- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
30.6.18
தஇஆச மாநிலப் பொதுக் குழுக் கூட்ட முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இன்று (30-06-2018) நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மதலை முத்து தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் சாய் லதா ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் தியாகராஜன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், இதழ் அறிக்கையை தாக்கல் செய்தார்.
தஇஆச நிறுவனரும் மேனாள் பொதுச் செயலாளருமான திரு. சுப்ரமணியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா. மோகனா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
மாநில இணைச் செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
2. இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட பதவியுயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும்.
3. தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.
5. அரசாணை 56-இன் படி அமைக்கப்பட்ட பணியாளர் பகுப்பாய்வு குழுவினை ரத்து செய்ய வேண்டும்.
6. அரசாணை எண். 100 & 101 மூலம் அரசுப் பள்ளிகளை மூடுவதை ரத்து செய்ய வேண்டும்.
7. ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
8. ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர் மட்டக் குழு உறுப்பினர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
9. 1 முதல் 7 வரையுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை 5ஆம் நாள் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்விச் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது, ஜூலை 24-ஆம் நாள் மண்டல அளவில் 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 11-இல் சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்துவது.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புகள்:
கோரிக்கைகள்,
தீர்மானங்கள்,
நாளிதழ் செய்திகள்,
பொதுக்குழு
21.6.18
18.6.18
14.6.18
13.6.18
ஜாக்டோ - ஜியோவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
மூன்று நாட்கள் கட்டுக்கோப்புடனும், உணர்வுபூர்வமாகவும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களை அழைத்து பேசாத முதல்வரை நேரில் சந்திப்பது என்று உயர்மட்டக்குழு முடிவெடுத்ததின் அடிப்படையில் இன்று மாலை கோட்டை நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
சென்னை போலிஸ் கமிஷனரிடம் அனைவரையும் ரிமாண்ட் செய்ய சொல்லி வாதாடியும், ரிமாண்ட் செய்ய இயலாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடும் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன் சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்தும் ஆதரவளித்தன.
எனவே அடுத்த கட்ட இயக்கத்தை வலுவாக எடுத்து செல்லும் பொருட்டு மாநில அளவிலான காலவரையற்ற உண்ணாவிரத்தை இந்நிலையில் முடித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களையும் இத்துடன் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

அறிவிப்புகள்,
போராட்டங்கள்,
ஜாக்டோ-ஜியோ
மூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது
சென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் மயக்கமடைந்தனர்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் 11 - 06-2018 அன்று தொடங்கியது. போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்திலேயே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுபிற்பகலில் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் டெய்சி, திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மோசஸ் என்பவரும் மயக்கமடைந்தார். அவரும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில் ஜாக்டோ-ஜியோவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்றார். போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முக்கிய தகவல்கள் குறித்து விவாதம் நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ``புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். இந்தப் போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட 214 பேர் பங்கேற்றுள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

12.6.18
ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்
ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் டி. டெய்சி அவர்கள் சர்க்கரை அளவின் அதீத மாற்றத்தால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் தலைவரும், இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும், ஜாக்டோ-ஜியோவின் நிதிக் காப்பாளருமான தோழர். மோசஸ் அவர்கள் மயக்கமுற்றார். (தோழர் சில மாதங்களுக்கு முன்னர் தான் இருதய அடைப்பு தொடர்பாக ஆஞ்சியோ சிகிச்சை செய்திருந்தார். இன்று அவரது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.) இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதற்கட்ட சிகிச்சையை முடித்த கையோடு தோழர் டெய்சி அவர்களும், தோழர் மோசஸ் அவர்களும் *மீண்டும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கே திரும்பி, தங்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. மாவட்டங்களில் மாலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 7வது ஊதியக் குழு அறிவித்தபிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். மேலும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும், தொகுப்பு ஊதியத்தின் கீழ் சம்பளம் பெற்று வருவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தான் பிரதானமாக முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அதனால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அரசும் ஒப்புக் கொண்டது. ஆனால் இதுவரை அந்த பரிந்துரையை அரசு வெளியிடவில்லை. ஆனால் அந்த குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 8ம் தேதி சென்னையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜூன் 11ம் தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
நேற்று சென்னையில் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் என சுமார் 500 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதுதவிர அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

10.6.18
காணொளி: 6 ஆம் வகுப்பு - தமிழ் - தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல்
8.6.18
ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம்: ஊடக அறிக்கை வெளிபீடு
11.6.2018 Press release - JACTTO-GEO by edwin_prakash75 on Scribd
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
செய்திக் குறிப்பு,
போராட்டங்கள்,
ஜாக்டோ-ஜியோ
6.6.18
ஜூன் 11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் (மே) 8-ந் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். 11-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் ‘ஜாக்டோ- ஜியோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார் கள்.
பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் பணி நேரம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட ‘ஜாக்டோ- ஜியோ’ பொறுப்பாளர்கள் சென்னையில் உண்ணாவிரத பந்தல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.
கடந்த 4-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்திற்காக மாவட்ட அளவில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1.6.18
பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்
Dse New Transfer Application by edwin_prakash75 on Scribd
பொது மாறுதல் கலந்தாய்வு - நெறிமுறைகள் - 2018
G.O.(1D) No.403 by edwin_prakash75 on Scribd
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப...
-
பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும...
-
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
-
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...