தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.7.10

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நீடிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கியது. பள்ளி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 15ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும் பல பகுதிகளில் பணிகள் முடிவடையவில்லை. எனவே விடுபட்ட பகுதிகளில் கணக்கெடுக்கவும், கூடுதல் குடும்பம் இருக்கும் பகுதியில் பணியாற்றவும், இப்பணி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

1.7.10

தமிழக சட்ட மேலவையில் ஆசிரியர்களுக்கான தொகுதிகள் ஏழு

தமிழக சட்ட மேலவையில் 78 உறுப்பினர்கள் இடம் பெறுவர் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் மேலவை அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மொத்தமுள்ள 78 பேரில் 26 உறுப்பினர்களை எம்எல்ஏக்களும், 26 உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், 7 பேரை பட்டதாரிகளும், 7 பேரை ஆசிரியர்களும் தேர்ந்தெடுப்பார்கள்.

மீதியுள்ள 12 பேர் பல துறைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்களுக்கான தொகுதிகள், பட்டதாரி தொகுதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குரிய தொகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்து அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளை மாவட்டவாரியாகத்தான் அமைக்க முடியும்.

தமிழ்நாட்டில் மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை அறிவதற்காக தமிழக தேர்தல் துறை கூடுதல் செயலாளர் சந்தானகிருஷ்ணன் சமீபத்தில் ஆந்திரா சென்று வந்தார். அவர் அங்கு ஓய்வு பெற்ற மூத்த தேர்தல் அதிகாரி சி.ஆர்.பிரம்மம் என்பவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார். பிரம்மம் அவர்களையும் இந்தத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள எண்ணி உள்ளோம்.

சட்ட மேலவை அமைக்கும் விஷயத்தில் ஆந்திரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தமிழகத்திலும் பின்பற்றப்படும்.

மேல்வைத் தேர்தலை நடத்த பல்வேறு விதமான பணிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக வாக்களிக்கும் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். அது தொடர்பான புள்ளி விவரங்கள், பல்கலைக்கழகங்கள், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்படும்.

இத்தேர்தலுக்காக பட்டதாரிகளும், ஆசிரியர்களும் தாமாகவே முன்வந்துதான் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொது வாக்காளர் பட்டியலை போல இந்த பட்டியலை தயாரிக்க முடியாது. எனவே, இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஆந்திராவில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றவர்களும், பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க ஓட்டு ப்போடலாம் என்ற விதி உள்ளது. தமிழ்நாட்டில் அது போன்று அனுமதிக்க முடியுமா என்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் மேல்வைத் தேர்தலை நடத்துவது புதிய அனுபவம். எனவே அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியம்.

தேர்தல் அதிகாரி, உதவித் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டியுள்ளது. இவை பற்றியெல்லாம் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆந்திராவில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி புதிய மேலவை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கி 2007 மார்ச் மாதம்தான் நிறைவு பெற்றுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் எப்போது இந்தத் தேர்தல் நடக்கும் என்று இப்போதே சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பக் கட்ட தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன என்றார் நரேஷ் குப்தா.

.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்