இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் , இது தொடர்பான பிரச்னைக்கு சில சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 முதல்வராக பதவியேற்ற ஜெ., இன்று அமைச்சர்களுடன் முதல் ஆலோசனை கூட்டம்  நடத்தினார். அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலர், மற்றும் பல்வேறு துறை  செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், மற்றும் வரும்  நிதியாண்டில் செயல்பட வேண்டிய கல்வி நிலை குறித்தும் , மின்வெட்டு  சமாளிப்பது , மக்கள் பணிகள் விரைந்து நடக்க அதிகாரிகளை முடுக்கி விடுவது ,  பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது உள்ளிட்டவை குறித்தும்  விவாதிக்கப்பட்டன. 
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: 
நடைமுறைப்படுத்தப்படவிருக்கும்  சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் படியாக அமையவில்லை.  தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழி  செய்யாது . எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில்  எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு  ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டு சமச்சீர் கல்வியை  நிறுத்தி வைப்பது என்றும் , இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே  பின்பற்றலாம் என்றும், புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1  ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை வரும் 15 ம் தேதி திறக்கலாம் என்றும்  உத்தரவிடப்படுகிறது. 
 குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதம் 6 ம் தேதி மேட்டூர் அணையை திறக்கவும்  உத்தரவிடப்பட்டது. வழக்கமாக 12 ம் தேதிக்கு பின்னர் தான் அணை திறக்கப்படும்  ஆனால் இந்த முறை விரைந்து திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றி: 



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக