பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்ட செயலாளர் சி.ராஜன் வரவேற்று பேசினார். கூட்டமைப்பின் மாநில தொடர்பாளர் தம்பித்துரை, நிதி காப்பாளர்கள் நாராயணசாமி, சங்கரபெருமாள் உள்பட பலர் பேசினார்கள். சாமி சத்தியமூர்த்தி, வேதநாயகம், புண்ணியகோட்டி, அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
* மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளை 100 சதவீதம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும்.
* 1-6-2006 முதல் முறையான நியமனத்தில் கொண்டுவரப்பட்ட தொகுப்பு ஊதிய ஆசிரியர்களை அவர்களின் பணியேற்ற காலம் முதல் முறையான நியமனத்தில் கொண்டு வரவேண்டும்.
* 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.
* ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வியை மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.