தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.6.18

ஜூன் 11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் (மே) 8-ந் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:

‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். 11-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார் கள்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் பணி நேரம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட ‘ஜாக்டோ- ஜியோ’ பொறுப்பாளர்கள் சென்னையில் உண்ணாவிரத பந்தல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.

கடந்த 4-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்திற்காக மாவட்ட அளவில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்