தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.12.14

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் இல்லை


மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்