தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.8.18

சென்னையில் நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1இல் நடைபெறும்

சென்னையில் சனிக்கிழமை (ஆக.11) நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1ஆம் நாள் நடைபெறும்.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் அ. சங்கர்  வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

திருச்சியில் கடந்த ஆக.5 இல் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை (ஆக.11) சென்னை சேப்பாக்கத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து ஆக.11 இல் நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  ரத்து செய்யப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக வரும் செப்டம்பர் 1ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்