேர்ப்பு போன்ற பணிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்படும்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்கிற விவரத்தை தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை பட்டதாரி தொகுதியில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்) 47,880 பேரும், வடக்கு தொகுதியில் (வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை) 43,958 பேரும், வடக்கு மத்திய தொகுதியில் (விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்) 48,168 பேரும், மேற்கு தொகுதியில் (ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர்) 32,031 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.கிழக்கு மத்திய தொகுதியில் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை) 43,836 பேரும், தெற்கு மத்திய தொகுதியில் (திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்) 48,741 பேரும், தெற்கு தொகுதியில் (தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) 47,067 பேரும் மனு செய்துள்ளனர். மொத்தமாக, 3 லட்சத்து 11,681 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர் தொகுதி: பட்டதாரி தொகுதிகளுடன் ஒப்பிடும் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மிகக் குறைவான ஆசிரியர்களே விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னை தொகுதியில் 10,582 பேரும், வடக்கு தொகுதியில் 14,651 பேரும், வடக்கு மத்திய தொகுதியில் 9,938 பேரும், மேற்கு தொகுதியில் 6,935 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.கிழக்கு மத்திய தொகுதியில் 8,603 பேரும், மத்திய தெற்கு தொகுதியில் 7,927 பேரும், தெற்கு தொகுதியில் 13,441 பேரும் மனு செய்துள்ளனர். ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க மொத்தமாக 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் தொகுதிகளைப் பொறுத்தவரையில் வடக்கு தொகுதியில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

நன்றி: 

 

10.11.10

சென்சஸ்(2011) 2ம் கட்ட பணி : பிப். 9 ல் துவங்கி 28ல் முடிவு

மக்கள் தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்-2011) 2ம் கட்ட பணிகள் வரும் பிப்.9ல் துவங்குகிறது. 

சென்சஸ் 2011ல் முதல்கட்ட பணியில் வீட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இப்பட்டியல் மாநில தலைநகர்களில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகங்களில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. 

2ம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிகிறது. 

பிப். 28 மாலை 5 மணி முதல் இரவு முழுவதும் வீடுகள் இல்லாதவர்கள் குறித்த சர்வே நடக்கிறது. 

மார்ச் 1 முதல் 5 வரை மறு சோதனை பணி நடக்கிறது. 

இப்பணியில் ஈடுபட உள்ள கணக்கீட்டாளர்களுக்கு சிறப்பு பயிற்சி தர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: 

இம்மாத இறுதிக்குள் சென்சஸ் உழைப்பூதியம்

முதல் கட்ட சென்சஸ் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது. 

சென்சஸ்-2011 பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பணி, கடந்த ஜூலையில் முடிந்தது. இதில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு, இதுவரை உழைப்பூதியம் வழங்கவில்லை. 

இரண்டாம் கட்ட சர்வே வரும் பிப்., 9ல் துவங்குகிறது. இப்பணி முழுமையாக நடக்க, முதல் கட்ட சர்வேக்கான உழைப்பூதியம் தருவது அவசியம் என, அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் உழைப்பூதியம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, இப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. 


நன்றி:

 

மேலவை தேர்தல் வாக்காளர்களாக 72 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்

மேலவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 861 பட்டதாரிகளும், 72 ஆயிரம் ஆசிரியர்களும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான தேர்தலில், பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த மாதம் முதல் தேதி துவங்கியது. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த 6ம் தேதி வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களை பெற கடைசி நாளான 6ம் தேதி வரை, பட்டதாரிகள் தொகுதிக்கு மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 861 பேரும், ஆசிரியர்கள் தொகுதிக்கு 72 ஆயிரத்து 77 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.


நன்றி:
 
 

தஇஆச தொடுத்த வீட்டு வாடகைப் படி வழக்கு - தீர்ப்பு முழு விவரம்


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 08/10/2010

CORAM

THE HONOURABLE MR. JUSTICE K. CHANDRU


W.P.(MD)NO.9631 of 2010
and
M.P.(MD)NOS.1 to 6 of 2010

Tamilnadu Edainilai Aasiriar Sangam
(Regd.No.99/87)
18,Sri Nagar, Annachathiram,
Kadayakudi Post,
Pudhukottai-622 003
rep. through its District Secretary,
Thiyagarajan                ..  Petitioner

Vs.

1.The District Collector,
   Trichy District,
   Trichy.


2.The District Treasury Officer,
   Trichy.


