தமிழகம் முழுவதும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு, தனியார் உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்கள் 2003ம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களாக 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2003க்கு பின் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் இல்லை. உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியியலில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள் இப்போதும் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி இடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதால் இடை நிலை ஆசிரியர்கள் சதவீதம் குறைந்து வருகிறது. இவர்களுக்கு பதவி உயர்வு விகிதம் குறைவாக தரப்படுகிறது. ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு இரு வேறு ஊதியவிகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது.
முன்பு செகண்டரி கிரேடு ஆசிரியர்களுக்கு கீழ், ஜூனியர் கிரேடு ஆசிரியர்களாக அரசு கொண்டு வந்த போது ஜூனியர் கிரேடு ஆசிரியர்களை இரண்டு மாத சிறப்பு பயிற்சி வழங்கி செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக ஏற்றுக்கொண்டது. முதல் நிலை தமிழாசிரியர்கள், இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் என கொண்டு வந்தது. இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் முதல் நிலை தமிழாசிரியர்களாக பள்ளிக்கல்வித்துறை தரம் உயர்த்தியது. மேல்நிலை பள்ளிகள் துவக்கியபோது மேல்நிலை கல்வி கற்பிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி அவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தியது.
இதுபோன்று உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பள்ளிக்கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை. இதுவரை பதவி உயர்வு, ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை என அனைத்து நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த முன் வர வேண்டும்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
31.12.09
இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துக.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
N-M Velieedu Invitation by edwin_prakash75
-
மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவ...
-
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறி, தர்மபுரியில் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட...
-
சமச்சீர் கல்வி சட்டம், கடந்த ஆண்டு, தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், இரண்டாம் வகு...
-
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இந்தக் குழு விரைவில் அறிக்கை ...
-
மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும். ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக