தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.12.09

கூட்டமைப்புடன் பள்ளிக் கல்வித்துறை பேச்சு நடத்தியது

இடைநிலை, பட்டதாரி, தமிழாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களைக் கொண்ட "இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பினர்" அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் பறிப்பு, கல்வி அலுவலர் பதவி உயர்வு சதவீதம் குறைப்பு, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துதல், தொகுப்பாசிரியர்களுக்கு பணிவரன் முறை என பத்து கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் சில சலுகை பறிப்புகள் முதுகலை ஆசிரியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என தெரிவித்தனர். இதற்காக சென்னையில் பேரணி, ஒரு லட்சம் கடிதம் அனுப்புதல் என, நடவடிக்கையில் ஈடுபட்டனர். தங்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், இந்த ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் ஆசிரியர் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில செயலர் சாமிசத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் தம்பித்துரை, தமிழாசிரியர் கழகத்தின் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் சங்கரபெருமாள், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடத்தை ரத்து செய்த உத்தரவை ஓரிரு நாளில் ரத்து செய்து அறிவிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பதவி உயர்வு சதவீதம், பணிவரன் முறை உட்பட பிற கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அளவில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என ஆலோசனை தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், "ஏற்கனவே தெரிவித்த கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து பதில் தருவதாக தெரிவித்துள்ளனர். திருப்தி அளிக்காவிட்டால் அறிவித்தபடி போராட்டங்கள் நடக்கும்" என்றனர்.
.

தொடர் மறியலுக்கு தயாராகும் கூட்டமைப்பு

தமிழகத்தில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கென இருந்த சலுகைகள் பலவற்றை அரசு பறித்து, முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிவிட்டதாக இக்கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

பறிக்கப்பட்ட சலுகைகளை தர வேண்டும் என கோரி இக்கூட்டமைப்பினர் சென்னையில் ஊர்வலம் நடத்தினர். அரசு தரப்பில் பதில் இல்லாததால், சமீபத்தில் திருச்சியில் தமிழாசிரியர் கழக மாநில தலைவர் வேதநாயகம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* பலமுறை கோரிக்கை விடுத்தும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அடுத்த கட்டமாக மாநில அளவில் ஐந்து மண்டலங்களில் மறியல் போராட்டம் நடத்துவது.

* டிசம்பர் முதல், இரண்டாம் வாரத்தில் ஆயத்த கூட்டம் நடத்துவது.

* அதன்பின்பும் அழைத்து பேசாவிட்டால், ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர் மறியல் போராட்டம் நடத்துவது.

* அடுத்து சட்டசபை கூட்டத் தொடரில் தங்கள் கோரிக்கை பற்றி பேச எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவிப்பது.

* பட்டதாரி, தலைமை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசிடம் கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிரதியை கூட்டமைப்புக்கு தரவேண்டும். அரசுக்கு கல்வித்துறை தெரிவித்துள்ள கருத்துக்கள், திருப்தி தராத நிலையில் திருச்சி கூட்டத்தில் எடுத்த போராட்ட முடிவை செயல்படுத்துவது.


இயக்கத்தின் மாநில தொடர்பாளர் தம்பித்துரை கூறுகையில், "மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளித் துணைஆய்வாளர் பணியிடத்தை ரத்து செய்தனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் குறைக்கப் பட்டதை ரத்து செய்து, முந்தைய நிலையே தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியராக பணியாற்றுவோ பட்டதாரி ஆசிரியராக அவர்களை தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பத்து அம்சங்களை வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் சாமி சத்யமூர்த்தி கூறுகையில், "அரசு அழைத்து பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் மண்டல அளவில் மறியல் போராட்டம், விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு என போராட்டம் தொடரும்" என்றார்.
.

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துக.

தமிழகம் முழுவதும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளி கல்வித்துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு, தனியார் உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்கள் 2003ம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களாக 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2003க்கு பின் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் இல்லை. உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியியலில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள் இப்போதும் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி இடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதால் இடை நிலை ஆசிரியர்கள் சதவீதம் குறைந்து வருகிறது. இவர்களுக்கு பதவி உயர்வு விகிதம் குறைவாக தரப்படுகிறது. ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு இரு வேறு ஊதியவிகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது.

முன்பு செகண்டரி கிரேடு ஆசிரியர்களுக்கு கீழ், ஜூனியர் கிரேடு ஆசிரியர்களாக அரசு கொண்டு வந்த போது ஜூனியர் கிரேடு ஆசிரியர்களை இரண்டு மாத சிறப்பு பயிற்சி வழங்கி செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக ஏற்றுக்கொண்டது. முதல் நிலை தமிழாசிரியர்கள், இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் என கொண்டு வந்தது. இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் முதல் நிலை தமிழாசிரியர்களாக பள்ளிக்கல்வித்துறை தரம் உயர்த்தியது. மேல்நிலை பள்ளிகள் துவக்கியபோது மேல்நிலை கல்வி கற்பிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி அவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தியது.

இதுபோன்று உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பள்ளிக்கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை. இதுவரை பதவி உயர்வு, ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை என அனைத்து நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த முன் வர வேண்டும்.
.

27.12.09

ஒரு நபர் குழுவின் ஆயுள் நீள்கிறது

ஒரு நபர் குழுவின் பதவி நீட்டிப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
.

அரசாணைகள்

தமிழக அரசின் அரசாணைகள் - தமிழ்

தமிழக அரசின் அரசாணைகள் - ஆங்கிலம்

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான அரசாணைகள் - தமிழ் 

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான அரசாணைகள் - ஆங்கிலம்

நிதித்துறை தொடர்பான அரசாணைகள் - தமிழ்

நிதித்துறை தொடர்பான அரசாணைகள் - ஆங்கிலம்
.

25.12.09

வட்டார நிர்வாகிகள்

.
வட்டாரம்: சுசீந்திரம்

தலைவர்: திரு. P. சுந்தர்ராஜ்

செயலர்: திரு. C. ஜெயசந்திரன்

பொருளர்: திரு. J. பீட்டர்


வட்டாரம்: நாகர்கோவில் நகரம்

தலைவர்: திரு. L.D.சேம் ஐசக்

செயலர்: திரு. T. செல்வராஜ்

பொருளர்: திரு. B. போஸ்கோ கிறிஸ்டின்



வட்டாரம்: நாகர்கோவில் புறநகர்

தலைவர்: திரு. M. பாலகிருஷ்ணன்

செயலர்: திரு. கோ. சசி

பொருளர்: திரு. R. ஹெர்பர்ட் ராஜசிங்



வட்டாரம்: இராஜாக்கமங்கலம்

தலைவர்: திரு. S. ஆதிமணி

செயலர்: திரு. S. மாகராஜி

பொருளர்: திரு. ரெகுபதி



வட்டாரம்: தக்கலை

தலைவர்: திரு. M. ஹாஜா

செயலர்: திரு. A. சேவியர்

பொருளர்: திரு. M. செல்லப்பன்



வட்டாரம்: குளச்சல்

தலைவர்: திரு. S. பாலசந்திரன்

செயலர்: திரு. K. அனில்குமரன்

பொருளர்: திரு. தம்பி A. செல்வன்



வட்டாரம்: முஞ்சிறை

தலைவர்: திரு. M. செர்லின்

செயலர்: திரு. K. ஜாண்சன்

பொருளர்: திரு. B. நெல்சன்



வட்டாரம்: குழித்துறை

தலைவர்: திரு. P. விமல்சேகர்

செயலர்: திரு. K. ஹரிகுமார்

பொருளர்: திரு. M. சதீஸ் குமார்



வட்டாரம்: கருங்கல்

தலைவர்: திரு. சுந்தர்ராஜ்

செயலர்: திரு. M. ஜெய சந்திரன்

பொருளர்: திரு. H. ஸ்டீபன்



வட்டாரம்: திருவட்டார்

தலைவர்: திரு. S. நீக்கோலஸ்

செயலர்: திரு. M. மரிய ஜாண்

பொருளர்: திரு. N. மணி

.

மாவட்ட பொறுப்பாளர்கள்

.
மாவட்டத் தலைவர்

திரு. V. L. சேம் பிறின்ஸ் குமார், செல்: 9443692795

மாவட்டச் செயலர்

திரு. G. பாஸி, செல்: 9442183672

மாவட்டப் பொருளர்

திரு. P. D. திவாகரன் பிள்ளை, செல்: 9487187867

மாவட்ட அமைப்புச் செயலர்

திரு. கோ. பூதலிங்கம்பிள்ளை, செல்: 9442181983

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்

திருமதி. L. புஸ்பம், செல்: 9952810274

மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள்


திரு. P. சுப்பையத்தேவர்


திரு. C. அரிச்சந்திரன்


திரு. M. சேவியர்


திரு. R. கிறிஸ்டல் ஜார்ஜ்


திரு. M. சதீஸ் குமார்


திரு. A. சுனில் பிரசாத்


திரு. N. விக்டர்தாஸ்


திரு. M. ராபின்சன்

.

"தஇஆச"வின் வலைத்தளம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்