மேலவைத் தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
எங்கெங்கு வைக்கப்படும்: மேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க 3 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேரும், ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க 72 ஆயிரம் பேரும் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் சென்னையில் மாநகராட்சி அலுவலகம், அதன் மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் தாலுகா அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.
இறுதி பட்டியல்: டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கும். டிசம்பர் 29-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதிப் பட்டியல் வெளியானால் மேலவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாரானதாக அர்த்தம். ஏனென்றால், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு இறுதியாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 78 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் 26 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமனம் செய்வார். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தலா ஏழு தொகுதிகளுக்கு (மொத்தம் 14) வாக்களிப்பர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
22.11.10
மேலவை: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் மாணவ சமுதாயம் மீது அக்கறை கொண்டு கல்வித்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். மாணவர்களை...
-
* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர் * அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர் * சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவ...
-
Constitution of School Management Committee
-
இயல் எண்கள் : Natural Numbers 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத , எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர். இயல் எண்களின் கணத...
-
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய, தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இந்த வார இறுதிக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்...
-
தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாததால், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிட...
-
ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கவுன்சிலிங், பலர...
-
தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேட்டூர், த...
-
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வி...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக