தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.3.13

புதுக்கோட்டையில் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்புதுக்கோட்டையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையிலுள்ள முதன்மைக்கல்வி அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவர் ஜெயராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாநிலப் பொருளர் மதலைமுத்து தொடக்கி வைத்தார். மாவட்டச் செயலர் செந்தில் கோரிக்கைகளை விளக்கினார்.

முன்னாள் மாநில துணைத் தலைவர் வாசுகி மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பேசினர். முன்னாள் மாநில பொதுச் செயலர் குமரேசன் நிறைவுரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கருப்பையா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திராவிடச்செல்வம், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ரெங்கராஜ், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயலர் காந்திநாதன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்