3.The Sub Treasury Officer,
   Thuraiyur,
   Trichy District.            ..  Respondents

This writ petition has been preferred under Article 226 of the Constitution of India praying for the issue of a writ of certiorarified mandamus to acll for the records relating to the proceedings of the third respondent in Na.Ka.2329/09/10A, dated 8.7.2010, to quash the same and to forbear the respondents from recovering the amount paid as house rent allowance as admissible to Grade-II Towns from the teachers within limits of Thuraiyur Municipality.


For Petitioner     ... Mr.J.Ashok


For Respondents     ... Mrs.Chellamal Moorthy, AAG
                                         assisted by Mr.S.C.Herold Singh, GA
- - - -

ORDER:


Heard both sides.
    
2. The petitioner is registered Association of Secondary Grade teachers with registration No.99/87 in Pudukkottai District, represented by its District Secretary. The Secretary himself claims to be one such Secondary Grade teacher. In the present writ petition, they have challenged the proceedings issued by the third respondent, i.e. Sub Treasury Officer, Thuraiyur, Tiruchirapalli District, dated 8.7.2010 and after setting aside the same, seeks to forbear the respondents from recovering the amount paid as House Rent Allowance as admissible to Grade-II Towns from the teachers who are residing within the limits of Thuraiyur Municipality.

3. The case of the petitioner was that Thuraiyur Municipality was upgrated as Selection Grade Municipality from Grade II  with effect from 2.12.2008. According to the petitioner, the Government of Tamil Nadu constituted a one man committee to examine the scope of upgradation of certain places to become eligible for Hour Rent Allowance, vide G.O.Ms.No.1267, Finance Department, dated 8.12.1985. The Government on getting a report of one man committee, vide G.O.Ms.No.772, Finance (Pay Cell) Department, dated 22.08.1986 directed Grade II Towns and the areas surrounding to 8 Kms. radius from the town limits will be taken for the grant of HRA as admissible to Grade II Towns. If an area within the radius of 8 Kms. falls within a part of a Panchayat Union, then the entire panchayat union shall be taken for the purpose of giving HRA as admissible to Grade II Towns. The said Government Order came into force with effect from 1.4.1986. 


4. It is pursuant to the said G.O., a circular letter, dated 17.9.1986 was addressed to all District Collectors requesting them to identify and notify the panchayat unions that falling within the Grade I(a), Grade I(b) and Grade II places for eligibility to draw the GRA in terms of the Government Order and in consultation with the Divisional Engineer, Highways and Rural Works. Even after Thuraiyur Municipality was upgraded from Third Grade to Second Grade municipality vide G.O.Ms.No.85, dated 22.5.1998, the teacher members of the petitioner association who are working within the Town limits of Thuraiyur minicipality were receiving only unclassified HRA eligible to Third Grade Municipality. The petitioner made several representations for enhancement of HRA
as per the Government Order.

5. Subsequently, by G.O.Ms.No.238, Municipal Administration and Water Supply (Election) Department, dated 2.12.2008, the Thuraiyur Municipality was upgraded as Selection Grade Municipality from Grade II with effect from 2.12.2008. The petitioner made a representation, dated 12.10.2009 to the first
and second respondents for the enhancement of HRA eligible to II Grade Municipality. They had also produced a certificate issued by the Sub Divisional Engineer, Highways Department, Thuraiyur to show that villages such as Madurapuri, Kollapatti, Venkatesapuram, Govindapuram, Murugoor, Kallipatti and Kilakkuvadi are coming within the radius of 8 Kms. from the Thuraiyur Municipality limits and that they are eligible to get HRA admissible to Grade II Towns. The first respondent District Collector was also directed to issue necessary clarification.


6. The first respondent by his proceedings, dated 23.11.2009 identified Thuraiyur Panchayat Union and Uppiliyapuram Panchayat Union and Thuraiyur town that they are eligible to get HRA as Thuraiyur Municipality was upgraded as Selection Grade Municipality. Pursuant to the clarification issued by the
District Collector, the teachers working in various Government schools in Thuraiyur Panchayat union, Uppiliyapuram Panchayat union and Thuraiyur Town were paid HRA as per the Government Order. But, however, by proceedings, dated 8.7.2010 issued by the third respondent, it was informed that drawal of HRA was inadmissible. The Regional Joint Director, Treasury and Accounts Department by his D.O. letter dated 8.6.2010 as well as Principal Secretary and Commissioner, Treasury and Accounts Department, by his letter dated 25.6.2010 had informed that only when there is an order of the Government sanctioning HRA, the amount can be drawn as HRA as admissible to Grade II Towns. Therefore, whatever was paid should be recovered as per the impugned circular. All Headmaster were informed to recover the excess amount paid to the teachers. It is at this stage, the petitioner  came forward to challenge the same.


