தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.11.10

மேலவை வாக்காளர் சேர்ப்பு: காலக்கெடு முடிந்தது

சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்தது.


பதிவு செய்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்கிற விவரம் ஓரிரு நாள்களில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சட்ட மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு கடந்த 6-ம் தேதியுடன் முடிந்தது. நவம்பர் 4-ம் தேதியுடனான காலகட்டம் வரை இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்த்து இருந்தனர்.


இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு தீபாவளி பண்டிகையின் மறுநாளான சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. பெயர்களைச் சேர்த்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் எத்தனை பேர் என்கிற விவரங்கள் ஓரிரு நாளில் கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்