- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
11.12.19
10.12.19
தென்காசி மாவட்டத்தில் தஇஆச புதிய கிளை தொடக்கம்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தென்காசி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 08/12/ 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக மதுரை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநிலப் பொதுச்செயலாளர் அ. சங்கர் கலந்து கொண்டார்.
கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக செல்வசுந்தரராஜ், மாவட்டச் செயலாளராக கணேசன், மாவட்ட பொருளாளராக மதியழகன், அமைப்புச் செயலாளராக சுதாகர், தலைமையிடச் செயலாளராக நந்தகுமார், துணைத்தலைவர்களாக மனோகர் ராஜதுரை, பழனியம்மாள், இணைச்செயலாளர்களாக ஜாண்சன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.
9.12.19
தஇஆச தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக தஇஆச மதுரை மாவட்ட தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநில துணை பொதுச்செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் ரெ. ஹெர்பர்ட் ராஜா சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பொதுச்செயலாளர் அ. சங்கர் அவர்கள் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் எதிர்கால திட்டம் பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதையும் விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக ஞானதுரை, மாவட்டச் செயலாளராக செல்வின் ஜூலியஸ், மாவட்ட பொருளாளராக சரவணகுமார் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக உமாமகேஸ்வரி, அமைப்புச் செயலாளராக மணிமேகலை, தலைமையிடச் செயலாளராக சகிலா சலாமத், துணைத்தலைவர்களாக யோனா செல்வின், பிரேமா, இணைச்செயலாளர்களாக வசிகர் ஜெயக்குமார், அகிலா ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
1. அரசு /அரசு உதவி பெறும் நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக 2006 முதல் உட்படுத்த வேண்டும்.
2. நான்கு ஆண்டு காலமாக அரசு, உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. உடனே இந்த ஆண்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
3. 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
4. 10, 11 ,12 ஆகிய அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் நலன் கருதி உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுப்பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் செல்வின் ஜுலியஸ் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஞானதுரை ஏற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் சரவண குமார் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED: 08/10/2010 CORAM THE HONOURABLE MR. JUSTICE K. CHANDRU W.P.(MD)NO.9631 of 2010 an...
-
Std07-SocSci-TM-2
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ் நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை. இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
Std08-Maths-TM-5
-
Demand - School Education - Minister's Announcement
-
Circular Dated 02 Jul 2012
-
Std07-SocSci-TM-1