தமிழகத்தில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கென இருந்த சலுகைகள் பலவற்றை அரசு பறித்து, முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிவிட்டதாக இக்கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
பறிக்கப்பட்ட சலுகைகளை தர வேண்டும் என கோரி இக்கூட்டமைப்பினர் சென்னையில் ஊர்வலம் நடத்தினர். அரசு தரப்பில் பதில் இல்லாததால், சமீபத்தில் திருச்சியில் தமிழாசிரியர் கழக மாநில தலைவர் வேதநாயகம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* பலமுறை கோரிக்கை விடுத்தும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அடுத்த கட்டமாக மாநில அளவில் ஐந்து மண்டலங்களில் மறியல் போராட்டம் நடத்துவது.
* டிசம்பர் முதல், இரண்டாம் வாரத்தில் ஆயத்த கூட்டம் நடத்துவது.
* அதன்பின்பும் அழைத்து பேசாவிட்டால், ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர் மறியல் போராட்டம் நடத்துவது.
* அடுத்து சட்டசபை கூட்டத் தொடரில் தங்கள் கோரிக்கை பற்றி பேச எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவிப்பது.
* பட்டதாரி, தலைமை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசிடம் கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிரதியை கூட்டமைப்புக்கு தரவேண்டும். அரசுக்கு கல்வித்துறை தெரிவித்துள்ள கருத்துக்கள், திருப்தி தராத நிலையில் திருச்சி கூட்டத்தில் எடுத்த போராட்ட முடிவை செயல்படுத்துவது.
இயக்கத்தின் மாநில தொடர்பாளர் தம்பித்துரை கூறுகையில், "மாவட்ட கல்வி அலுவலகங்களில் பள்ளித் துணைஆய்வாளர் பணியிடத்தை ரத்து செய்தனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் குறைக்கப் பட்டதை ரத்து செய்து, முந்தைய நிலையே தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியராக பணியாற்றுவோ பட்டதாரி ஆசிரியராக அவர்களை தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பத்து அம்சங்களை வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் சாமி சத்யமூர்த்தி கூறுகையில், "அரசு அழைத்து பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் மண்டல அளவில் மறியல் போராட்டம், விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு என போராட்டம் தொடரும்" என்றார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
31.12.09
தொடர் மறியலுக்கு தயாராகும் கூட்டமைப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று க...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவல...
-
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மா...
-
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தமிழா சிரி...
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக