தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.9.12

புள்ளி விவரங்கள் கேட்டு நச்சரிக்கும் கல்வித்துறை

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஒவ்வொன்றுக்கும், 22 படிவங்களை அனுப்பி, பள்ளிக் கல்வித் துறை விவரம் கேட்டுள்ளது.

டிஜிட்டல் வடிவம் மற்றும் பேப்பர் வடிவம் என, இரு முறைகளிலும், விண்ணப்பங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, ஆசிரியரல்லாத பணியாளர் இல்லாத நிலையில், இந்தப் புதிய சுமைகளால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 5,000க்கும் மேற்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் உள்ள மாணவ, மாணவியருக்கென, நடப்பாண்டில், பல்வேறு இலவசத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும், தனித்தனியாக விவரங்களை அளிப்பது, ஏற்கனவே, ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகமாக்கியிருந்தது.

தற்போது, கடந்த வாரத்தில் மட்டும், 22 வகையான படிவங்களை, "இ-மெயில்&' மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டு, அப் படிவங்களை, "இ-மெயில்&' மற்றும், "பிரின்ட்&' எடுக்கப்பட்ட பேப்பர் படிவங்களாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாங்கிய தகவல்களையே, மீண்டும் வேறு மாதிரியாகத் தொடர்ந்து வாங்கிக் கொண்டேயிருக்கும் நிலை,  ஆசிரியர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்