2010-2011-ம்  கல்வியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்  பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் இதர வகை  ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு இம்மாதம் 18,19-ம்  தேதிகளில் நடக்கவுள்ளது.
  இது தொடர்பாக மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்ட  செய்திக் குறிப்பு:  
அரசு மேல்நிலைப் பள்ளித்  தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள்ளான மாறுதல்  கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 18) காலை 10 மணிக்கு சென்னை  அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அன்று பிற்பகல்  2 மணிக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும்  நடக்கவுள்ளது.  
அரசு உயர்நிலைப் பள்ளித்  தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு  மே 19-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர்  மேல்நிலைப் பள்ளியிலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு  மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடக்கவுள்ளது.   
இதேபோல, முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள்,  பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை  ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி  ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு மே 18-ம் தேதி  காலை 10 மணிக்கும், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மே  19-ம் தேதி காலை 10 மணிக்கும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு  மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.  
பணியிட காலியிட  விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.   
இந்த ஆணையில் பணிநிரவல் மூலமாக பிற பள்ளிகளுக்குச் சென்றவர்கள் முதல் வகை முன்னுரிமை வரிசையில் ஆறாவதாக வைக்கப்பட்டுள்ளனர். 
கடந்த ஆண்டில் தம்பதி இருவரும் பணிபுரிபவர்கள் என்ற தகுதியின் பேரில் மாறுதல் பெற்றவர்களின் மாறுதல் கோரிக்கைகள் பணியிட முன்னுரிமை அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும். 
அஞ்சல்வழிக் கல்வியில் பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுதும் ஆசிரியர்கள் மற்றும் தவிர்க்க முடியாத காணங்களால் வர இயலாத ஆசிரியர்களுக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உரிய ஆதாரத்துடன் அனுப்பும் நபர் கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர். 
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மாறுதல் பெறும் ஆசிரியர்கள் அனைவரும் ஜூலை 31 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆகஸ்டு 2-ம் தேதிதான் புதிய பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள். 
அடுத்த கல்வியாண்டின் கலந்தாய்வின்போது ஓராண்டு பணி முடித்தவர்கள் என இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக