தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.2.13

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம்


தஇஆச புதுக்கோட்டை மாவட்டக் கிளை யின் செயற்குழு பிப். 07 அன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெய ராமன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் செந்தில்குமார் வேலை அறிக்கை மற்றும் பிப். 26 அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தைப் பற்றி உரையாற்றினார்.

மாநிலப் பொருளாளர் மதலைமுத்து மாநிலப் பொதுக்குழு முடிவுகள் பற்றி விளக்கினார். இக்கூட்டத்தில் சுதா, செல் வம், ஆறுமுகம், கோபால கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி பிப். 26 அன்று நடைபெற உள்ள மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் பெரும் பாலான ஆசிரியர்களை கலந்து கொள்ளச் செய்வது, பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனை வரும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்