தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.5.10

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந் தேதிகளில் நடக்கிறது

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தமிழா சிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு 18, 19 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
 
அரசு, நகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல் 18-ந்தேதி முற்பகல்) அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) பிற்பகல் (மதியம் 2 மணி) அளவில் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
 
அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 19-ந்தேதி காலை 10 மணிக்கும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) மதியம் 2 மணியளவிலும் எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. 
 
முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் அந்தந்த மாவட்டங்களில் 18-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
 
முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் 19-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்டத்தில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. 
 
மாவட்டங்களில் கலந்தாய்வு நடக்கும் இடங்கள் வருமாறு:-
 
கோவை-சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 
 
கடலூர்-அரசு மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம், 
 
தருமபுரி- அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 
 
திண்டுக்கல்-அரசு ஆண்கள்மேல் நிலைப்பள்ளி, 
 
ஈரோடு- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. 
 
காஞ்சீபுரம்-பி.எஸ். எஸ். நகராட்சி மேல் நிலைப்பள்ளி, 
 
கரூர்-முதன்மை கல்வி அலுவலக வளாகம், 
 
கிருஷ்ணகிரி-தூய அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி, 
 
மதுரை- ஓ.சி.பி. எம். அரசு மேல்நிலைப்பள்ளி, 
 
நாகப்பட்டினம்-நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி,
 
நாகர்கோவில்- எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, 
 
நாமக்கல்-அரசு மேல் நிலைப்பள்ளி (தெற்கு), 
 
நீலகிரி- பெத்தலேகம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, 
 
பெரம்பலூர்-தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, 
 
புதுக்கோட்டை-ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, 
 
ராமநாதபுரம்-சையது அம்மான் மேல்நிலைப் பள்ளி, 
 
சேலம்-சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, 
 
சிவ கங்கை-மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, 
 
தஞ்சாவூர்-அரசர் மேல் நிலைப்பள்ளி, 
 
தேனி- என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 
 
திருச்சி-அரசு சையது முர்துஸா மேல் நிலைப்பள்ளி, 
 
திருநெல் வேலி-புனித ஜான் மேல் நிலைப்பள்ளி, 
 
திருவள்ளூர்-எஸ்.ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர், 
 
திருவாரூர்-ஜி.ஆர்.எம். மகளிர் மேல்நிலைப்பள்ளி, 
 
திருவண்ணாமலை- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, 
 
தூத்துக்குடி- முதன்மை கல்வி அலுவலக வளாகம், 
 
வேலூர்- ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, 
 
விழுப்புரம்-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 
 
விருதுநகர்-தங்கம்மாள் பெரியசாமி நகரவை மேல் நிலைப்பள்ளி, 
 
திருப்பூர்-ஜீவா பாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, 
 
அரியலூர்-அரசு மேல் நிலைப்பள்ளி, 
 
சென்னை- அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
 
காலிப்பணியிடங்கள் 15-ந்தேதி பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
  
நன்றி :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்