7. Mr.J.Ashok, learned counsel for the petitioner contended that requirement under the earlier Government Order was met by the District Collector's clarification. There is no further requirement for getting another formal Government Order. Therefore, recovery being ordered is illegal and should not have been made. Hence the order of the third respondent should be set aside. The members of the petitioner association must be permitted to draw the amount which they were duly getting for all these days.

8. The writ petition was admitted on 27.7.2010. Pending the writ petition, this court granted an interim stay of impugned proceedings in M.P.(MD)No.2 of 2010. The respondents have filed vacate stay applications in M.P.(MD)Nos.3 and of 2010. The petitioner has filed M.P.(MD)Nos.5 and 6 of 2010 for an interim direction to continue to pay HRA and interim injunction restraining the respondents from withholding the HRA as admissible to Grade II Towns. In the light of the vacate stay applications, the main writ petition itself was taken up for hearing with the consent of both sides. Further two more applications were taken out to continue to pay the HRA.


9. In the counter affidavit filed in support of the vacate stay applications, it was contended that G.O.Ms.No.85, dated 22.5.1998 was issued only for the purpose of administrative convenience. It was also further clarified by letter, dated 17.2.1997 Finance Department that upgradation from Third Grade municipality to Second Grade Municipality has no relevance for the sanction of HRA. It was further indicated that the declaration of the entire area of Thuraiyur Panchayat Union, Uppiliyapuram Panchayat Union and Thuraiyur Town as Grade II Places by the Collector's proceedings, dated 23.11.2009 was only for the purpose of fixing boundaries of 8 kms. radius of Thuraiyur town. Unless the Finance Department of the Government orders declaration of Thuraiyur town to draw HRA as eligible for Grade II Towns, the claim for enhanced HRA was invalid. In essence, in the absence of a Government Order (Finance Department), additional drawal of HRA was impermissible.


10. Mrs.Chellammal Moorthy, learned Additional Advocate General leading Mr.S.C.Herold Singh, learned Government Advocate contended that the writ petition at the instance of an association is not maintainable. For this purpose, she relied upon the judgment of a division bench of this court in Tamilaga Asiriyar Kootani represented by the General Secretary V.Annamalai, Chennai Vs. The Government of Tamil Nadu represented by its Secretary, School Education Department, Chennai and others reported in 2005 (3) MLJ 252.


11. In the light of the preliminary objection, the learned counsel for the petitioner stated that even the General Secretary who had sworn to the affidavit himself is a secondary grade teacher and hence he can be treated as an aggrieved person. Therefore, at his instance, the issue can be gone into.


12. Thereafter, the learned Additional Advocate General pointed out that the Collector's order is only for the purpose of fixing the boundaries and without proper order of the Government, they themselves cannot draw HRA. Hence the impugned order issued by the third respondent is valid and the recovery order is also in accordance with law.


13. The counsel for the petitioner at this stage stated that the matter is receiving attention by the Government. If the Government issues an order in their favour, then the issue will become academic. Therefore, the Government should be directed to decide the issue one way or other without making the parties kept under a suspended animation.


14. In the light of the above submissions, the following conclusions can be arrived at:

    (a) The writ petition filed by the petitioner Sangam is not maintainable though the deponent to the affidavit can be considered himself as an aggrieved person.

    (b) Without a specific order of the State Government, the drawal of additional HRA is unauthorised and the Collector's letter is not made under any delegated financial powers by the State.
   
    (c) Until such time the Government takes a decision, the members of the teacher Sangam cannot draw any revised HRA as if the Thurayur Panchayat Union, Uppiliyapuram Panchayat Union and Thuraiyur Town are within 8 Kms. radius.

    (d) Since the issue is receiving attention by the Government, even as admitted by the learned Additional Advocate General, a direction will be issued to the State Government to decide the issue relating to payment of HRA to the Government servants who are working in the areas coming under the Thurayur and Uppiliyapuram Panchayat Unions and Thuraiyur town, as expeditiously as possible.

    (e) The question of payment of HRA as admissible to Grade II Town will await an appropriate order from the State Government.

    (f) With reference to recovery of amounts already paid, it must be stated that the petitioner Sangam is in no way responsible for the drawal of revised HRA and it was done only on an order passed by the District Collector, who had no power to permit such payments. Since it was not due to any misrepresentation the amounts already paid, no recovery should be made until a decision is taken by the State Government.


15. In this context it is necessary to refer to the judgment of the Supreme Court in Syed Abdul Qadir v. State of Bihar reported in 2009 3 SCC 475. In paragraph 57, the Supreme Court observed as follows:


"57. This Court, in a catena of decisions, has granted relief against recovery of excess payment of emoluments/allowances if (a) the excess amount was not paid on account of any misrepresentation or fraud on the part of the employee, and (b) if such excess payment was made by the employer by applying a wrong principle for calculating the pay/allowance or on the basis of a particular interpretation of rule/order, which is subsequently found to be erroneous. 

58. The relief against recovery is granted by courts not because of any right in the employees, but in equity, exercising judicial discretion to relieve the employees from the hardship that will be caused if recovery is ordered. But, if in a given case, it is proved that the employee had knowledge that the payment received was in excess of what was due or wrongly paid, or in cases where the error is detected or corrected within a short time of wrong payment, the matter being in the realm of judicial discretion, courts may, on the facts and circumstances of any particular case, order for recovery of the amount paid in excess. See Sahib Ram v. State of Haryana, Shyam Babu Verma v. Union of India, Union of India v. M. Bhaskar, V. Gangaram v. Director, Col. B.J. Akkara (Retd.) v. Govt. of India, Purshottam Lal Das v. State of Bihar, Punjab National Bank v. Manjeet Singh and Bihar SEB v. Bijay Bhadur.
   
(Emphasis added)


16. In the light of the above, there will be stay of recovery of amount from the salary of persons who had drawn enhanced HRA. Any amount paid will be subject to the outcome of the decision to be taken by the State Government. Even the question of recovery will be decided depending upon the decision of the State Government.

17.  With the above directions, the writ petition will stand disposed of. No costs. Consequently, connected miscellaneous petitions stand dismissed as unnecessary.

To

1.The District Collector,
   Trichy District,
   Trichy.

2.The District Treasury Officer,
   Trichy.

3.The Sub Treasury Officer,
   Thuraiyur,
   Trichy District.
.

8.11.10

மேலவை வாக்காளர் சேர்ப்பு: காலக்கெடு முடிந்தது

சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்தது.


பதிவு செய்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்கிற விவரம் ஓரிரு நாள்களில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சட்ட மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு கடந்த 6-ம் தேதியுடன் முடிந்தது. நவம்பர் 4-ம் தேதியுடனான காலகட்டம் வரை இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்த்து இருந்தனர்.


இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு தீபாவளி பண்டிகையின் மறுநாளான சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. பெயர்களைச் சேர்த்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் எத்தனை பேர் என்கிற விவரங்கள் ஓரிரு நாளில் கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: 


5.11.10

சட்ட மேலவைத் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால நீட்டிப்பு இல்லை

சட்ட மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்படாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.​ ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களது பெயர்களைச் சேர்க்க நவம்பர் 6-ம் தேதி ​(சனிக்கிழமை)​ கடைசி நாளாகும்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளிடையே பெரிய அளவில் ஆர்வம் காணப்படவில்லை.​ வாக்காளர் பட்டியலில் இரு தரப்பையும் சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.


இந்த நிலையில்,​​ பெயர் சேர்ப்புக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது.​ மேலவைக்கான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அரசியல் சட்டத்தில் கால நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளன.​ அந்தக் கால நிர்ணயப்படி மேலவைக்கான ஒவ்வொரு பணிகளும் நடைபெற்று வருவதால் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து,​​ தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியது:


வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி நவம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கும்.​ இதுவரை பெயர்களைப் பதிவு செய்தவர்களைக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.​ இந்தப் பட்டியல் நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்படும்.


பட்டியல் வெளியான காலத்திலிருந்து ஓரிரு வாரங்கள்,​​ கால அவகாசம் அளிக்கப்படும்.​ வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்காதவர்கள் அந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.​ பெயர் சேர்ப்பு,​​ திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள,​​ அந்தக் கால அவகாசம் அளிக்கப்படும்.​ எனவே,​​ பெயர் சேர்ப்புக்கு தனியாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் பிரவீன் குமார்.


டிசம்பர் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான,​​ இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

4.11.10

சிறப்புப் படி ரூ.500/- தேர்வுநிலை, சிறப்புநிலை இடைநிலை ஆசியர்களுக்கும் உண்டு

ஒரு நபர் குழு அறிக்கையின்படி வெளியிட்டப்பட்ட அரசாணை எண்: 270 நாள்: 26-08-2010இல் குறிப்பிட்டுள்ள சிறப்புப் படி ரூ. 500/- அனைத்து நிலை(தேர்வுநிலை, சிறப்புநிலை) இடைநிலை ஆசியர்களுக்கும் பொருந்தும் என அரசு சார்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டகப்பட்ட கேள்விக்கு கடித எண்: 51531/நிதி(ஊ.பி) /2010 - 1 நாள்: 13-09-2010இன் படி பதிலளித்துள்ள அரசு சார்புச் செயலாளர் அரசாணை எண்: 270, நிதி(ஊதியப்பிரிவு)த் துறை, நாள்: 26-08-2010ன் படி சிறப்புப் படிகள் அனைத்து நிலை இடைநிலை ஆசியர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
 
.

மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 6 சனிக்கிழமை கடைசி நாள்

மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும்.

இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 பட்டதாரிகளும், 16 ஆயிரம் ஆசிரியர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள் வருவதால் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்ட மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கு தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் செப்டம்பர் 30-ம் தேதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் பெயர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கின. சென்னையில் மாநகராட்சி மண்டலங்களிலும், மாவட்டங்களிலும் தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 23 மற்றும் 24, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடந்தன.

பட்டதாரிகள் விண்ணப்பத்துடன் தங்களது பட்டச் சான்றின் நகலை சான்றொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். அரசுக் கல்லூரி முதல்வர்கள், வட்ட வளர்ச்சி அதிகாரிகளும் பட்டச் சான்றுகளைச் சரிபார்த்து சான்றொப்பம் இட அதிகாரம் அளிக்கப்பட்டனர்.


அவர்களிடம் சான்றொப்பம் பெற்று இருந்தால், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்களைச் சரிபார்க்கத் தேவையில்லை என்ற சலுகையை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.


இந்த நிலையில், மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பெயர்களைச் சேர்ப்பதற்கான கடைசி நாள் வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) ஆகும்.


இதுவரை எத்தனை பேர்? வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பட்டதாரி தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 பட்டதாரிகளும், 16 ஆயிரம் ஆசிரியர்களும் தங்களது பெயர்களைச் சேர்த்துள்ளனர்.

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 12 லட்சம் பட்டதாரிகளும், 3.5 லட்சம் ஆசிரியர்களும் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவிலேயே பட்டதாரிகளும், ஆசிரியர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

3.11.10

State Government directed to consider grant of revised HRA to teachers working in schools at Thuraiyur and Uppiliyapuram

The Madras High Court Bench here has directed the State Government to take a decision, as expeditiously as possible, on permitting teachers working in various government schools in Thuraiyur Panchayat Union, Uppiliyapuram Panchayat Union and Thuraiyur town to draw house rent allowance (HRA) applicable for Grade II towns.

Disposing of a writ petition filed by Tamil Nadu Edainilai Aasiriar Sangam, an association of middle school teachers, Justice K. Chandru restrained the authorities concerned from recovering the HRA, already granted to the teachers based upon the Tiruchi Collector's proceedings dated November 23, 2009, until the Government took a decision on the issue in one way or the other.

However, the judge made it clear that the teachers could not continue to receive the revised HRA as it would amount to unauthorised drawing of money without any specific orders issued by the Government. He pointed out that the Government had not delegated any financial powers on the Collector who had issued the 2009 proceedings leading to payment of additional HRA.

According to the petitioner association, the Government issued an order in 1986 stating that government servants residing in Grade II towns and areas within eight kilometre radius would be eligible for grant of HRA as admissible to Grade II towns. If an area falling within the eight kilometre radius was a part of a Panchayat Union, then the entire Panchayat Union shall be considered for the purpose of granting HRA as admissible to Grade II towns. In 1998, the Thuraiyur Municipality was upgraded from third grade to second grade and hence members of the petitioner association made several representations for enhancement of their HRA as per the 1986 G.O. Even as those pleas were pending consideration, the Municipality was upgraded further as a Selection Grade Municipality in 2008. Acceding to their request, the Collector issued a clarification in 2009 holding that the teachers were eligible for revised HRA. But in June this year, the Principal Secretary and Commissioner, Treasury and Accounts Department, ordered recovery of the amount on the ground that it could not be drawn without an order of the Government.

நன்றி:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்