தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.8.18

27-11-2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் 4-8-2018 அன்று திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது,

கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுப்பிரமணியன், திரு. மோசஸ் மற்றும் திரு. தாமோதரன் ஆகியோர் தலைமையேற்றனர்,

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குறித்து முதல்வரின் கண்ணியமற்ற பேச்சிற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, மேலும் முதல்வரின் கண்ணியமற்றப் பேச்சினைக் கண்டித்து வரும் 9-8-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது,

திருவண்ணமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. வெ. ஜெயக்குமார், மீள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களை தரக்குறைவாகவும் ஒருமையில் பேசுவதைக் கண்டித்தும் My Child My Care என்ற பெயரில் ஆசிரியர்களிடமிருந்து இரசீது எதுவும் வழங்காமல் இலட்சக்கணக்கில் பணம் வசூல் செய்வதனையும் 2016 - 17ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் பருவத் தேர்வு விடைத்தாள்களை பல இலட்சம் ரூபாய்க்கு முறைகேடாக விற்றதனைக் கண்டித்தும் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட CEO portal app என்ற செயலியினைக் கொண்டு ஆசிரியர்களின் சுய விவரங்களைத் திருட வழிவகை செய்யும் பாதுகாப்பற்றச் செயலியை ஆசிரியர்கள் பின்பற்றத் திணிக்கும் நடவடிக்கைக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்தும் ஜெயக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கையினை விரைவில் அரசு மேற்கொள்ளாவிட்டால், அவரைக் கண்டித்தும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் பிற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களைக் கண்டிக்கிற வகையில் வரும் 16-8-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரால் பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக அவரவர் பள்ளிகளிலேயே பணியமர்த்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி பின்வரும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
 
04-9-2018 அன்று ஒருநாள் ஒட்டு மொத்த தற்செயல் போராட்டத்தினை நடத்துவது.
 

13-10-2018 அன்று சேலத்தில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்திடுவது.
 

27-11-2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொள்வது.
 

19-10-2018 முதல் 23-10-2018 வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தினை மேற்கொள்வது.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்