தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.1.17

நன்றி... நன்றி... நன்றி...

தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ் பாடத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய தமிழக அரசுக்கும் பள்ளிக்கல்வி துறைக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

பதவி உயர்வு பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

இவண்,
அ.சங்கர்
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

.

குறுவள மைய(CRC) பயிற்சி நாள் மாற்றம்

குறுவள மைய(CRC) பயிற்சி நாள் மாற்றப்பட்டுள்ளது. 6, 7, 8 வகுப்பு ஆசிரியர்களுக்கு 21-01-2017 அன்றும் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு 28-01-2017 அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் "ஜாக்டோ - ஜியோ"

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

பள்ளி கல்வி, தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' என்ற அமைப்பும், அரசு துறையின் பல ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜியோ' என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன.

இரு அமைப்புக்களும் இணைந்த கூட்டமைப்பு, 2003ல் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பிரதிநிதிகள் கூட்டம், சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

வரும் பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகளை ஏற்று, அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.
.

"ஜாக்டோ கூட்டமைப்பு " கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்

10/01/17 சென்னையில் நடைப்பெற்ற "ஜாக்டோ கூட்டமைப்பு " கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்:


1. இறந்த நமது தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

2. தமிழக விவசாயிகளின் வரட்சியால் ஏற்படும் இறப்பை தடுக்கும் விதமாக ஆசிரியர்களின் 1 நாள் சம்பளத்தை வழங்குவது.

3. 7ஆவது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

4. NEET-தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

5. புதிய கல்விக்கொள்கையில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும்.

6. புதிய CPS முறையை நீக்கிவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்டுத்த வேண்டும்.

7. கல்வி அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கை கண்டிப்பது.

8. "ஜாக்டோ- ஜீயோ"வுடன் இணைந்து10/01/17 முதல் செயல்படுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
.

பொங்கல் பரிசு - அரசாணை



10.1.17

12.01.2017 அன்று இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு

12.01.2017 வியாழக்கிழமை அன்று தற்போது காலியாக உள்ள 58 பட்டதாரியாசிரியர் (தமிழ்) காலிப்பணியிடங்களுக்கு 01.01.2016 நிலவரப்படி இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர் பணி நிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இருந்து வரிசை எண் 302 ல் இருந்து 616 வரை உள்ள நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்