இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விபரம் பள்ளிக் கல்வி இணையதளத்தில் உள்ளது.
இங்கே கிளிக் செய்க.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
16.5.10
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு
2010-2011-ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் இதர வகை ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு இம்மாதம் 18,19-ம் தேதிகளில் நடக்கவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்ளான மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 18) காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடக்கவுள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு மே 19-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடக்கவுள்ளது.
இதேபோல, முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு மே 18-ம் தேதி காலை 10 மணிக்கும், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மே 19-ம் தேதி காலை 10 மணிக்கும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
பணியிட காலியிட விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த ஆணையில் பணிநிரவல் மூலமாக பிற பள்ளிகளுக்குச் சென்றவர்கள் முதல் வகை முன்னுரிமை வரிசையில் ஆறாவதாக வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் தம்பதி இருவரும் பணிபுரிபவர்கள் என்ற தகுதியின் பேரில் மாறுதல் பெற்றவர்களின் மாறுதல் கோரிக்கைகள் பணியிட முன்னுரிமை அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்.
அஞ்சல்வழிக் கல்வியில் பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுதும் ஆசிரியர்கள் மற்றும் தவிர்க்க முடியாத காணங்களால் வர இயலாத ஆசிரியர்களுக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உரிய ஆதாரத்துடன் அனுப்பும் நபர் கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர்.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மாறுதல் பெறும் ஆசிரியர்கள் அனைவரும் ஜூலை 31 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆகஸ்டு 2-ம் தேதிதான் புதிய பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
அடுத்த கல்வியாண்டின் கலந்தாய்வின்போது ஓராண்டு பணி முடித்தவர்கள் என இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
நன்றி:
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
ஆசிரியர் இடமாறுதல்,
நாளிதழ் செய்திகள்
12.5.10
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந் தேதிகளில் நடக்கிறது
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தமிழா சிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு 18, 19 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
அரசு, நகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல் 18-ந்தேதி முற்பகல்) அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) பிற்பகல் (மதியம் 2 மணி) அளவில் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 19-ந்தேதி காலை 10 மணிக்கும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) மதியம் 2 மணியளவிலும் எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் அந்தந்த மாவட்டங்களில் 18-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் 19-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்டத்தில் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
மாவட்டங்களில் கலந்தாய்வு நடக்கும் இடங்கள் வருமாறு:-
கோவை-சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
கடலூர்-அரசு மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம்,
தருமபுரி- அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திண்டுக்கல்-அரசு ஆண்கள்மேல் நிலைப்பள்ளி,
ஈரோடு- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
காஞ்சீபுரம்-பி.எஸ். எஸ். நகராட்சி மேல் நிலைப்பள்ளி,
கரூர்-முதன்மை கல்வி அலுவலக வளாகம்,
கிருஷ்ணகிரி-தூய அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி,
மதுரை- ஓ.சி.பி. எம். அரசு மேல்நிலைப்பள்ளி,
நாகப்பட்டினம்-நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி,
நாகர்கோவில்- எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி,
நாமக்கல்-அரசு மேல் நிலைப்பள்ளி (தெற்கு),
நீலகிரி- பெத்தலேகம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
பெரம்பலூர்-தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி,
புதுக்கோட்டை-ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி,
ராமநாதபுரம்-சையது அம்மான் மேல்நிலைப் பள்ளி,
சேலம்-சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,
சிவ கங்கை-மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி,
தஞ்சாவூர்-அரசர் மேல் நிலைப்பள்ளி,
தேனி- என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருச்சி-அரசு சையது முர்துஸா மேல் நிலைப்பள்ளி,
திருநெல் வேலி-புனித ஜான் மேல் நிலைப்பள்ளி,
திருவள்ளூர்-எஸ்.ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர்,
திருவாரூர்-ஜி.ஆர்.எம். மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருவண்ணாமலை- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி,
தூத்துக்குடி- முதன்மை கல்வி அலுவலக வளாகம்,
வேலூர்- ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி,
விழுப்புரம்-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
விருதுநகர்-தங்கம்மாள் பெரியசாமி நகரவை மேல் நிலைப்பள்ளி,
திருப்பூர்-ஜீவா பாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி,
அரியலூர்-அரசு மேல் நிலைப்பள்ளி,
சென்னை- அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
காலிப்பணியிடங்கள் 15-ந்தேதி பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
நன்றி :
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED: 08/10/2010 CORAM THE HONOURABLE MR. JUSTICE K. CHANDRU W.P.(MD)NO.9631 of 2010 an...
-
Std07-SocSci-TM-2
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ் நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை. இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
Std08-Maths-TM-5
-
Demand - School Education - Minister's Announcement
-
Circular Dated 02 Jul 2012
-
Std07-SocSci-TM-1