அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பூதியமாக ரூ.500/- அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை எண்: 270, நாள் 26.08.2010
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
31.8.10
30.8.10
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியை உடனே வழங்க கேட்டு ஆர்ப்பாட்டம்
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியை உடனடியாக வழங்கிட அரசை வலியுறுத்தி குமரி மாவட்டத்தை சார்ந்த நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர் கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் துகின்றனர்.
1998-ல் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் மூலம் குழித்துறை நகராட்சி மூன்றாம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது. எனவே குழித்துறை நகராட்சி மற்றும் அதன் எல்லையிலிருந்து 8 கீ.மீ. தொலைவிற்குட்பட்ட மேல்புறம், முஞ்சிறை, திருவட்டார், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியினை உயர்த்தி வழங்க வேண்டும். குழித்துறை கல்வி மாவட்டம் மற்றும் திருவட்டார் ஒன்றிய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நடத்திய போராட்ட நடவடிக்கையின் காரணமாக மாவட்ட கலெக்டர் 22-7-2010 அன்று வீட்டு வாடகைப்படி உயர்வினை பெறுவதற்கான அனுமதி வழங்கினார்.
தற்போது வீட்டு வாடகை படி உயர்வு மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம், முஞ்சிறை, திருவட்டார், கிள்ளியூர் ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இன்று வரை வீட்டு வாடகைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்திட வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு போராட்ட குழு அமைப்பாளர் ஜெரோம் தலைமை தாங்குகிறார். கோபால கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். மதுரை காமராஜர் மற்றும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர் மன்ற பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஆதித்தியன்,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் வள்ளிவேல், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பாசி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஜாண்பிரிட்டோ, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகம் நாகராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் குமரி மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் மாநில தலைவர் மரியதாஸ் முடித்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை குழித்துறை கல்வி மாவட்டம் மற்றும் திருவட்டார் ஒன்றிய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு செய்து வருகின்றன.
நன்றி:
தலைப்புகள்:
கோரிக்கைகள்,
நாளிதழ் செய்திகள்,
போராட்டங்கள்
29.8.10
சட்ட மேலவை - ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளின் தொகுதிகள் - வரைவுப் பட்டியல்
ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளின் தொகுதிகளுக்கென்று தலா ஏழு தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
1.சென்னை தொகுதி - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
2.தமிழ்நாடு வடக்கு தொகுதி - வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள்.
3. தமிழ்நாடு வடக்கு மத்திய தொகுதி - விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்.
4. தமிழ்நாடு மேற்கு தொகுதி - நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள்.
5. தமிழ்நாடு கிழக்கு மத்திய தொகுதி - திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள்.
6. தமிழ்நாடு தெற்கு மத்திய தொகுதி - திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள்.
7. தமிழ்நாடு தெற்கு தொகுதி - தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்.
.
வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயருகிறது!
2011ம் ஆண்டு முதல் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயரப் போகிறது. அதேசமயம், வருமான வரி விலக்குக்கான சேமிப்புகளின் அளவை குறைக்கலாம் என்று தெரிகிறது. நேரடி வரி விகிதம் தொடர்பாக அரசு கடந்த ஆண்டு ஒரு வரைவு மசோதாவை உருவாக்கியது. அதில் மாதச் சம்பளம் வாங்குவோருக்கும், வீட்டுக் கடன் பெற்றோருக்கும் எந்தவித பலனும் இல்லாத வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் ரூ. 5 லட்சம் வரை வாங்குவோருக்கு 10 சதவீத வரி விதிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை பெறுவோருக்கு 20 சதவீதமும், 8 லட்சத்திற்கு மேல் வாங்குவோருக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இது தற்போது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ரூ.2 lakh - ரூ.5 lakh: 10%
ரூ.5 lakh - ரூ.10 lakh: 20%
ரூ.10 lakh: 30%
மூத்த குடிமகன்களுக்கு ரூ. 2.5 லட்சமாக உயரவுள்ளது. அதேபோல வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. அது தொடர்ந்து நீடிக்கும். முன்பு அரசு அறிவித்த வரைவு நேரடி வரி விகித வரைவு மசோதாவில் இதை நீக்குவதாக கூறியிருந்தது. ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது இது தொடரவுள்ளது. இதுதொடர்பான நேரடி வரி விதிப்பு மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திங்கள்கிழமை இது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு 30 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும். புதிய வரி விகிப்பு விகிதங்கள் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும். ஒட்டுமொத்த வரி விதிப்பு விகிதங்களையும் எளிமையாக்குவதும், சலுகைகளை கட்டுப்படுத்துவதுமே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். புதிய வரி விகிதத் திருத்தத்தில், ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும். அதில் மாற்றம் இல்லை என்றார்.

28.8.10
இரண்டாம் நிலை நகராட்சிக்கான வீட்டு வாடகை படி பெற்றுத்தர ஹெலன் டேவிட்சன் MP அவர்களுக்கு கோரிக்கை
பெறுநர்
உயர்திரு. J. ஹெலன் டேவிட்சன் MP அவர்கள்,
கன்னியாகுமரி பாராளுமன்றத்தொகுதி,
நாகர்கோவில்.
பொருள்: படிகள் - வீட்டுவாடகைபடி - குழித்துறை நகராட்சி மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு உயர்வு செய்யப்பட்டது - இரண்டாம் நிலைக்கான வீட்டு வாடகை படி கோருதல் சார்பு.
மதிப்பிற்குரிய ஐயா,
அரசாணை (நிலை) எண். 311 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை நாள். 26.12.1997- படி குழித்துறை நகராட்சி மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வினியோகம் துறை அரசாணை எண் எம்.எஸ்.எண். 238 நாள் 02.12.2008இன் படி Classification order வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் செயல்முறைகள் B3 - 7484/ 2010 நாள் 22.07.2010படி வீட்டு வாடகை படி உயர்த்தி உத்தரவிடப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவரின் செயல்முறைகள் B3/7884/2010 நாள் 12.08.2010 படி வீட்டு வாடகை படி மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஆசிரியர்களின் உறைவிட பிரச்சனை என்பதால் மிக விரைவில் வீட்டுவாடகை படி உயர்வு அமுல்படுத்த உரிய உத்தரவு பெற்றுத்தரும்படி ஆட்சித்தலைவரின் செயல் முறை உத்தரவுக்கு நிதித்துறையின் இசைவு பெற்று தரும்படியும் அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி வணக்கம்.
(ஒப்பம்)
மாவட்ட நிர்வாகிகள்.
.
நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு வேண்டுகோள்
பெறுநர்
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்,
முதன்மை கல்வி அலுவலகம்,
நாகர்கோவில்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் கீழ்காணும் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தரும்படி வேண்டுகிறோம்.
1. 1990-91, 1991-1992ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதிய நிர்ணயம் செய்ய அரசாணை (எண். 336 , ப.க.து. (எம் - 1) நாள் 30.12.2009) பிறப்பிக்கப்பட்டது. அரசாணை மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால் குமரி மாவட்டத்தில் உயர் ,மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிலுவை ஊதியம் பெற கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.
2. மாணவர் நலன் கருத்தில் கொண்டு 01.08.2010 மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்யும் போது குமரி மாவட்டத்தில் முன் காலங்களில் அமுல்படுத்தியது போன்று வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் அனுமதிக்கும்படி வேண்டுகிறோம்.
3. மாணவர் நலன் கருத்தில் கொண்டு மலையாளம் சிறுபான்மை மொழி ஆசிரியர்களுக்கு பணியிட நிர்ணயம் செய்யும்போது G.O. Ms. 341 நாள் : 14.02.1961 படி பாதுகாக்கப்பட்ட சிறுபான்மை மொழி பள்ளிகளுக்கு மாநில அரசு வகுத்துள்ள சிறப்பு விதிமுறைகள் படி வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் பணியிட நிர்ணயம் செய்திட வேண்டுகிறோம்.
4. படைப்பாற்றல் கல்வி முறையில் 6, 7, 8 வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் மலையாள வழி மாணவர் பயன்படும் வகையில் SOURCE BOOK விரைவில் வழங்கும்படி வேண்டுகிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன்.
நன்றி, வணக்கம்.
(ஒப்பம்)
மாவட்ட நிர்வாகிகள்.
.
.
22.8.10
'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம் செல்லாது: தமிழக அரசு உத்தரவு
திறந்தநிலை பல்கலைக்கழக பட்டச் சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. பள்ளிப் படிப்பை முடிக்காமல் நேரடியாக பெறும் பட்டங்கள் அரசுப் பணிக்கு செல்லாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிப் படிப்பு அதாவது பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்காமலேயே திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெறும் முறை உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் படித்து எம்.ஏ., வரை பட்டம் பெறலாம்.
10-ம் வகுப்பு வரை கூட எட்டாதவர்கள் அரசுப் பணிகளில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று விடுகின்றனர். பணியில் சேர்ந்ததும் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்று பதவி உயர்வுக்கு முயற்சிக்கின்றனர். இந்த நிலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப் பணிக்கு எடுக்கக் கூடாது' எனக் கூறியது.
இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிரொலித்தது.
தமிழக அரசின் நிலை என்ன? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது.
இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தவரை பிளஸ் டூ படிப்புக்கு இணையாகக் கருதலாமா என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழக அரசிடம் ஒரு கருத்தைக் கேட்டது. அப்படிக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இந்தப் பிரச்னையில் மட்டுமே அரசு தனது நிலையைத் தெரிவித்தது என்றும், ஒட்டு மொத்தமாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பிரச்னையில் அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் அப்போது தெரிவித்தனர்.
திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா, இல்லையா என்ற குழப்பங்கள் தொடர்ந்து வந்தன. இந்தச் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, "திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டம் அறிவை வளர்ப்பதற்கு மட்டும்தான்' எனத் தெரிவித்திருந்தார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடிதம்: இது ஒருபுறமிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எந்தெந்தப் பட்டங்களுக்கு இணையானது என்பதை முடிவு செய்யவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும் அது. இந்தக் கூட்டத்தில், இளங்கலைப் பட்டங்களைப் படிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழங்கள் மூலம் நேரடியாக எம்.ஏ. போன்ற முதுகலைப் பட்டங்களைப் படித்தால் அதை அரசுப் பணிகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
அரசின் நிலை அறிவிப்பு: இந்தக் கருத்துருவை தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைத்தது. இதை தீவிரமாக ஆராய்ந்த அரசு, பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் கே.என்.வெங்கடரமணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
175 பேருக்கு பணி கிடையாது...அரசின் உத்தரவால், குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற 175 பேருக்கு பணி கிடைக்காது. அவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர். அரசின் உத்தரவு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தலைமைச் செயலக ஊழியர்களில் சிலர் வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த வாரத்தில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து முறையிட அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நன்றி:
தலைப்புகள்:
அரசாணைகள்,
அறிவிப்புகள்,
நாளிதழ் செய்திகள்
14.8.10
தமிழ்நாடு அரசு விடுப்பு விதிகள்
10 நாட்கள் ஈடுசெய் விடுப்பு - அரசு அனுமதி
உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் ஓர் ஆண்டில் படைப்பாற்றல் கல்வி பயிற்சி பெறும் 10 நாட்களை ஈடுசெய் விடுப்பாக அனுமதித்து அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.
G.O. No: 128 Dt 07/05/2010
G.O. No: 128 Dt 07/05/2010
13.8.10
கையெழுத்து இல்லாமல் சம்பளம் பெறலாம்
மாநில அரசு ஊழியர்கள் சம்பளப் பட்டியலில் கையெழுத்துப் போடாமல் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் குழப்பங்கள் உருவாகக் கூடும் என அரசு ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதித் தேதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த விவரங்கள் பட்டியலாகத் தயாரிக்கப்படும். ஊழியர்களின் சம்பளப் பட்டியலை அரசுத் துறைகள் மற்றும் பள்ளிகளின் தலைவர்கள் தயாரித்து கருவூலத் துறைக்கு அனுப்பி வைப்பர். கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படும். சம்பளம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை அதற்கான படிவத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அரசு ஊழியர்கள் கையெழுத்திட்டு வந்தனர்.
புதிய உத்தரவு: இப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் மூலம் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. அனைவரும் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சம்பளத்தை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுப்படி, ஸ்டாம்ப் ஒட்டி படிவத்தில் கையெழுத்துப் போடத் தேவையில்லை எனவும், ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்றுக் கொண்டதற்கான விவரங்கள், எவ்வளவு சம்பளம் போடப்பட்டது என்பது போன்ற தகவல்களை கருவூலத் துறையிடம் வழங்கும் பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. ஆனால், இந்த உத்தரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டக் கருவூலங்களில் பின்பற்றப்படவில்லை என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சம்பளப் பட்டியல் இல்லை: இதுகுறித்து, அவர்கள் கூறியது: சம்பளப் பட்டியலை கருவூலத் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு கூறுகிறது. ஆனால், இந்தப் பட்டியலைத் தருவதற்கு கருவூலத் துறை மறுக்கிறது. மாவட்டக் கருவூலங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியலைத் தனியாக தயாரித்து வழங்க முடி யாது என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டது என்கிற விவரம் பட்டியல் கிடைத்தால்தான் தெரியும். ஆனால், அதைத் தர கருவூலத் துறை மறுக்கிறது என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
குழப்பம் எழ வாய்ப்பு: பயணப்படி போன்ற படிகளை வங்கி மூலம் எடுக்கும்போது சில சமயம் ஏற்கெனவே உள்ள சம்பளப் பணத்துடன் அது சேர வாய்ப்பு இருக்கிறது. இதனால், எவ்வளவு பணம் பயணப்படியாக வழங்கப்பட்டது என்கிற விவரம் தெரியாமல் போகலாம் என்று ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால், குழப்பங்கள் எழுவதோடு, கருவூலத் துறை ஊழியர்கள் செய்யும் தவறுகளும் மறைக்கப்பட்டு விடும் என்கின்றனர் அரசு ஊழியர்கள். எனவே, சம்பளப் பட்டியலை கருவூலத் துறை வழங்குவதற்கு அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்பு.
அரசாணை எண்: 175 நாள்: 18-06-2010

7.8.10
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்க...
-
1. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு 2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம் 3. ஸ்கீமா...