தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.5.11

பேறுகால விடுப்பு 180 நாட்கள் எடுக்க நிபந்தனை

அரசு பெண் ஊழியர்கள், 180 நாட்கள் பேறு கால விடுப்பு எடுக்க, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், அவர் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகளில், அரசு பெண் ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பு, மூன்று மாதங்களில் இருந்து, ஆறு மாதங்களாக உயர்த்துவதற்கான கோப்பும் ஒன்று. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், நேற்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு, பேறுகால விடுப்பு, 90 நாட்களாக உயர்த்தப்பட்டு, 1980ல் உத்தரவிடப்பட்டது. இதன்படி, ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப, பிரசவத்துக்கு முன்பும், பின்பும் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த சலுகை, மூன்று குழந்தைகளுக்கு மேல் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின், 1993ல் இந்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, உயிரோடு இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே, 90 நாட்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுமென திருத்தம் செய்யப்பட்டது.


இந்நிலையில், திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு தற்போது அளிக்கப்படும், 90 நாட்கள் மகப்பேறு விடுப்பை, 180 நாட்களாக உயர்த்தி தற்போது உத்தரவிடப்படுகிறது. இந்த 180 நாட்களை, ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப பிரசவத்துக்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக உள்ள திருமணமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்