தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.9.10

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 % வழங்க பரிந்துரை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டி விகிதம் குறித்து செப்டம்பர் 15-ல் முடிவு செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக முடிவெடுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இயக்குநர்களின் கூட்டம் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அக்கூட்டம் செப்டம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி (எஃப்.ஐ.சி.) 8.5 சதவீதம் வட்டி வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையே ஏற்கப்படும் என்பதால் 2010-11-ம் நிதியாண்டுக்கும் 8.5 சதவீதம் வட்டியே அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

2005-06 முதல் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் 3 ஆண்டுகள் 9.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 4.71 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்