- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
19.12.14
18.12.14
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
DSE - SGT TO BT PANEL DETAILS CALLED REG PROC.pdf
மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் இல்லை
மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளன
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய கால அவகாசம் நீட்டிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேரும்போது முகப்பு (இண்டக்ஸ்) எண் வழங்கப்படும்.
தமிழ்நாடு தரவு மையத்தின் (டேட்டா செண்டர்) இணையதளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணை ஊழியர்கள் பெற்றுள்ளார்களா என்பதை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். உறுதி செய்யப்பட்டதை, கணக்குத் துறை மற்றும் கருவூல அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும்.
முகப்பு எண் வழங்கப்படாமல் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் முகப்பு எண் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான பிப்ரவரி மாதம் வரையில் காலக்கெடு தற்போது நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
முகப்பு எண் பெறாத மற்றும் அதற்கு விண்ணப்பிக்காதவர்களின் சம்பள பட்டியல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, பிப்ரவரிக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை எண்: 837 நாள்: 24-11-2014
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்க...
-
1. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு 2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம் 3. ஸ்கீமா...