கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வித்துறை அரசாணையை மீறி செயல்படுகிறது  என்று ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அண்மையில்  நடந்த தேர்வு, சிறப்புநிலை கூட்டமர்வில் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை என  ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்  கூறியதாவது: 
குழித்துறை கல்விமாவட்ட ஆளுகைக்கு உட்பட்ட அரசு உயர்நிலை,  மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தேர்வு, சிறப்புநிலை  கூட்டமர்வு நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  ஆசிரியர்களின் அனைத்து சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறப்படவில்லை என்று  காரணத்தை காட்டி தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
2004ம் ஆண்டிற்கு பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களின்  உண்மைத்தன்மை பெறப்பட வேண்டும் என்ற தெளிவான அரசாணை இருந்தும் அதிகாரிகள்  அரசாணையை மீறி செயல்படுவது வேதனையாக உள்ளது. அரசாணைகளையும், கோர்ட்  உத்தரவுகளையும் மதிக்காமல் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்  அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு  மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். உரிய காலத்தில் சலுகைகளை  பெற்றுத்தர வேண்டிய கல்வித்துறை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவில்லாமலும்  செயல்பட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
எனவே அரசு  விதிகளின் படி 2004க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டு 10 முதல் 20  ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு தேர்வு, சிறப்புநிலை வழங்கி  உரிய பணபலன்கள் கிடைத்திட, ஆசிரியர்களின் குறைகளை போக்கிட கல்வித்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக