தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.9.12

கட்டாய கல்வி உரிமை சட்டம் - பயிற்சி நாள் மாற்றம்: ஆசிரியர்கள் குழப்பம்

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இன்று முதல் செப். 29 வரை பயிற்சி வழங்கப்படுகிறது. காலாண்டு விடுமுறை தினத்தில் பயிற்சியால் ஆசிரியர்கள் அதிருப்தியுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. சட்டம், அரசாணைகள், மற்றும் வழிகாட்டி விதிமுறைகள் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இன்று துவக்கப்பள்ளி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கும், நாளை உயர் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், செப். 29 ல் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகளை மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.

பயிற்சி நாள் மாற்றம்:
நாளை(செப். 28) 6 - 8 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பயிற்சி நாளை மறுதினம்(செப். 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்களுக்கு நாளை(செப். 28) பயிற்சி வழங்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் கூறுகையில்,"கல்வித்துறை ஆசிரியர்களை அலைக்களிக்கிறது. ஆசிரியர்களுக்கு விடுமுறை தினங்களில் பயிற்சி வழங்க கூடாது. தற்போது பயிற்சி நாள் மாற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தலைமையாசிரியர்களுக்கு தேர்வு விடுமுறை கிடையாது. 30 நாள் ஈட்டிய விடுப்பு உள்ளது. விடுமுறை தினங்களில் பயிற்சிகள் நடத்தும் போது, மாற்று விடுப்பு வழங்க வேண்டும்,'' என்றனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்