தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.9.10

ஆசிரியர்களின் "தனிநபர் தகவல்கள்" தொகுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தனிநபர் தகவல்கள் தொகுப்பு பணியை இந்தக் கல்வியாண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் (மின் ஆளுமை) ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக நிர்வகிக்கும் வகையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களும், திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



முதலாவதாக திருநெல்வேலி மண்டலத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர்) இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின்போது நிருபர்களுக்கு ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:


இந்த தனிநபர் தகவல்கள் தொகுப்பு பணியின் முதல் கட்டமாக தொழில்கல்வி ஆசிரியர்களின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அனைத்து மண்டலங்களிலும் தொழில்கல்வி ஆசிரியர்களின் தனிநபர் தகவல்கள் தொகுக்கப்பட்ட பின்னர் அடுத்து பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், ஊழியர்கள் என விவரங்கள் தொகுக்கப்படும். ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கையில் தொழில்கல்வி ஆசிரியர்கள் குறைவாக இருப்பதால் அந்தப் பணி முதலாவது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.



தனிநபர் தகவல்கள் தொகுப்பில் ஆசிரியரின் அடிப்படை விவரம், பணி நியமனம், வாரிசு தகவல், விடுப்புத் தகவல், சிறப்புத் தகுதிகள், துறைசார் விவரங்கள் என அனைத்து விவரங்களும் அடங்கும்.



இந்த விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு பள்ளிக்கும் அளிக்கப்படும் குறியீட்டின் அடிப்படையில் கணினியில் பதிவு செய்யப்படும். மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே உள்ள குறியீடு (இலவச சைக்கிள் வழங்குவதற்காக அளிக்கப்பட்டது) பயன்படுத்தப்படும். உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனி குறியீடு அளிக்கப்படும்.



தொழில்கல்வி ஆசிரியர்கள் சுமார் 7,000 பேரின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணியை இம் மாதம் 25ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 2.5 லட்சம் பேரின் தகவல் தொகுப்பு பணியானது இந்தக் கல்வியாண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.



உள்கட்டமைப்பு வசதிகள் பதிவு: 


அடுத்தகட்டமாக ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.


பேட்டியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேரி ஜெசிரோச், கண்காணிப்பாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்