தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.2.13

மதுரை நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட கிளை நிர்வாகிகள் 07-02-2013 வியாழக்கிழமை முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. அமுதவல்லி அவர் களைச் சந்தித்தனர். மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பின் போது நமது முழக்கம் மாத இதழ் முதன்மைக் கல்வி அலுவல ருக்கு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டச் செயலாளர் பால முருகன் தஇஆச புதிய நிர்வாகிகளை முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட் டப் பொருளாளர் மணிமுருகன், துணைத் தலைவர் அமல்ராஜ், இணைச் செயலாளர் கள் நாகராஜன், லிங்கம் காமாட்சிநாதன், சங்க உறுப்பினர்கள் கார்த்திக், சண்முக நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

சந்திப்பின் போது நிர்வாகிகள் முன் வைத்த கோரிக்கைகளை கனிவோடு பரி சீலிப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்