தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.9.12

கட்டாய கல்வி உரிமை சட்டம் - பயிற்சி நாள் மாற்றம்: ஆசிரியர்கள் குழப்பம்

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இன்று முதல் செப். 29 வரை பயிற்சி வழங்கப்படுகிறது. காலாண்டு விடுமுறை தினத்தில் பயிற்சியால் ஆசிரியர்கள் அதிருப்தியுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சட்டம், அரசாணைகள், மற்றும் வழிகாட்டி விதிமுறைகள் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இன்று துவக்கப்பள்ளி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கும், நாளை உயர் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், செப். 29 ல் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளை மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.

பயிற்சி நாள் மாற்றம்:
நாளை(செப். 28) 6 - 8 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பயிற்சி நாளை மறுதினம்(செப். 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்களுக்கு நாளை(செப். 28) பயிற்சி வழங்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் கூறுகையில்,"கல்வித்துறை ஆசிரியர்களை அலைக்களிக்கிறது. ஆசிரியர்களுக்கு விடுமுறை தினங்களில் பயிற்சி வழங்க கூடாது. தற்போது பயிற்சி நாள் மாற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தலைமையாசிரியர்களுக்கு தேர்வு விடுமுறை கிடையாது. 30 நாள் ஈட்டிய விடுப்பு உள்ளது. விடுமுறை தினங்களில் பயிற்சிகள் நடத்தும் போது, மாற்று விடுப்பு வழங்க வேண்டும்,'' என்றனர்.
.

அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்., 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான வகுப்புகளுக்கு, 21ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. +1 +2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினத்துடன், தேர்வுகள் முடிந்தன.

ஒரு வார விடுமுறைக்குப் பின், அக்., 3ம் தேதி, மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு,பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வு நடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அக்., 14க்கு, டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், பள்ளிகள் ஒரு நாள் முன்னதாக, 3ம் தேதியே துவக்கப்படுமா என தெரியாமல், பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தவித்து வந்தனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, "ஏற்கனவே அறிவித்த தேதியில், எவ்வித மாற்றமும் கிடையாது. திட்டமிட்ட படி, அக்., 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்'' என, தெரிவித்தனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளும், இதே தேதியில் துவங்குகின்றன.

நன்றி:

 

திறனறிவுத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள்: மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு, ஞாயிறு (செப்.23) நடந்த திறனறிவு தேர்வில், பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

எட்டாம் வகுப்பு முடித்து 9ம் வகுப்புக்கு செல்லும் கிராம மாணவர்களுக்கு, 8ம் வகுப்பில் படித்த பாடங்கள் அடிப்படையில் பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்தப்படும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 25 கேள்விகள் வீதம் 75 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம் பெறும். இதில், தேர்ச்சி பெற்று, மாவட்டத்தில் முதல் 100 (50 மாணவர்கள், 50 மாணவிகள்) இடங்களை பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான தேர்வு ஞாயிறு (செப்.23) நடந்தது. மாவட்டத்தில் தலா 600 மாணவர்கள் வீதம் பங்கேற்றனர். தேர்வில், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் பாடங்களில் இடம் பெற்ற கேள்விகள், சமச்சீர் கல்வி பாடத்திட்ட அடிப்படையில் இல்லாமல், அதற்கு முந்தைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. இதனால், மாணவர்கள் அதிர்ச்சிடைந்தனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படவில்லை. கணிதத்தில் பழைய பாடத்திட்டத்தில் இருந்த 2 அடிமானம், 5 அடிமானம் பகுதிகள், சமச்சீர் பாடத்திட்டத்தில் இல்லை. அதிலிருந்து கேள்விகள் இடம் பெற்றன. சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் அனைத்து கேள்விகளும் பழைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை. இதனால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும். மறுதேர்வு நடத்தி, கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றும் வழங்கப்பட வேண்டும், என்றார்.

நன்றி:

 

காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் முன்பே "ரிலீஸ்'

தமிழகத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வின் கேள்வித்தாள், "சுரா' எனும், தனியாரின் நோட்சில் அச்சு பிசகாமல் இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இம்மாதம், 14ம் தேதி காலாண்டுத் தேர்வு துவங்கி, 25ம் தேதியுடன் முடிந்தது. அரசின் உத்தரவை அடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை போல, பிற வகுப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக, ஒரே மாதிரியான கேள்வித்தாளும், ஒரே நாளில் தேர்வும் நடத்தப்பட்டன.

காலாண்டுத் தேர்வில், ஏழாம் வகுப்பு கணிதத் தேர்வில், அரசு வழங்கிய கேள்வித்தாளை பார்த்த, மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுரா நோட்சின் மாதிரித்தாளில் உள்ள கேள்விகள் பலவும், அச்சுப்பிசகாமல் அப்படியே கேட்கப்பட்டிருந்தன. இதையறிந்த சில பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம், அடுத்து வரும் அறிவியல் பாடத் தேர்வுக்கும், சுரா நோட்சில் உள்ள, மாதிரி கேள்வித்தாளில் உள்ளனவற்றை படிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அறிவியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த, 95 சதவீதம் கேள்விகள், சுரா நோட்சில் இருந்த கேள்விகளாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, நோட்சில் இருந்த, மாதிரி கேள்வித்தாளின் வரிசைப்படியே, அரசு கேள்வித்தாளிலும், வரிசைப்படுத்தி, அச்சு பிசகாமல் கேட்டிருந்தனர். தேர்வை எழுதிய மாணவர்கள், சுரா நோட்சை தேடி, கடை கடையாக அலைந்துள்ளனர். கிடைத்தவர்கள் வாங்கி வந்து, எஞ்சிய சமூக அறிவியல் தேர்வுக்கும் படித்துள்ளனர். ஆனால், சமூக அறிவியல் தேர்வு கேள்வித்தாள் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

தனியார் நிறுவன நோட்சின், மாதிரி கேள்வித்தாளுடன், 95 சதவீதம் ஒத்துப்போகும்படி, காலாண்டுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரித்தது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு உதவியோர் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?.

நன்றி:

 

25.9.12

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை தேர்வுத்துறையின் இணைய தளத்தில் பார்ப்பதற்கு நடவடிக்கை - தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி

தேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், "ஆன்-லைன்' மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.

பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பல்வேறு துறைகளில், தேர்வுத்துறை மிகவும் முக்கியமானது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் உட்பட, ஆண்டுக்கு, 40 தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை தரும் பெரும் பணியை, இத்துறை செய்து வருகிறது. இத்துறையில் உள்ள பிரச்னைகளை, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ எவரும் கண்டுகொள்ளாததால், நாளுக்கு நாள், ஊழியர்கள் மத்தியில் புகைச்சல் அதிகரித்து வருகிறது.

காலி பணியிடங்கள்:
 தற்போதைய நிலையில், இயக்குனரகத்தில், 250 பேர் பணியாற்றி வருகின்றனர். இன்னும், 250 பணியிடங்கள் வரை காலியாக இருப்பதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்திற்குள் இருந்தது. இப்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.5 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர். ஆனால், இப்போதும் பணியாளர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மாறாக, காலிப் பணியிடங்கள், ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேங்கும் சான்றிதழ்கள்
:
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியரின் பள்ளிச் சான்றிதழ்கள், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மாணவ, மாணவியரின் பள்ளிச் சான்றிதழ்கள், அரசுப் பணிகளில் சேர்வோரின் பள்ளிச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, அனுமதி வழங்கும் பணி, தேர்வுத்துறையிடம் உள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் இருந்தும், பல்கலைகளில் இருந்தும், சான்றிதழ்கள் பண்டல் பண்டலாக வருகின்றன. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்படாமல் அப்படியே, முடங்கிக்கிடப்பதாகக் கூறப்படுகிறது.

காத்தாடும் பிரிவுகள்:
இயக்குனரகத்தில், 54 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கோ, அதிகரித்துள்ள தற்போதைய பணிகளுக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தவோ, அதிகாரத்தில் உள்ளவர்கள் அக்கறை காட்டுவதில்லை என, ஊழியர்கள் வருத்தப்படுகின்றனர்.

இயக்குனர் பதில்
:
பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:
காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், இளநிலை உதவியாளர்களை நிரப்ப கேட்டுள்ளோம். தேர்வுத்துறையின் பல்வேறு பணிகளை, "ஆன்-லைன்' மூலம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதனால், வரும் ஆண்டுகளில், ஊழியர்களின் பணிப்பளு படிப்படியாக குறையும். சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை, அந்தந்த கல்வி நிறுவனங்கள், தேர்வுத்துறையின் இணையதளத்திலேயே பார்ப்பதற்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்க உள்ளோம். தினக்கூலி ஊழியர்களுக்கு, விரைவில் சம்பள நிலுவையை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனர் கூறினார்.

நான்கு மாத சம்பளம் பாக்கி:
ஊழியர் பற்றாக்குறையை சரிகட்ட, தினக்கூலி அடிப்படையில், ஓய்வுபெற்ற ஊழியர், 40 பேரை, இயக்குனரகம் நியமித்தது. இவர்களுக்கு, தினச்சம்பளம் வெறும், 200 ரூபாய். இவர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், அவர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

நன்றி:

 

சான்றிதழ்களின் உணமைத்தன்மை - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

பாடப்புத்தகத்தில் "பென்னிக்குக்': பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை


பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் "பென்னிக்குக்' வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர் பென்னிக்குக் கட்டினார். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக தனது சொத்துக்களை விற்று, அணையை கட்டியவர்.

அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதன்படி, பென்னிக்குக் வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் கல்வியாண்டில் பென்னிக்குக் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம் பெற உள்ளது.

நன்றி:

 

உடம்பை உடைக்கும் புத்தக பை


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுமை, அங்கு நடத்தப்படும் பாடம் மட்டுமல்ல. அவர்கள் சுமந்து செல்லும் புத்தக பையும் தான். காலையில், புத்தக பையை மாட்டிக்கொண்டு பள்ளி செல்லும் குழந்தையை பார்த்தால் ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்க்கத் தோன்றும். அந்தளவு அழகாக இருக்கும். குழந்தை, பெரிய பையை கொண்டு செல்கிறார்கள் என சில பெற்றோரும் பெருமையாக நினைக்கின்றனர்.

உண்மையில் நடப்பது என்ன தெரியுமா
?
அளவுக்கு அதிகமான பாடப் புத்தகங்களை சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் செய்வோர், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் ஆகியோர் அதிக எடை கொண்ட பையை சுமந்து செல்கின்றனர். இவர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி, தண்டுவடம் பாதிப்பு, கூன் விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகையில் 40 - 80 சதவீதம் பேருக்கு முதுகுவலி பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிச் சுமை, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல், உடல் உழைப்பு இல்லாமை, எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களாலும் இன்றைய இளைஞர்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்.

எங்கு பாதிப்பு அதிகம்:
இது குறித்து பெங்களூரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : "குழந்தைகள் சுமக்கும் "பை'களால் கழுத்து மற்றும் முதுகில் மேல் பகுதியில் கடும் வலி உண்டாகிறது. முதுகின் மேல் பகுதி (40 சதவீதம்), கழுத்து ( 27 சதவீதம்), தோள் பட்டை ( 20 சதவீதம்), முன் கை மணிக்கட்டு (7 சதவீதம்), முதுகின் கீழ் பகுதி (6 சதவீதம்)யில் வலி உண்டாகிறது'. இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க, தேவையான புத்தகங்களை மட்டும் குழந்தைகள் எடுத்துச் செல்ல ஆசிரியர்கள் அறுவுறுத்த வேண்டும். சில பள்ளிகளில் அனைத்து புத்தகங்களையும் எடுத்துவரச் சொல்கின்றன. இதற்கு பதில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கான "லாக்கர்களை' ஏற்டுத்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு:
பைக்கில் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தால் பைகளை தோளில் தொங்க விடாமல், பைக்கின் முன்பகுதியில் வைத்துச் செல்லலாம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ கூடாது. இதற்கு பதில், சிறிது நேரம் ஓய்வு அல்லது வாக்கிங் அல்லது ரன்னிங் போகலாம். மன அழுத்தம் உடலின் தசைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இச்சமயத்தில் சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்யலாம். புகை பிடிப்பது முதுகெலும்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்பழக்கத்தை அறவே விட்டொழியுங்கள். முறையான தலையணைகளை பயன்படுத்துவதன் மூலம், கழுத்து வலியில் இருந்து தப்பிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும் புத்தக பை:

* தோளில் தொங்க விடப்படும் பை, நன்கு அகலமாக, பட்டையாக இருக்கு வேண்டும்.

* ஒற்றை பட்டையை தவிர்க்க வேண்டும்.

* குழந்தையின் எடையில், 10 - 20 சதவீத எடைக்கு மேல் பையின் எடை இருக்கக் கூடாது.

*புத்தக பையுடன் நடக்கும் போது, சாய்ந்தவாறு நடக்கக்கூடாது.

*படத்தில் உள்ளது போல, புத்தக பை, சரிந்து இருக்குமானால், பையின் எடை அதிகரித்து குழந்தை முதுகுத் தண்டு பாதிக்கப்படும்.

* பையின் அளவு, குழந்தையின் முதுகின் அளவை விட, அதிகமாக இருக்கக்கூடாது.

* "பை'யின் பின்புறம் கீழே "பிடி' இருப்பது நல்லது.

* தேவையில்லாத புத்தகம், நோட்டுகளை எடுத்துச்செல்ல வேண்டாம் என குழந்தைகளுக்கு அறுவுறுத்த வேண்டும்.

நன்றி:

24.9.12

மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7சதவிகித அகவிலைப்படி உயர்வு

சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.

இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

72 சதமாக உயரும் :
அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயர்கிறது. இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும்.

அதிக எதிர்பார்ப்பில் ஊழியர்கள்:
இப்போது இருக்கும் விலைவாசி உயர்வில் மத்திய அரசு 7 சதம் உயர்த்தினாலும் எங்களுக்கு போதாது என்றும் கூடுதலாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றும் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனராம்.

நன்றி:


23.9.12

எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்









டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி' அடைந்துள்ளனர்.

ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்டோபர் 3ம் தேதி, மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது. எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்டோபர் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.

அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும், மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.

இதை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.

குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி' அடைந்துள்ளனர்.

நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப் போகிறது என்பதை அறிய, தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நன்றி:

 

20.9.12

இரண்டாம் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்

நடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வி முறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் முதல், செப்டம்பர் வரையிலான முதல் பருவம், இம்மாத இறுதியுடன் முடிகிறது.

இதையடுத்து, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான இரண்டாம் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி, சென்னையில் நேற்று துவங்கியது. எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, மாணவியருக்கு, பாடப் புத்தகங்களை வழங்கினார்.

எட்டாம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிற்கும், தலா இரு தொகுதிகள் அடங்கியதாக, பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பருவத்திற்காக, 56 தலைப்புகளில், 2 .27 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

இதில், 1.52 கோடி பாடப் புத்தகங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக அச்சிடப்பட்டு உள்ளன. 75 லட்சம் பாடப் புத்தகங்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்காக அச்சிடப்பட்டு உள்ளன. இப்புத்தகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி, 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.

வரும் 25ம் தேதிக்குள், அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும், காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ம் தேதி மாணவ, மாணவியர், பள்ளிகளுக்குத் திரும்பியதும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

முதல், இரண்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 70 ரூபாய், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை, 85 ரூபாய், ஏழு, எட்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 100 ரூபாய்.

நன்றி:

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - நாளை அறிவிப்பு ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது.

மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப் புதல் அளிக்கும் என, தெரிகிறது.

இந்த உயர்வு, கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து, அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். கடந்த மார்ச் மாதம், அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்தது.

நன்றி:

 

19.9.12

கடவுச் சீட்டு பெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Passport Dir Pro

அனைத்துப் பள்ளிகளும் செப். 20-ல் செயல்படும்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை (செப். 20) வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து எதிர்கட்சிகளும் வரும் வியாழக்கிழமை (செப். 20) நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் காலண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அன்றைய தினம் தேர்வு நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்ததது.

இதையடுத்து செப். 20 (வியாழக்கிழமை) வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 28ம் தேதி உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
 .

18.9.12

20-09-2012 ஆம் நாள் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் 20-09-2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

20ம் தேதி அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்விச் செயலர்

20-09-2012 Hoiday Edu Sec Lr

20ம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து

வரும், 20ம் தேதி, "பந்த்' நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும், 20ம் தேதி, தேசிய அளவில், "பந்த்' நடத்த, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் தற்போது நடந்து வருவதால், "பந்த்' அன்று மாணவ,மாணவியர், பள்ளிகளுக்கு செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அன்று நடைபெறும் தேர்வினை, வேறு தேதியில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக அரசு அறிவித்துள்ளதால், 20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

கல்வி துறையில் அதிகாரிகள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

இருவரும், நேற்று புதிய பொறுப்புகளை ஏற்றனர்.

டி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிரடி மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இல்லாமல், காஞ்சிபுரம், நாமக்கல், நாகை, தேனி உள்ளிட்ட எட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேனி சி.இ.ஓ., ரவிச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட துணை இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டார்.

மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 29 பேரை, மாவட்டக் கல்வி அலுவலர்களாக (பொறுப்பு) நியமித்தும், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.

14.9.12

அரசாணை எண்: 229 நாள்: 04-09-2012இன் படி அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான செலவினக் கணக்குத் தலைப்பு விவரம்


அரசாணை எண்: 229 நாள்: 04-09-2012இன் படி பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான செலவினம் கீழே குறிப்பிட்டுள்ள கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.

2202 பொதுக்கல்வி – 02 இடைநிலைக்கல்வி – 109 – அரசு இடைநிலைப்பள்ளிகள் – I திட்டத்தில் சேராதது – BC – அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்துதல் – 01சம்பளங்கள். (த.தொ.கு 2202 02 109 BC 0103

கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் அரசாணை எண்: 229 நாள்: 04-09-2012இன் படி அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் விடுபட்டுள்ள 490 பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாகப் பெறப்பட்டு நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 .

கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்

11.9.12

தனி ஊதியம் - பதவியுயர்வில் ஊதிய நிர்ணயம் தொடர்பான மண்டல கணக்கு தணிக்கை அலுவலரின் செயல்முறைகள்

Clarification - Madhurai Audit Letter for Sg to Bt Prom Fixation Reg - Proc

தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு - ஆலோசனைக் கூட்ட முடிவுகள்

Tanfeto Circular

மருத்துவக் காப்பீட்டுத் திட்டச் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு குழு: தமிழக அரசு ஏற்பாடு

அரசு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்காக, செயல்படுத்தப்படும், புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில், மருத்துவமனைகளை பட்டியலிடுதல் மற்றும் சிகிச்சையின் தன்மையை கண்காணித்தல் ஆகியவற்றிற்கு, அங்கீகாரக் குழு ஒன்றை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலனிற்காக, புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம், நான்கு லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம். யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வரும், 2016, ஜூன் வரை அமலில் இருக்கும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு குறைந்த பட்ச தகுதி மற்றும் சிகிச்சையின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.

உரிய மருத்துவமனைகளை பட்டியலிடவும், சிகிச்சைகளை கண்காணிக்கவும், அங்கீகாரக் குழு அமைக்க வேண்டியதன் அவசியம், சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்குழு, மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிப்பதுடன், அங்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் கண்காணிக்கும்.

