தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.8.18

ஆகஸ்ட் 11, சென்னை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பெருத்திரளாக பங்கேற்கச் செய்ய செயற்குழு முடிவு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (05/08/ 2018) காலை 10 மணி அளவில் திருச்சி செய்யது முர்துஸா மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ஆ. மதலை முத்து தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் கு. தியாகராஜன் சமர்ப்பித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் அ. சங்கர் வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார். செந்தில்குமார் நன்றி கூறினார்.




கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழக முதல்வர் அவர்கள் தமது கண்ணியமற்ற பேச்சால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை தரக்குறைவாக இழிவாக பேசியதை வன்மையாக
இச்செயற்குழு கண்டிக்கிறது.

2. அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு எட்டாவது ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், இருபத்தோரு மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், மறுக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த
வேண்டும், அரசாணை 56 அரசாணை 100 அரசால் 101 மூலம் அரசுப் பள்ளிகளை மூடுவது ரத்து செய்ய வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 11இல் சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பெருத்திரளாக பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்