இடைநிலை ஆசிரியர் திரு. செல்வராஜ் முறைகேடாக மாறுதல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து 25-03-2010 மாலை 5மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
த.இ.ஆ.ச. மாவட்டத் தலைவர் திரு.சேம் பிறின்ஸ் குமார் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் திரு. பாஸி முன்னிலை வகித்தார்.
திரு. பூதலிங்கம்பிள்ளை ஆர்பாட்டத்தைத் துவக்கிவைத்தார்.
தோழமைச் சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் சிம்சன், பிரிட்டோ, நாகராஜன், சேவியர், இராதாகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், விக்ரமன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.
த.இ.ஆ.ச. மாநில அமைப்புச் செயலாளர் திரு. இசக்கியப்பன் ஆர்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
திரு. திவாகரன் பிள்ளை நன்றி கூறினார்.
கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
.