இக்குழுவிற்கு, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கமிஷனர் தலைவராகவும், மருத்துவம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியும், உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள், இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து, அவற்றை பட்டியலில் சேர்ப்பர்; தொடர்ந்து அவர்கள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர். இக்குழு, மூன்று மாதங்களுக்கு இப்பணியில் ஈடுபடும் என்று, நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 309 நாள்: 14-08-2012
.

ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

"ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில், 370 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு: ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும், விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால், விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் முறை குறித்து, சர்ச்சை எழுந்து உள்ளது. திறமையான ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை, தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியருக்கும் பார்ப்பது கிடையாது என்றும், வேண்டப்பட்ட ஆசிரியராக இருந்தால், எவ்வித விதிமுறைகளையும் பார்க்காமல், கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

வெளிப்படை தன்மை: இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டில், 80 சதவீத ஆசிரியர், முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 20 சதவீத ஆசிரியர், விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு, சிபாரிசுகளின் அடிப்படையில், விருதுகளை கொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பெயரில் அமைந்த விருதை, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். விருதுக்குரிய ஆசிரியர் செய்த சாதனைகளை, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

வரும் ஆண்டுகளில்...: ஆசிரியர் விருது பெற்றவர் குறித்த புத்தகத்தில், ஆசிரியர் செய்த சாதனைகள் குறித்து, ஒரு தகவலும் இல்லை; வெறும், பெயர், பள்ளி ஆகிய விவரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், விருது பெற்ற ஆசிரியரின் சாதனைகளை, அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆசிரியரின் செயல்பாடுகளை, புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடலாம். விருதுக்கு, விண்ணப்பங்களை வரவேற்பது குறித்த அறிவிப்பையும், ஆசிரியருக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த தகவலையும், முன்கூட்டியே நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும், ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் கருத்துகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, ""தகுதியான ஆசிரியர்களுக்குத் தான், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியரின் சாதனைகளை, புத்தகத்தில் வெளியிடுவதில், எந்த பிரச்னையும் இல்லை. வரும் ஆண்டுகளில், ஆசிரியர் சாதனைகள், புத்தகங்களில் வெளிப்படையாக வெளியிடப்படும்,'' என்றார்.

நன்றி:

 

சாரண இயக்க பதவிகள் தேர்தல் எப்போது?

"தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் முக்கிய பதவிகளுக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்படும்" என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சாரணர் இயக்க செயற்குழுவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைவர் பதவி மற்றும் முதன்மை ஆணையர் பதவி, காலியாக உள்ளது. எனவே, அப்பதவிக்கு, விரைவில் தமிழக அரசின் அனுமதி பெற்று, டில்லி தேசிய விதிகளின் படி தேர்தல் நடத்தப்படும்.

முன்னாள் ஆளுநர் இருந்த போது, ராஜபுரஷ்கார் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, இரண்டு முறை தேதி ஒதுக்கப்பட்டு, அலுவலக நிர்வாக காரணங்களால், விழா ரத்து செய்யப்பட்டது. இதனால், 2009ம் ஆண்டு முதல், தமிழகத்தில் மாநில விருதுக்கு தேர்வு பெற்ற சாரண, சாரணியர்களுக்கு, விருது வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட, தற்காலிக சான்றிதழை கொண்டு, மாணவர்கள் ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ராஜ்பவனில் நடத்தப்படும் ராஜபுரஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக, தமிழக முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. அவ்விழா விரைவில் நடத்தப்படும்.

நன்றி:


2.9.12

புள்ளி விவரங்கள் கேட்டு நச்சரிக்கும் கல்வித்துறை

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஒவ்வொன்றுக்கும், 22 படிவங்களை அனுப்பி, பள்ளிக் கல்வித் துறை விவரம் கேட்டுள்ளது.

டிஜிட்டல் வடிவம் மற்றும் பேப்பர் வடிவம் என, இரு முறைகளிலும், விண்ணப்பங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, ஆசிரியரல்லாத பணியாளர் இல்லாத நிலையில், இந்தப் புதிய சுமைகளால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 5,000க்கும் மேற்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் உள்ள மாணவ, மாணவியருக்கென, நடப்பாண்டில், பல்வேறு இலவசத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும், தனித்தனியாக விவரங்களை அளிப்பது, ஏற்கனவே, ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகமாக்கியிருந்தது.

தற்போது, கடந்த வாரத்தில் மட்டும், 22 வகையான படிவங்களை, "இ-மெயில்&' மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டு, அப் படிவங்களை, "இ-மெயில்&' மற்றும், "பிரின்ட்&' எடுக்கப்பட்ட பேப்பர் படிவங்களாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாங்கிய தகவல்களையே, மீண்டும் வேறு மாதிரியாகத் தொடர்ந்து வாங்கிக் கொண்டேயிருக்கும் நிலை,  ஆசிரியர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

நன்றி:

 

பணியை பாதிக்கும் "விலையில்லா" கல்வி உதவிகள்

மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்" வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்காக, நிதிநிலை அறிக்கையிலும்கூட மூன்றில் ஒரு பங்கு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையில்லா கல்வி உதவிகளால் பள்ளிகளில் கற்பித்தல், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

வழக்கமாக, மே, ஜூன் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் குறைந்தது 100 முதல் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே "ஆன்-லைனில்" பதிவு செய்து, அதற்கான சான்றிதழ்களை அளிக்கும் பணியை பள்ளி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இம்மாணவர்களுக்கு சாதி, வருமான, இருப்பிடச் சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து பெற்றுத்தரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்காக விலையில்லாமல் வழங்கப்படும் பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப் பை, சீருடைகள், காலணிகள், பஸ் பயண அட்டை, சைக்கிள்கள், வண்ணப் பென்சில்கள், கணிதக் கருவிப் பெட்டி, புவியியல் வரைபட நூல், இடைநிற்றலைத் தடுப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி, செஸ் விளையாட்டுக் கருவிகள், மதிய உணவு உள்ளிட்டவற்றைத் தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் பெற்றுத்தருவதை தலைமை ஆசிரியர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். இதற்காக சில மாதங்கள் சாதி வாரியாகப் பட்டியல் தயாரித்து, அரசுத் துறைகளுக்கு அனுப்ப வேண்டும்.

அரசுத் துறைகளிடமிருந்து பகுதிவாரியாகக் கிடைக்கும் நலத் திட்டங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும். சீருடைகள், காலணிகள் போன்றவற்றை மாணவர்களிடம் அளவெடுக்கும் பணியையும் பள்ளி நிர்வாகங்களே மேற்கொள்ள நேரிடுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பீடித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களில் இருந்து உதவித் தொகைகளைப் பெற்றுத் தருதலும் பள்ளி நிர்வாகங்களின் பணியாகும்.

 இந்த உதவித்தொகைகள் அனைத்தும் மாணவர்களுக்குக் காசோலையாக வழங்கப்படுகிறது. இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கும் பணியையும் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள், இரவு மற்றும் பகல் நேரக் காவலாளிகள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. பற்றாக்குறை இருக்கும் நிலையில், மேற்கண்ட விலையில்லா திட்டங்களுக்கான தயாரிப்புப் பணிகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களே மேற்கொள்ள நேரிடுகிறது. இதனால், கற்பித்தல் பணியில் தேக்கம் ஏற்படுகிறது.

இப்பணிகளோடு, வழக்கமான பள்ளி நிர்வாகப் பணி, கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டங்கள், அரசின் அவ்வப்போது அறிவுப்புக்கிணங்க பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள நேரிடுவதால், தலைமை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

விலையில்லா திட்டங்களின் பணிகளுக்காக வேலைவாய்ப்பு, வட்டாட்சியர், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்கிறது. சத்துணவுத் திட்டத்துக்கென பள்ளிகளில் அமைப்பாளர்கள் உண்டு; இதேபோல், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுக்குத் தனித் தனியே திட்ட அலுவலர்களைப் பள்ளிக் கல்வித்துறை நியமிக்கிறது.

இவ்வாறாக விலையில்லா பொருள்கள், நலத் திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்க, தனியே திட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தலைமை ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை குறையும்.

நன்றி:

 

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்