மக்கள் தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்-2011) 2ம் கட்ட பணிகள் வரும் பிப்.9ல்  துவங்குகிறது. 
சென்சஸ் 2011ல் முதல்கட்ட பணியில் வீட்டு பட்டியல்  தயாரிக்கப்பட்டது. இப்பட்டியல் மாநில தலைநகர்களில் உள்ள தேர்தல் கமிஷன்  அலுவலகங்களில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. 
2ம் கட்டமாக மக்கள்தொகை  கணக்கெடுப்பு வரும் பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிகிறது. 
பிப். 28 மாலை 5  மணி முதல் இரவு முழுவதும் வீடுகள் இல்லாதவர்கள் குறித்த சர்வே நடக்கிறது. 
மார்ச் 1 முதல் 5 வரை மறு சோதனை பணி நடக்கிறது. 
இப்பணியில் ஈடுபட உள்ள  கணக்கீட்டாளர்களுக்கு சிறப்பு பயிற்சி தர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக