தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.6.18

ஜாக்டோ - ஜியோவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மூன்று நாட்கள் கட்டுக்கோப்புடனும், உணர்வுபூர்வமாகவும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களை அழைத்து பேசாத முதல்வரை நேரில் சந்திப்பது என்று உயர்மட்டக்குழு முடிவெடுத்ததின் அடிப்படையில் இன்று மாலை கோட்டை நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

சென்னை போலிஸ் கமிஷனரிடம் அனைவரையும் ரிமாண்ட் செய்ய சொல்லி வாதாடியும், ரிமாண்ட் செய்ய இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடும் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன்  சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்தும் ஆதரவளித்தன.

எனவே அடுத்த கட்ட இயக்கத்தை வலுவாக எடுத்து செல்லும் பொருட்டு மாநில அளவிலான காலவரையற்ற உண்ணாவிரத்தை இந்நிலையில் முடித்து  கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களையும் இத்துடன் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும்  முடிவு செய்யப்பட்டது.

அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்