சட்ட மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்படாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களது பெயர்களைச் சேர்க்க நவம்பர் 6-ம் தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளிடையே பெரிய அளவில் ஆர்வம் காணப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இரு தரப்பையும் சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பெயர் சேர்ப்புக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது. மேலவைக்கான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அரசியல் சட்டத்தில் கால நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளன. அந்தக் கால நிர்ணயப்படி மேலவைக்கான ஒவ்வொரு பணிகளும் நடைபெற்று வருவதால் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியது:
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி நவம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கும். இதுவரை பெயர்களைப் பதிவு செய்தவர்களைக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்படும்.
பட்டியல் வெளியான காலத்திலிருந்து ஓரிரு வாரங்கள், கால அவகாசம் அளிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்காதவர்கள் அந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அந்தக் கால அவகாசம் அளிக்கப்படும். எனவே, பெயர் சேர்ப்புக்கு தனியாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் பிரவீன் குமார்.
டிசம்பர் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான, இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
5.11.10
சட்ட மேலவைத் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால நீட்டிப்பு இல்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
'தானே' புயல் நிவாரணத்துக்காக, முதல்வர் விடுத்த அழைப்பை ஏற்று, அதிகளவு நன்கொடை குவியும் என எதிர்பார்த்த நிலையில், தொழில் துறையினரிடம...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவல...
-
"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்...
-
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) 05ஆம் அகில இந்திய மாநாடு 2012, மே மாதத்தின் 17, 18 மற்றும் 19ஆம் தேதி களில் தமிழகத்தின் கன்...
-
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்...
-
அரசாணை எண்: 237 நிதித்(ஊதியப் பிரிவு)துறை நாள்: 22-07-2013 .
-
Mr. President, Dignitaries in Dais and Fellow Delegates from all over India, across the length and breadth of India from Kashmir to Kanyaku...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக